Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Thursday, July 8, 2010

பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி

முதலில் சிறந்த பாதுகாப்பான Anti-virus உங்கள் கணிப்பொறியில் நிறுவிக்கொள்ளுங்கள் , வாரம் இருமுறை உங்கள் கணினியை scan செய்யுங்கள். விண்டோஸ் பயன்படுத்துவதை விட Linux OS (UBUNDU,SUSE,MANDRIVA) நிறுவிக்கொள்ளுங்கள் வைரஸ் பாதிப்பை பெருமளவில் தவிர்க்கலாம் அல்லது இரண்டையும்கணினியில் நிறுவி இணையதள பயன்பாட்டுக்கு Linux பயன்படுத்தலாம். பெரும்பாலான வைரஸ் கள் விண்டோசை குறிவைத்து உருவக்கபடுவதே இதற்க்கு காரணம்.Linux ஸை வைரஸ் அவ்வளவு எளிதில் பாதிக்காது. அப்படி பதித்தாலும் எளிதில் அகற்றிவிடலாம். கணினியில் Internet Explorer இருந்தாலும் கூடுதலாக ஒரு Firefox அல்லது Google crome Browser நிறுவிக்கொள்ளுங்கள் ஏனெனில் மேற்கூறிய காரணம் இதற்கும் பொருந்தும். இணையதள முகவரியை டைப் செய்யும்போது கவனமாக செய்யுங்கள் ஏனென்றால் பிரபல தளத்தின் முகவரியில் ஓரிரு எழுத்துக்கள் மட்டும் மாற்றி வைத்திருப்பார்கள் அவ்வாறு செல்லும்போது வைரஸ் பதிப்பை உண்டக்கிவிடுவார்கள். கேம்ஸ் டவுன்லோட் செய்யும்போது மிகுந்த கவனம் தேவை ,பாதுகாப்பான (Brothers soft,cnet) போன்ற இணைய தளங்களில் மட்டும் Download செய்யுங்கள் , பெரும்பாலான இணையதளங்கள் இலவசம் என்ற பெயரில் வைரஸ் இணைத்து விடுவார்கள், மேற்கூறிய தளங்களில் இவை நிகழ்வதில்லை. POP UP விளம்பரங்கள் Click here என்று வந்தால் அவற்றை கிளிக் செய்யவேண்டாம் . புது software ,games போன்றவற்றை டவுன்லோட் செய்யும் முன் அவற்றின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள் , குறிப்பாக இன்ஸ்டால் செய்யும் போது Agreement எவ்வளவு பெரியதாக இருந்தாலும் முழுவதும் படித்துவிட்டு instaal செய்யுங்கள். Community Websites செல்லும்போது மிகுந்த கவனமாக இருங்கள் தற்ப்போது அவற்றில் இருந்துதான் மிக அபாயகரமான வைரஸ்கள் வருகின்றன . இணையத்தளத்தில் Social Engineering Techniques எனப்படும் இணையதள உபயோகிப்பாளர்களின் weakness ஆபாச படங்கள், கண்கவரும் படங்கள், illegal copy of softwares,flashanimations, love ,sex,success contents போன்றவற்றை அதிகம் விரும்புவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப வைரஸ்களை உருவாக்கி அத்துடன் இணைத்து விடுகின்றனர் .இதுதான் தற்போதைய வைரஸ் பரப்பும் புதிய தொழில்நுட்பம் . இவற்றை தெரிந்து இணையத்தளத்தில் பாதுகாப்பாக கணினியை பயன்படுத்தலாம் .