Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Tuesday, November 30, 2010

இ-மெயில் சேவையைத் தொடங்கியது "பேஸ்புக்'

சான்பிரான்சிஸ்கோ : சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாகத் திகழும் "பேஸ்புக்' நிறுவனம், புதிதாக இ-மெயில் சேவையை தொடங்கியுள்ளது. "பேஸ்புக்' சமூக வலைத்தளம் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வலைத்தளத்தில், தற்போது, 50 கோடிக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், "பேஸ்புக்' நிறுவனம் புதிதாக "இ-மெயில்' சேவையிலும் நுழைந்துள்ளது. " மெயில் @பேஸ்புக்.காம்' என்ற முகவரியில் இ-மெயில் சேவையை, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகேர்பெர்க் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: பேஸ்புக் நிறுவனம் தற்போது, இ-மெயில் சேவையிலும் நுழைந்துள்ளது. பேஸ்புக் வலைதளத்தில் உறுப்பினர் அல்லாதவர்களும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இது உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற இ-மெயில் தளங்களில் உள்ள பல்வேறு வசதிகளும் இதில் கிடைக்கும். "ஸ்பாம்' மெயில்கள் இதில் வடிகட்டி அனுப்பப்படுவது இதில் சிறப்பம்சம் ஆகும். இணையதளம் பயன்படுத்திவரும், இளைய தலைமுறையினரிடையே இது மிகுந்த வரவேற்பை பெரும். பேஸ்புக்கின் இ-மெயில் சேவையால், ஜிமெயில் மற்றும் யாகூ மெயில் சேவைகளுக்கும் பாதிப்பு வரும் என்பதை என்னால், ஏற்க முடியாது. அவற்றை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ, யாருக்கும் போட்டியாகவோ இதனை தொடங்கவில்லை. ஒருவேளை, ஜிமெயில், யாகூ மெயிலில் உள்ள எனது இ-மெயில் அக்கவுண்டைத்தான் நான் முடித்துக்கொள்ள முடியும். இவ்வாறு மார்க் ஜுகேர்பெர்க் கூறினார்.