Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Sunday, July 11, 2010

உலக கால்பந்து சாம்பியன் யார்

ஜோகன்னஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர், தென் ஆப்ரிக்காவில் இன்று வண்ணமயமான கலைநிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் இறுதிப் போட்டியில் நெதர்லாந்து & ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. உலக முழுவதும் 215 நாடுகளில் 260 கோடிக்கும் அதிகமானோர் இறுதி போட்டியின் நேரடி ஒளிபரப்பை கண்டு ரசிப்பார்கள். கடந்த மாதம் 11ம் தேதி, 19வது உலக கோப்பை போட்டி தென் ஆப்ரிக்காவில் கோலாகலமாகத் தொடங்கியது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் 2006ல் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி, 2வது இடம் பிடித்த பிரான்ஸ் அணிகள் லீக் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில், அர்ஜென்டினா அணிகளும் கால் இறுதியில் பரிதாபமாக தோற்றன. அரை இறுதியில் தோற்ற ஜெர்மனி, உருகுவே அணிகள் 3வது இடத்துக்கு மோதின. இந்நிலையில், இன்று நள்ளிரவு தொடங்கும் பரபரப்பான இறுதிப் போட்டியில் நெதர்லாந்து & ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால், புதிய அணி சாம்பியன் பட்டம் வெல்வது உறுதியாகி உள்ளது.