Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Saturday, March 19, 2011

18 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் இன்று “சூப்பர் பவுர்ணமி

ஜப்பானில் பூகம்பம், சுனாமியைத் தொடர்ந்து இன்று சூப்பர் பவுர்ணமி வருவதால் பூமியில் அழிவு ஏற்படும் என்று பீதி கிளம்பியது. சூப்பர் பவுர்ணமி என்பது சந்திரன் (நிலா) பவுர்ணமி நாளில் வழக்கமாக பிரகாசிக்கும் வெளிச்சத்தை விட இன்று 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக பிரகாசிக்கும். சந்திரன் இன்றைய தினம் பூமிக்கு அருகில் நெருங்கி வருகிறது. பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள சந்திரன் இன்று பூமியில் இருந்து 3 லட்சத்து 64 ஆயிரம் கி.மீ. தொலைவில் நெருங்கி வரும். பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 20 ஆயிரம் கி.மீ. குறைகிறது. இதனால் பவுர்ணமி தினமான இன்று சந்திரனின் வெளிச்சம் அதிகமாக இருக்கும். இதையே சூப்பர் பவுர்ணமி என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். சந்திரன் பூமியை நெருங்கி வருவதால் அதன் ஈர்ப்பு விசை அதிகரிக்கும். இதனால் பூமியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அலைகள் ஆர்ப்பரிக்கும். பூமியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்பட்டது. இது குறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மைய மேற்கு பிராந்திய துணை இயக்குனர் ஆர்.வி.சர்மா கூறுகையில், இன்றைய சூப்பர் பவுர்ணமியால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை. வானிலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது, கடல் அலைகளின் தாக்கம் மட்டும் சற்று கூடுதலாக இருக்கும் என்றார். நேரு அருங்காட்சியக இயக்குனர் பியூஷ் பாண்டே கூறுகையில், சந்திரன் பூமிக்கு அருகில் வருவதும், பவுர்ணமி பிரகாசமாக தோன்றுவதும் ஒன்றாக நடைபெறுகிறது அவ்வளவுதான். ஆனால் அடுத்து இது போன்ற சூப்பர் பவுர்ணமியை நாம் காண 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றார்.