Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Sunday, July 4, 2010

IE - 8 ஐப் பாவிக்குமாறு மைக்ரோசொப்ட் ஆலோசனை _

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது இணையத்தள பிரவுஸர் தொகுப்பான ஐஇ8 (Internet Explorer IE8) இற்கு பாவனையாளர்களை மாற்றுமாறு ஆலோசனை வழங்கி வருகிறது. வீடு மற்றும் அலுவலக இணையத்தள பாவனையாளர்களில் அனேகர் இன்னமும் IE6 பிரவுஸர் தொகுப்பினையே பாவித்து வருவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. IE6 பிரவுஸரை பாவிப்பதன் காரணமாக பல பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன. இதனால் இன்டர்நெட் கணக்குகள் அத்துமீறி 'ஹெக்கிங்' செய்யப்பட்டது, தகவல்கள் திருடப்பட்டன சீனாவும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இதன் விளைவால் கூகுள் உட்பட 20 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அவுஸ்திரேலியா கிளை தலைமை அதிகாரி ஸ்டுவட் ஸ்ரத்டீ (Stuart Strathdee) கருத்து தெரிவிக்கையில், " IE6 பிரவுஸர் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டு 9 வருடங்களாகிவிட்டன. இதன் காலம் முடிவடைந்து விட்டது . இன்டர்நெட் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் நாம் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றோம்" என்கின்றார். .IE6 பிரவுஸரில் security patches எனப்படும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. ஆனால் IE8 பிரவுஸர் தொகுப்பு சிறந்த இணைய பாதுகாப்பினை வழங்குகிறது. 2010 ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், 25 சதவீதமானோர் IE8 பிரவுஸரையே பாவிப்பதாகவும்,18 சதவீதமானோர் IE6 பிரவுஸரைப் பாவிப்பதாகவும் , 13 சதவீதமானோர் IE7 பாவிப்பதாகவும் குறிப்பிடுகின்றன என நெட் மர்க்கட் ஷெயார் தெரிவிக்கின்றது.