Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Sunday, July 4, 2010

அபாயங்களுடன் வரும் இலங்கை அகதிகளை மீண்டும் அபாயத்துக்குள் தள்ள முடியாது-ஆஸி பிரதமர்

இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தப்பி, பாரிய அபாயகரமான பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா வரும் அவர்களை, மீண்டும் அதே அபாயத்துக்குள் தள்ளுவதில் நியாயமில்லை என அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் யூலியா கில்லர்ட் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை அகதிகள் தொடர்பிலான தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு, அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜுலியா அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிகளுக்கு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ள விமர்சனங்கள் தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அகதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமல், எதிர்ப்பு தெரிவித்து சுலோகங்களை தூக்குவது ஏற்புடையதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இது எதிர்கட்சிகள் தமது அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளே தவிர, உண்மையான கரிசனைக்கானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் வாரம் தாம் இலங்கை அதிகள் தொடர்பான தீர்வினை முன்வைக்க விருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். இதற்கிடையில் பசுபிக் கொள்கை அடிப்படையில், அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிப்படகுகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுமா? என அவரிடம் கேள்வி எழுப்பப்ட்டது. இதற்கு பதில் வழங்கிய அவர், பாரிய அபாயகரமான பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா வரும் அவர்களை, மீண்டும் அதே அபாயத்துக்குள் தள்ளுவதில் நியாயமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தப்பி, அபாயகரமான முறையில் அவுஸ்திரேலியா வருகின்றவர்கள் தொடர்பில் கரிசனை காட்ட வேண்டியதும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.