Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Friday, March 4, 2011

லிபியாவில் குண்டுவீச்சு: அமைதிப்பேச்சும் நடக்கிறது

லிபியாவில் எண்ணெய் வளம் மிக்க பிரிகா நகரில், ராணுவ விமானங்கள் மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளன.லிபியாவின் எண்ணெய் வளமிக்கது பிரிகா நகரம். லிபியா எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நகரத்தை கூலிபடையினரின் உதவியுடன் கைப்பற்ற, கடாபி ஆதரவாளர்கள் முயற்சி செய்தனர். ஆனால், இதை எதிர்கட்சியினர் நேற்று முன்தினம் முறியடித்தனர். இந்நிலையில் நேற்று பிரிகா நகரில் ஆயில் இன்ஜினியரிங் பல்கலைகழகத்துக்கு பக்கத்தில் போர் படை விமானங்கள் குண்டு வீசியதாகவும், இதனால், அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டதாகவும் பிரகா நகரத்தை சேர்ந்தவர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் திரிபோலியில் மக்களிடையே உரையாற்றிய கடாபி குறிப்பிடுகையில், " ஆட்சியை விட்டுக்கொடுக்க முடியாது. லிபியாவின் எண்ணெய் வளத்தை சுரண்டவே சிலர், இங்கு புரட்சியை தூண்டி விடுகின்றனர். வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலால் தான், இங்கு போராட்டம் நடக்கிறது. அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளை லிபியாவில் அனுமதிக்க முடியாது. மீறி நுழைந்தால் ரத்த ஆறு ஓடும். ஆயிரக்கணக்கான லிபிய மக்கள் பலியாவார்கள். கடவுளின் துணையோடு கடைசி மனிதன் இருக்கும் வரை, நாங்கள் போராடுவோம்' என்றார். லிபிய தலைவர் கடாபியின் நெருங்கிய நண்பர் வெனிசுலா அதிபர் ஹக்கோ சாவெஸ். கடாபிக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருவதால், எதிர்ப்பாளர்களை அழைத்து பேச, அரபு லீக் பொது செயலர் அமர் மூசா நடவடிக்கை எடுக்க வேண்டும், என சாவெஸ் யோசனை தெரிவித்துள்ளார். சாவெஸின் யோசனையை மூசா, கடாபியிடம் தெரிவித்துள்ளார். "அமைதி நடவடிக்கைகளை செயல்படுத்துவது குறித்து கடாபி ஆலோசித்து வருகிறார்' என, மூசா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சொத்து குவிப்பு: இதனிடையே, நான்கு கண்டங்களில் உள்ள 35க்கும் அதிகமான நாடுகளில் கடாபி எஸ்டேட்டுகள், ஓட்டல்கள், வங்கிகள், ராணுவ தளவாட தொழிற்சாலைகள் என பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக, அமெரிக்காவின் சி.என்.என்., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.