Wednesday, September 15, 2010
விற்றமின்"டி" குறைபாடுன் ஆபத்தானது
சிறுவர்களுக்கு கை, கால் உபாதைகள் ஏற்படுவதும், விளையாட்டின் போது எலும்பு முறிவு ஏற்படுவதும் நாளாந்தம் நாங்கள் கேள்விப்படும் செய்திகள்.
இவை பெரும்பாலும் விற்றமின் "டி" சத்து குறைபாட்டினாலேயே ஏற்படுகிறது. மேலும், இக் குறைபாட்டினால் கல்சியம் சத்து உடலில் உறிஞ்சப்படாது பலருக்கு நரம்புத் தொழிற்பாடு, தசைநார் சுருக்கம், குருதி உறைதல் போன்ற அனுசேப தொழிற்பாடுகள் பாதிப்படைகின்றன.
எலும்பு என்பது " கொலஜின்" சட்டத்தில் கல்சியம் பொசுபேற்று மற்றும் கல்சியம் காபனேற்று உப்புக்கள் படிந்து வலிமையான திண்மமாக இறுகிய ஒரு பொருள். கல்சியம் கிடைக்காத வேளை எலும்பில் வலி ஏற்படுகிறது. மேலும் அது மிருதுவாகி இலகுவில் உடையக் கூடியதாக மாறிவிடுகிறது. எனவே இக் குறைபாட்டை நிவர்த்தி செய்யாவிட்டால் மீளமுடியாத ஒரு நிலைமைக்குச் சென்று விடும் ஆபத்து உண்டு.
உணவில் விற்றமின் ஈ இல்லாமை, உடல் பருமன், உடலில் சூரிய ஒளிபடாமை மற்றும் சூரிய ஒளித்திரை உபயோகித்தல் ஆகியவையே இக்குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணம். தற்போது உணவுக்கு மேல் உட்கொள்வதற்கு செயற்கையாக தயாரிக்கப்பட்ட விற்றமின் ஈ2 விற்றமின் ஈ3 என இரு வகைகள் சந்தையில் விற்கப்படுகின்றன. விற்றமின் ஈ2 தாவர வர்க்கங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. விற்றமின் ஈ3 பெரும்பாலும் விலங்கு வர்க்கங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது. இவற்றின் விற்றமின் ஈ3 யே சிறந்த வீரியமுள்ளது. இருப்பினும் அது நமது உடலில் ஒழுங்கான படிமுறைகளை மீறி கடந்து செல்வதால் கண்டிப்பாக டாக்டர்களின் அறிவுறுத்தல் படியே உண்ண வேண்டும்.
எமது உடலில் சூரிய ஒளிபடும் போது நமது உடலே இந்த விற்றமினை தயாரிக்கிறது. எனவே காலை வேளையில் வெயிலில் ஒரு மணித்தியாலம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் இக்குறைபாடு ஓரளவு தீரும் மேலும் ஆகாரத்தில் மீன், காளான் உணவுகளைச் சேர்த்தும், கல்சியம் குறைபாட்டை தவிர்க்க பால், சீஸ் ஆகியவற்றை உட் கொண்டும் வந்தால் ஆரோக்கிமாக வாழலாம்.
Labels:
விற்றமின்"டி"