Friday, September 16, 2011
Face book புதிதாய் அறிமுகப்படுத்தியுள்ள அற்புத வசதி
உலகில் பல்லாயிரக்கணக்கான அங்கத்தவர்களைக்கொண்ட பொழுதுபோக்கு இணையத்தளமான Face book அதன் இணையத்தளத்தில் புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
smart friends list ன் மூலம் ஒவ்வொருவரும் தமது நண்பர்களை வெவ்வேறாக வகைப்படுத்தி தனிப்பட்ட நண்பர்கள் அட்டவணைகளை உருவாக்குவதற்கு முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.
இதன்மூலம் Face book ல் உள்ள தமது நூற்றுக்கணக்கான நண்பர்களில் தேவையானவரை வேண்டிய நேரத்தில் இலகுவாக தேடிக்கொள்ள முடியும் எனவும் புகைப்படங்கள் மற்றும் ஏனைய தனிப்பட்ட செய்திகளை வெவ்வேறாக பகிர்ந்துகொள்ள முடியுமெனவும் Face book எதிர்பார்க்கின்றது.
இப்புதிய வசதியின் மூலம் ஒருவர் தன் விருப்பத்திற்கேற்ப பிரத்தியேக நண்பர் அட்டவணைகளை உருவாக்கியபின் அட்தெரிவுகளுக்கேட்ப வேறு நண்பர்களை இணைத்துக்கொள்வதற்கு Face book தானாகவே தேர்வுகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தமது உற்ற நண்பர்களை வேறாக வகைப்படுத்திக்கொள்வதற்கும் இதன்மூலம் முடியும். இந்த அட்டவணையில் அதிகபட்சம் 10 நண்பர்களை இணைத்துக்கொள்ளலாம்.
இப்புதிய அறிவிப்பானது இதே வசதிகளைக்கொண்ட கூகிள் பிளஸ் ற்கு போட்டியாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.
Friday, September 9, 2011
விண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு
இன்னும் சில மாதங்களில் விண்டோஸ் 8 ஓபரேட்டிங் சிஸ்டத்தின் சோதனைப் பதிப்பு வர இருக்கிறது.
இந்தத் தகவலை மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் ஸ்டீபன் சினோப்ஸ்கி புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒரு வலைமனையில் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவன சோதனைப் பதிப்புகளைப் பயன்படுத்தும் பயனாளர்கள், நிறுவனங்கள், சாப்ட்வேர் புரோகிராம் தயாரிப்பவர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள மைக்ரோசாப்ட் விரும்புவதால் அந்த வலை மனையைத் தொடங்கியுள்ளதாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தினை விண்டோஸ் 8 பதிப்பு முழுவதுமான புத்துணர்ச்சியுடன் காட்டும். நிறைய புதிய விஷயங்கள் அதில் தரப்பட்டுள்ளன. இந்த பதிப்பில் மட்டுமே காணப்படும் வசதிகள் பல இதில் அடங்கியுள்ளன.
எனவே இவற்றை அறிவிப்பு செய்திட இன்னும் சில நாட்களில் விவரங்கள் அறிவிக்கப்படும் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை இயக்க விஷயங்கள் முதல் யூசர் இன்டர்பேஸ் வரையிலான பல தகவல்கள் தரப்பட இருக்கின்றன.
இப்போதைக்கு ஒன்று மட்டும் மிகப்பலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்டத்தினை இயக்கும் கணணிகள் அனைத்தும், விண்டோஸ் 8 சிஸ்டத்தையும் இயக்க முடியும். எந்தவிதமான ஹார்ட்வேர் மேம்பாடு தேவைப்படாது.
சென்ற மே மாதத்தில் மைக்ரோசாப்ட் ஸ்டீவ் பால்மர் வரும் 2012ல் உறுதியாக விண்டோஸ் 8 வரும் எனத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் அது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதால் இந்த புதிய வலைமனையும் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
Labels:
விண்டோஸ் 8
Thursday, September 8, 2011
புதிய டியூவல் சிம் மொபைலை அறிமுகப்படுத்துகிறது பிலிப்ஸ்
பிலிப்ஸ் நிறுவனத்தின் ஆர்வம் இப்பொழுது இந்திய சந்தையின் பக்கம் திரும்பியிருக்கிறது. நுணுக்கமான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடையே நல்ல மதிப்பை பெற்றிருக்கிறது ஃபிலிப்ஸ் நிறுவனம்.
இத்தகைய வெற்றியைக்கண்ட இந்நிறுவனம் தற்போது ஸெனியம் எக்ஸ்-806 என்ற புதிய மொபைல்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த மாடல் டியூவல் சிம் வசதி கொண்டது. ரஷ்யாவிலும், யூரோப்பிலும் அதிக விற்பனையைத் கடந்து மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.
நீடித்து உழைக்கும் பேட்டரி வசதிக்காகப் பிற நாடுகளில் சிறந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இந்தியாவில் முக்கியமாக இதன் டியூவல் சிம் வசதிக்காகவே வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக வரவேற்பைப் பெரும் என்று எதிர்பார்க்கப்படுறது.
3.0 இன்ச் திரை வசதியைக் கொண்டது.240 X 400 ரிசல்யூஷனையும்,155 பிபிஐ பிக்சல் வசதியையும் பெற்றுள்ளது. 5 மெகா பிக்சல் கேமிரா வசதியையும் கொண்டுள்ளது. 2560 X 1920 பிக்சலுடன் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் எல்இடி ஃபளாஷிற்கு சப்போர்ட் செய்கிறது.
இதில் செகன்டரி கேமிரா வசதி இல்லை. இதனுடைய கேமிராவில் ஃபேஸ் டிடெக்ஷன்,ரெட் அய் ரிடெகஷன் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. எட்ஜ் தொழில் நுட்பத்துடன் 10 ஜிபிஎஸ் வசதியும் உள்ளது.2.0 வெர்ஷன் புளூடூத் மற்றும் A2DP தொழில் நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சின்க்ரோனைஸ் செய்வதற்காக மினி யூஎஸ்பி 2.0 வசதி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள மீடியாப் பிளேயர் மூலமாக எம்பி3,டபல்யூஏவி,டபல்யூஎம்ஏ,எம்பி4டபிள்யூஏவி,போன்றவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாய்ஸ் மெமோ வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த மாடலில் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. மைக்ரோஎஸ்டி வசதியின் மூலம் 8 ஜிபி வரை இதன் மெமரியை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
இதனுடைய ஸ்டேன்ட்பை டைம் 720 மமி நேரம் ஆகும்.மற்றும் 8 மணி நேரம் டாக் டைம் அளிக்கிறது.இந்த போனில் தொடர்ந்து 70 மணி நேரம் ம்யூசிக் ப்ளே செய்ய முடியும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.ஆனால் ரூ.10,000 விலையில் இந்த போன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.