Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Sunday, July 18, 2010

நாடு முழுவதும் வெகு தீவிரமாகப் பரவிவரும் டெங்கு

கொழும்பு,ஜூலை18 நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தி அதனை ஒழித்துக்கட்ட படையினர் மற்றும் பொலி ஸாரைக் கொண்ட விழிப்புணர்வுச் செய லணி ஒன்றை அரசாங்கம் அவசரமாக உடனடியாக உருவாக்கவிருக்கிறது. நாடு முழுவதும் செயற்படத்தக்க வகை யில் ஆயிரம் பேரைக் கொண்டதாக இந்தச் செயலணி உருவாக்கப்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. படை அதிகாரிகள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், சிப்பாய்கள், பொலிஸார் ஆகி யோர் அங்கம் பெறும் இந்தச் செயலணி டெங்கு ஒழிப்புச் செயற்பாட்டு நடவடிக் கைகளை முன்னெடுக்கும். டெங்கு தீவிரமாகப் பரவிவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்ததை அடுத்தே இந்தச் செயலணி உருவாக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி 700 பேர் மரணமாகியுள்ளனர் என்றும் சுமார் 10 ஆயிரம் பேர் நோய்பாதிப்புக்குள்ளாகி இருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளன என்றும் சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.