Sunday, February 27, 2011
சுனாமி ஆறாவது நினைவு நாளன்று...
சுனாமி ஆறாவது நினைவு நாளன்று மக்கள் தொலைக் கட்சியில் ஒளிபரப்பான நேர்காணல்
கலந்துரையாடலினை http://www.youtube.com/watch?v=GD7-kDSvEj4
http://www.youtube.com/watch?v=AGD3q7IX6zA ஆகியவற்றினூடாகப் பார்வையிடலாம்.
-விஞ்ஞானி.க.பொன்முடி.
Labels:
விஞ்ஞானி.க.பொன்முடி
Saturday, February 26, 2011
யாழ். பல்கலையில் பொறியியல் பீடம் விரைவில் இயங்க ஆரம்பிக்கும்
யாழ். பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் விரைவில் இயங்க ஆரம்பிக்கும். அந்தப் பீடத்தை அமைப்பதற்கான நிதியைப் பெறுவ தற்கு ஜனாதிபதி பல்வேறு நாடுகளுடன் கலந்துரையாடி வருகிறார் என்று தெரிவித்தார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ.
நேற்று யாழ்ப்பாணத்தில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த அமைச்சர் கொக்குவிலில் உள்ள தொழில்நுட்பவியல் கல்லூரி வளாகத்தில் புதிதாக நிர்மானிக் கப்பட்ட கட்டடத் தொகுதியை தென்கொரியத் தூதுவருடன் இணைந்து நாடா வெட்டித் திறந்துவைத்தார். அதன் பின்னர் உரை நிகழ்த்தும்போதே பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
யாழ்ப்பாணத்தில் இரண்டு கல்வி நிலையங்கள் இன்று திறந்துவைக் கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரி ஆகும்.
இந்த தொழில் நுட்பவியல் கல்லூரியின் கட்டட வேலைகள் ஆரம்பித்த 2006 ஆம் ஆண்டை நினைவுபடுத்திப் பார்க்கின்றேன். அந்த வருடத்தில் மக்களுக்கு உதவி செய்யக்கூடிய வெளிநாட்டு நிறுவனங்கள், அமைப்புகள் யாழ்ப்பாணத்தில் செயற்பட முடியாத நிலை இருந்தது.
வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் மட்டுமன்றி உள்ளூர் தொண்டு நிறுவனங்களும் இங்கிருந்து வெளியேற வேண்டிய நிலைமை இருந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதி வட பகுதி மக்களுக்கு உதவு மாறு பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடம் வேண் டியிருந்த போதும் அவர்கள் அதிலிருந்து பின்வாங்கிச் செல்லும் நிலைமையே இருந்தது. அவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் நிதியுதவி வழங்க முன் வந்தது தென்கொரிய அரசு மட்டும் தான்.
அதுமட்டுமன்றி தொழில்நுட்பவியல் கல்லூரியின் கட்ட டத்தை நிறுவ கட்டடப் பொருள்களை எடுத்து வருவதற்கும் கூட எவரும் கப்பலை வழங்க முன்வரவில்லை. நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் எடுத்த முயற்சியின் காரணமாகவே கப் பல் மூலம் அந்தப் பொருள்களை இங்கு எடுத்து வரமுடிந்தது.
இவ்வாறான பயங்கர சூழ்நிலையிருந்தும் ஜனாதிபதி வட பகுதி சிறுவர்களின் கல்வியில் அக்கறை காட்டி மிக மிகக் குறு கிய காலத்தில் சர்வதேச தரத்திலான கல்லூரியை நிர்மானித்து உங்களுக்கு வழங்கியுள்ளார்.
இந்தக் கல்லூரியை நிர்மானிப்பதற்கு ஒத்துழைத்த அனை வருக்கும் நாம் நன்றி கூறக் கடைமைப்பட்டுள்ளோம்.
Labels:
பொறியியல் பீடம்
Thursday, February 24, 2011
எல்லைக்கோடு
இலங்கை-இந்தியக் கடல் நடுவே தொழில்நுட்ப அலையின் உதவியின் சமிக்ஞை முறையிலான எல்லைக் கோடொன்றை அமைப்பது குறித்து இரு நாட்டு அரசாங்கங்களும் ஆலோசித்து வருகின்றன.இந்திய மீனவர்கள் கடலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென நியமிக்கப்பட்ட குழுவினர் இந்திய அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் மேற்கண்ட ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் இந்திய மீனவர்கள் தமது நாட்டின் கடல் எல்லையைத் தாண்டும் போது அவர்களுக்கு ஒரு சமிக்ஞை விடுக்கப்படும். அவர்களிடம் மொபைல் போன் இருக்கும் பட்சத்தில் ஒரு அழைப்பு அல்லது குறுஞ்செய்தி மூலம் அவர்கள் தமது நாட்டின் கடல் எல்லையைத் தாண்டியிருப்பது குறித்து அறிவுறுத்தப்படும்.
அவ்வாறான தொழில்நுட்ப முறையில் இந்திய மீனவர்கள் இனி வரும் காலங்களில் இலங்கையின் கடற்பரப்புக்குள் தவறியேனும் நுழைவது தடுக்கப்படும். அதற்கான தொழில்நுட்பம் கொண்ட சமிக்ஞை அலை தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி பிரதேசங்களுக்கிடையிலான கடலில் நிலைநிறுத்தப்படும்.
உத்தேச நடைமுறை அமுலுக்கு வரும் பட்சத்தில் இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்குப் பெரும்பாலும் முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Labels:
எல்லைக்கோடு
Tuesday, February 15, 2011
ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்!
அச்சச்சோ! மறந்து போச்சே... இன்று நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.
* பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும்.
அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.
* அதேபோல இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.
* ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.
* சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.
* கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது. இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.
மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைகள்தான். இரத்த ஓட்டக் குறைவும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
Labels:
ஞாபக சக்தி
Monday, February 7, 2011
சீரற்ற காலநிலை தொடர்கிறது
கிழக்கு மற்றும் வடமத்திய போன்ற மாகாணங்களில் பெய்து வந்த அடை மழை குறைந்துள்ள போதிலும் சீரற்ற காலநிலை தொடர்கின்றது.
இதன் பிரகாரம் நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் வேளை முதல் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களிலும் வட மத்திய மாகாணத்தின் பொலனறுவை மற்றும் அநுராதபுர போன்ற மாவட்டங்களிலும் மழை குறைந்துள்ள போதிலும் இம் மாவட்டங்களில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை தொடர்வதால் இம் மாவட்டங்களில் இடையிடையே காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கின்றது.
மேற்படி மாவட்டங்களின் நகர் புறங்களில் வெள்ள நீர் வடிந்தோடிய போதிலும் தாழ்நிலப் பிரதேசங்களில் சுமார் இரண்டு அடிக்கும் குறையாமல் நீர் தேங்கி நிற்கின்றது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடை மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 21487 குடும்பங்களைச் சேர்ந்த 78973 பேர் 177 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். அருமைநாயகம் தெரிவித்தார்.
அத்துடன் 36762 குடும்பங்களைச் சேர்ந்த 146,107 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு உறவினர், நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடு வாசல்களை இழந்து நலன்புரி நிலையங்களில் தொடர்ந்தும் தங்கியுள்ள 78973 பேருக்கும் அந்த பிரதேச செயலாளர்களின் ஊடாக சமைத்த உணவுகள் வழங்கப்படுவதோடு, ஏனையோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் பிரகாரம் கோறளைப்பற்று வடக்கு வாகரையில் 09 நலன்புரி நிலையங்களில் 1879 குடும்பங்களைச் சேர்ந்த 6319 பேரும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடியில் 16 நலன்புரி நிலையங்களில் 2107 குடும்பங்களைச் சேர்ந்த 7788 பேரும், கோறளைப்பற்று வாழைச்சேனையில் 07 நலன்புரி நிலையங்களில் 2612 குடும்பங்களைச் சேர்ந்த 8965 பேரும், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை மத்தியில் 09 நலன்புரி நிலையங்களில் 1492 குடும்பங்களைச் சேர்ந்த 5792 பேரும், கோறளைப்பற்று தெற்கு கிரானில் 16 நலன்புரி நிலையங்களில் 1513 குடும்பங்களைச் சேர்ந்த 5827 பேரும், ஏறாவூர்பற்று செங்கலடியில் 24 நலன்புரி நிலையங்களில் 3361 குடும்பங்களைச் சேர்ந்த 11824 பேரும், ஏறாவூர் நகரில் 04 நலன்புரி நிலையங்களில் 292 குடும்பங்களைச் சேர்ந்த 1112 பேரும், மண்முனை மேற்கு வவுணதீவில் 20 நலன்புரி நிலையங்களில் 1612 குடும்பங்களைச் சேர்ந்த 5847 பேரும், மண்முனை வடக்கு மட்டக்களப்பில் 22 நலன்புரி நிலையங்களில் 1215 குடும்பங்களைச் சேர்ந்த 4319 பேரும், காத்தான்குடியில் 06 நலன்புரி நிலையங்களில் 948 குடும்பங்களைச் சேர்ந்த 3965 பேரும், மண்முனைப்பற்று ஆரையம்பதியில் 11 நலன்புரி நிலையங்களில் 1641 குடும்பங்களைச் சேர்ந்த 6380 பேரும், மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பகுதியில் 08 நலன்புரி நிலையங்களில் 1162 குடும்பங்களைச் சேர்ந்த 4663 பேரும், மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிக்குடியில் 08 நலன்புரி நிலையங்களில் 525 குடும்பங்களைச் சேர்ந்த 1897 பேரும், போரதீவுப் பற்று வெல்லாவெளியில் 17 நலன்புரி நிலையங்களில் 1128 குடும்பங்களைச் சேர்நத் 4275 பேர் தொடர்ந்து தங்கி வருகின்றனர்.
இதேவேளை, கிழக்கு மாகாண குளங்களின் அண்மையில் நிலவிய வெள்ள அனர்த்தம் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இருப்பினும் நேற்று மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில் இடையிடையே மழை பெய்த வண்ணம் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் ஒரு அடி அளவில் வெள்ளம் நேற்றைய தினம் வடிந்துள்ளதாகவும் மழை பெய்யாவிடில் வெள்ளம் படிப்படியாக வடிந்து இயல்பு நிலை ஏற்படலாமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
வெள்ளம் வடிந்து விடுமாயின் போக்குவரத்து சீரடைந்து விடுமென தெரிவித்த அரசாங்க அதிபர் காலநிலை அடிக்கடி மாறுதல் அடைவதாகவும் குறிப்பிட்டார்.
Thursday, February 3, 2011
ஆஸ்திரேலியாவை மிரட்டும் "யாசி" புயல்
ஆஸ்திரேலியாவில், சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குயின்ஸ்லாந்து மாகாணத்தின் வடபகுதியை இன்று சூறாவளி தாக்க இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 9,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் 9,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் வடபகுதியில் உள்ள கெய்ரன்ஸ் நகரை, "யாசி" சூறாவளி மணிக்கு 155 மைல் வேகத்தில் தாக்க கூடும்.
மூன்றடி வரை கனத்த மழை பெய்யக் கூடும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் நகரின் கடற்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 9,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.
நகரின் முக்கிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 250 நோயாளிகளை ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மாகாண தலைநகர் பிரிஸ்பேனுக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதேபோல் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Labels:
"யாசி" புயல்