
புத்தாண்டு பிறக்கின்றது. புது வருட காலண்டர் வாங்கிவீட்டீர்களா? 2005ம் ஆண்டு காலண்டரை நீங்கள் இப்போது வைத்திருந்தால், 2011ம் ஆண்டு காலண்டர் வாங்க தேவையில்லை.
2005ம் ஆண்டு காலண்டரும், 2011ம் ஆண்டு காலண்டரும் அச்சு அசலாக ஒரே மாதிரி தான் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம். இந்த இரண்டு காலண்டர்களும் ஒரே மாதிரியானவையே. இந்த இரு வருடங்களும் நாள், மணி, நிமிடம், நொடியின் அடிப்படையில் ஒரே மாதிரிதான் இருக்கிறது.
வியக்கத்தக்க இந்த உண்மையினை உஜ்ஜைன் நகரைச் சேர்ந்த ஜீவஜி கால நிர்ணய இயக்குனர் திரு.ராஜேந்திர பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
வாரம் 7 நாட்கள் என்ற கணக்கில், 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி நடக்கலாம் என்று நாம் சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தாலும், இடையில் லீப் வருடம், சர்வதேச நேர மாற்றம் போன்ற காரணங்களால் அப்படி அமைய சாத்தியம் இல்லை என்பதே உண்மை.
இதற்கு முன்பு, 1966, 1977, 1983, 1995 ஆகிய ஆண்டுகள் ஒரே மாதிரி அமைந்திருந்தன. ஆனால், 6 ஆண்டுகள் வித்தியாசத்தில் 2005ம் ஆண்டும், 2010ம் ஆண்டும் இவ்வாறு அமைந்திருப்பது அதிசயத்தக்க வண்ணமாகவே உள்ளன. மீண்டும் இது போன்று 11 ஆண்டுகள் கழித்து நடக்கலாம். அதாவது 2022ம் ஆண்டு 2011ம் ஆண்டைப் போலவே அமையலாம் என்றும் திரு. ராஜேந்திர பிரகாஷ் குப்தா தெரிவித்தார்.
இன்னும் நம்பிக்கை இல்லையா உங்களுக்கு? அப்படியானால் சோதித்து பாருங்கள். 2005, 2011 ஆகிய இரண்டு வருடங்களிலும் புத்தாண்டு தினம் சனிக்கிழமை தான். மேலும், ஜனவரி 26 புதன்கிழமையிலும், ஆகஸ்ட் 15 திங்கட்கிழமையிலும் தான் வருகிறது.