Monday, October 31, 2011
கையடக்கத்தொலைபேசிப் பாவனையாளர்களுக்கு ஒரு நற்செய்தி
உங்களது விருப்பத்திற்குரிய கையடக்கத்தொலைபேசியால் உங்களுக்குப் புற்றுநோய் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளதா?
ஆனால் தற்போது அவ்வாறு அச்சப்படத்தேவையில்லை என்ற ஆறுதலளிக்கும் ஆராய்ச்சித் தகவலொன்றினை டென்மார்க் நாட்டு விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
அதாவது கையடக்கத்தொலைபேசிகளால் புற்றுநோய் ஆபத்து இல்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பில் ஆய்வொன்றினை அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மிக விரிவான ஆய்வாக இது கருதப்படுகின்றது.
காரணம் இவ்வாய்வில் சுமார் 358,000 பேர் பங்குபற்றியிருந்தனர்.
இதன் முடிவில் கையடக்கத்தொலைபேசிக் கதிர்களால் நீண்ட காலத்தில் அல்லது குறுங்காலப்பகுதியில் புற்றுநோய் மற்றும் மூளையில் கட்டியை உண்டாக்கும் சாத்தியக்கூறுகள் குறைவு என ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
கையடக்கத் தொலைபேசிப் பாவனையானது புற்று நோய் அபாயத்தை தோற்றுவிக்கின்றது என சர்வதேச சுகாதார ஸ்தாபனம் அண்மையில் அறிவித்திருந்தது.
இத்தகவலானது உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் தற்போது வெளியாகியுள்ள இத்தகவலானது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. _
Labels:
ஒரு நற்செய்தி
Wednesday, October 19, 2011
கண்சதைணில் வளரும் நோய்க்கு முதன்முதலாக மருந்து கண்டுபிடிப்பு
கண்ணில் உற்பத்தியாகக் கூடிய புரதப்பொருள் சதையாக வளர்ந்து கண்ணில் உள்ள விழித்திரையை மறைப்பதனை கண் புரை நோய் எனப்படுகிறது.
இந்த புரைநோய்க்கு அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்களால் முதன்முதலாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு அறுவை சிகிச்சை இல்லாமல், புரை நோயை நீக்க மருந்து கண்டுபிடித்துள்ளனர்.
அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட விழித்திரையை அகற்றி, செயற்கை விழித்திரையை பொருத்துவதே இதுவரை காலமும் தீர்வாக இருந்தது.
இந்த புதிய கண்டுபிடிப்பு மருந்தை, கண் புரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்துவதன் மூலம் கண்ணில் சதை வளர்வது தடுக்கப்படுகிறது.
ஆனால் இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, இந்த மருந்தை பயன்படுத்துவதன் மூலம் கண்ணில் தொடர்ந்து சதை வளராமல் தடுக்க முடியும் என்று அந்த குழுவின் தலைவரான ஆன்ட்ரு பெல் தெரிவித்துள்ளார்.
Labels:
மருந்து கண்டுபிடிப்பு