Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Monday, July 12, 2010

உலக கோப்பை இறுதிபோட்டி : ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் பெற்றது

உலகம் முழுவதும் கோடானு கோடி கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியில் ஐரோப்பிய அணிகளான நெதர்லாந்தும், ஸ்பெயினும் மோதின. இந்த போட்டியில் முழு நேரம் வரை எந்த அணியும் கோல் போடவில்லை. இதனையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் ஸ்பெயின் அணி முதல் கோல் போட்டு சாம்பியன் பட்டம் வென்றது. ஆக்டோபஸ் பால் கூறியது போல் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ஆக்டோபஸ் பால் கணித்தது போல் 8/8 வெற்றி: ஆக்டோபஸ் பால்: 2 வயதான இந்த ஆக்டோபஸ் பால் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாட்டுக் கொடிகள் அடங்கிய உணவுத் தொட்டிக்கு அருகே விடப்பட்டது. அப்போது சரியாக ஸ்பெயின் கொடி அடங்கிய தொட்டியை அது அழகாக பற்றிக் கொண்டது. ஆக்டோபஸ் பால் கணித்தது போல் நடந்த 8/8 போட்டியும் சரியாக பலித்தது. கோல்டன் ஷீ மற்றும் கோல்டன் பால் விருது: தென் ஆப்ரிக்கா : உலகம் முழுவதும் கோடானு கோடி கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் பெற்றது, இதில் கோல்டன் ஷீ விருது மற்றும் கோல்டன் பால் விருது வழங்கப்பட்டது, கோல்டன் ஷீ விருதை தாமஸ் முல்லர் (ஜெர்மனி) நாட்டை சேர்ந்தவர் தட்டிச்சென்றார். இவரே உலக கால்பந்து போட்டியின் இளம் வீரர் என்ற பட்டத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் கோல்டன் பால் விருதை டீகோ போர்லன் (உருகுவே) நாட்டை சேர்ந்தவர் தட்டிச்சென்றார்.