Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Saturday, July 24, 2010

பிரிட்டனின் மிகப்பிரபலமான முதல் 10 மொழிகளில் தமிழும்

பிரிட்டன் தலைநகரான லண்டனில் மிகப்பிரபலமான மொழிகளில் தமிழ் மொழி முதல் 10 இடங்களுக்குள் இருக் கிறது என லண்டன் மெட்ரோ பொலிற் றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவசர உதவிகளுக்காக பொலிஸாரை அழைக்கும் முதல் 10 மொழிகளில் தமிழ் மொழியும் உள்ளடங்குகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 8 ஆயிரம் அவசர அழைப்புகளும், 12 ஆயிரம் அவசரம் சாராத அழைப்புகளும் தமிழ் மொழி பேசுபவர்கள் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த வரிசையில் உள்ள ஏனைய மொழிகளாக போலந்து, ரோமான், பஞ்சாப், போர்த்துக்கல், ஸ்பெனிஸ், துருக்கிய மொழி, சோமாலி, பிரெஞ்சு மற்றும் பெங்காளி என்பனவும் உள்ளடக்கப்படுகின்றன. இதேவேளை பிரிட்டனில் ஆங்கிலம் தவிர தமிழ் மொழியிலும் அவசர அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்றும் பொலி ஸார் அறிவித்து அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரிட்டனுக்குச் சென்ற தமிழர்களின் காரணமாகவே தமிழ்மொழி அங்கு முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது எனக் கூறப்படுகிறது.