Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Monday, July 5, 2010

தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு

தன் எடையை விட அதிக எடையுள்ள பொருட்களை, அசையாமல் எறும்புகள் சுமந்து செல்வது எப்படி என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். உழைப்புக்கும், சேமிப்புக்கும் உதாரணமாக கூறப்படும் உயிரினம் எறும்பு. இது தன் உடல் எடையைவிட பல மடங்கு அதிக எடையை சுமந்து செல்லும் தனிச்சிறப்பு கொண்டது.இதுகுறித்து, பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதாவது, ஒரு புல் துண்டையும், பேப்பரில் இலைபோன்று செய்து அதை தோடம்பழச்சாறில் ஊற வைத்து எறும்பை எடுத்துச் செல்ல செய்தனர். பின், அது செல்லும் தூரத்தையும், விதத்தையும் ஆய்வு செய்தனர். முதலில், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் செங்குத்தான மற்றும் சரிவான பொருட்களின் மீது ஏறி, இறங்கச் செய்தனர். பின், பக்கவாட்டில் ஊர்ந்து போகச்செய்து ஆய்வு செய்தனர். அதில், எறும்புகள் தன்னைவிட அதிக எடையுள்ள பொருட்களை அசையாமல் கொண்டு செல்வதற்கு, அதன் கழுத்தும், தலையும் உதவுகின்றன என்பது தெரியவந்தது. எறும்பின் கழுத்தும் தலையும் இணையும் இடத்தில், "ஸ்பிரிங்' போன்ற அமைப்பு உள்ளது. இதன் மூலம், தன்னை விட நீண்ட, அதிக எடைகொண்ட பொருட்களை எறும்புகள் சுமக்கும் போது, எந்த கோணத்தில் அவை சென்றாலும், அதற்கேற்ற வகையில், தனது தலையின் நிலையை மாற்றி அமைத்துக்கொள்கிறது. இதனால், அது வைத்திருக்கும் பொருட்களில் நிலைமாறாமலும், கீழே விழாமலும் இருக்கிறது. இரையை சுமக்கும் போதும் இதே முறையைத்தான் எறும்புகள் கையõளுகின்றன. இதுதொடர்பாக, ஆய்வாளர்கள் கூறுகையில், எறும்புகளின் கழுத்து இணைப்பின் மூலம் மிக எளிதான தனது சுமைகளை கோணம் மாற்றி வைத்துக்கொண்டு எளிதாக பயணம் செய்கின்றன என்று தெரிவித்துள்ளனர்.