Friday, March 4, 2011
ரஜினி கமல் சேர்ந்து நடிப்பார்களா
ரஜினி - கமல் சேர்ந்து நடிப்பார்களா என்ற கேள்வியை கிட்டத்தட்ட 30 வருடங்களாய் ரசிகர்கள் சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு ரஜினி பெரும்பாலும் பதிலே சொல்வதில்லை. கமலும் சரியான பதிலைத் தருவதில்லை. இந்த மூவரும் இணைந்த கூட்டணியில் உருவான படங்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆனவை. இன்றும் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் ரசித்துப் பார்க்கப்படுபவையாக உள்ளன. ஆனால் இப்போது இந்த பெரும் நட்சத்திரங்கள் மீண்டும் இணைந்து நடிக்கிறார்களாம். ஆனால் முழு சினிமாவில் அல்ல... ஒரு குறும்படத்தில். இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் இருவருக்கும் குரு என்ற ஸ்தானத்தில் உள்ள கே.பாலச்சந்தர். கதை வசனத்தை முதல்வர் கலைஞர் எழுதுகிறார். பையனூரில் சினிமாக்காரர்களுக்காக அரசு ஒதுக்கியுள்ள இடத்தில் கட்டப்படும் ஸ்டுடியோ மற்றும் இதர அரங்குகளின் அடிக்கல் நாட்டுவிழாவின்போது இந்த குறும்படத்தின் ஷூட்டிங்கும் நடக்க இருக்கிறது. ரஜினியும் கமலும் அந்த விழாவிலேயே இந்தப் படத்தை நடித்துக் கொடுக்கப் போகிறார்களாம். அப்பாடா! இந்த சேதியே ரசிகர்களுக்கு ஆத்மதிருப்தியைத் தருமே....
Labels:
ரஜினி கமல்