Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Monday, October 31, 2011

கையடக்கத்தொலைபேசிப் பாவனையாளர்களுக்கு ஒரு நற்செய்தி

உங்களது விருப்பத்திற்குரிய கையடக்கத்தொலைபேசியால் உங்களுக்குப் புற்றுநோய் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளதா? ஆனால் தற்போது அவ்வாறு அச்சப்படத்தேவையில்லை என்ற ஆறுதலளிக்கும் ஆராய்ச்சித் தகவலொன்றினை டென்மார்க் நாட்டு விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அதாவது கையடக்கத்தொலைபேசிகளால் புற்றுநோய் ஆபத்து இல்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பில் ஆய்வொன்றினை அவர்கள் மேற்கொண்டிருந்தனர். இவ்விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மிக விரிவான ஆய்வாக இது கருதப்படுகின்றது. காரணம் இவ்வாய்வில் சுமார் 358,000 பேர் பங்குபற்றியிருந்தனர். இதன் முடிவில் கையடக்கத்தொலைபேசிக் கதிர்களால் நீண்ட காலத்தில் அல்லது குறுங்காலப்பகுதியில் புற்றுநோய் மற்றும் மூளையில் கட்டியை உண்டாக்கும் சாத்தியக்கூறுகள் குறைவு என ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. கையடக்கத் தொலைபேசிப் பாவனையானது புற்று நோய் அபாயத்தை தோற்றுவிக்கின்றது என சர்வதேச சுகாதார ஸ்தாபனம் அண்மையில் அறிவித்திருந்தது. இத்தகவலானது உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும் தற்போது வெளியாகியுள்ள இத்தகவலானது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. _