Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Saturday, February 26, 2011

யாழ். பல்கலையில் பொறியியல் பீடம் விரைவில் இயங்க ஆரம்பிக்கும்

யாழ். பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் விரைவில் இயங்க ஆரம்பிக்கும். அந்தப் பீடத்தை அமைப்பதற்கான நிதியைப் பெறுவ தற்கு ஜனாதிபதி பல்வேறு நாடுகளுடன் கலந்துரையாடி வருகிறார் என்று தெரிவித்தார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ. நேற்று யாழ்ப்பாணத்தில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த அமைச்சர் கொக்குவிலில் உள்ள தொழில்நுட்பவியல் கல்லூரி வளாகத்தில் புதிதாக நிர்மானிக் கப்பட்ட கட்டடத் தொகுதியை தென்கொரியத் தூதுவருடன் இணைந்து நாடா வெட்டித் திறந்துவைத்தார். அதன் பின்னர் உரை நிகழ்த்தும்போதே பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் தெரிவித்தவை வருமாறு: யாழ்ப்பாணத்தில் இரண்டு கல்வி நிலையங்கள் இன்று திறந்துவைக் கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரி ஆகும். இந்த தொழில் நுட்பவியல் கல்லூரியின் கட்டட வேலைகள் ஆரம்பித்த 2006 ஆம் ஆண்டை நினைவுபடுத்திப் பார்க்கின்றேன். அந்த வருடத்தில் மக்களுக்கு உதவி செய்யக்கூடிய வெளிநாட்டு நிறுவனங்கள், அமைப்புகள் யாழ்ப்பாணத்தில் செயற்பட முடியாத நிலை இருந்தது. வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் மட்டுமன்றி உள்ளூர் தொண்டு நிறுவனங்களும் இங்கிருந்து வெளியேற வேண்டிய நிலைமை இருந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி வட பகுதி மக்களுக்கு உதவு மாறு பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடம் வேண் டியிருந்த போதும் அவர்கள் அதிலிருந்து பின்வாங்கிச் செல்லும் நிலைமையே இருந்தது. அவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் நிதியுதவி வழங்க முன் வந்தது தென்கொரிய அரசு மட்டும் தான். அதுமட்டுமன்றி தொழில்நுட்பவியல் கல்லூரியின் கட்ட டத்தை நிறுவ கட்டடப் பொருள்களை எடுத்து வருவதற்கும் கூட எவரும் கப்பலை வழங்க முன்வரவில்லை. நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் எடுத்த முயற்சியின் காரணமாகவே கப் பல் மூலம் அந்தப் பொருள்களை இங்கு எடுத்து வரமுடிந்தது. இவ்வாறான பயங்கர சூழ்நிலையிருந்தும் ஜனாதிபதி வட பகுதி சிறுவர்களின் கல்வியில் அக்கறை காட்டி மிக மிகக் குறு கிய காலத்தில் சர்வதேச தரத்திலான கல்லூரியை நிர்மானித்து உங்களுக்கு வழங்கியுள்ளார். இந்தக் கல்லூரியை நிர்மானிப்பதற்கு ஒத்துழைத்த அனை வருக்கும் நாம் நன்றி கூறக் கடைமைப்பட்டுள்ளோம்.