Monday, March 21, 2011
இலங்கை பக்தர்களுக்கென சென்னையிலிருந்து வருட இறுதிக்குள் விசேட ரயில் சேவைகள்
‘புத்தகாயா’ ‘கபிலவஸ்து’ போன்ற இந்தியாவின் முக்கிய மதத் தலங்களுக்கு சென்னையிலிருந்து இலகுவாக பயணிப்ப தற்கான விசேட ரயில் சேவைகளை இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து இந்திய புனித தலங்களுக்குச் செல்வோரின் நன்மை கருதி இத்தீர்மானத்தை இந்திய அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர்; தலைமன்னார், இராமேஷ்வரம், கொழும்பு, தூத்துக்குடி கப்பல் சேவைகளோடு இணைந்ததாக இந்த சென்னை ரயில் சேவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த ரயில் சேவை மூலம் இந்தியாவின் 14 புனித தலங்களுக்குச் சென்னையிலிருந்து சுலபமாகச் செல்வதற்கு வாய்ப்புக் கிட்டுமெனவும் அவர் தெரிவித்தார். இந்திய கலாசார நட்புறவுப் பேரவை ஏற்பாடு செய்திருந்த சர்வ தேச பெளத்த மாநாடு நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களின் தலைமையில் கண்டி பல்லேகல சர்வதேச பெளத்த பல்கலைக்கழக மண்டபத்தி ஆரம்ப மானது.
இரு தினங்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்திய உயர் ஸ்தானிகர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் டி. எம் ஜயரட்ன, அமை ச்சர்கள் சுசில் பிரேமஜயந்த, பேரா சிரியர் ஜீ. எல். பீரிஸ் உட்பட அமைச்சர்கள், உள்நாட்டு வெளி நாட்டு அறிஞர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இம்மாநா ட்டில் உரையாற்றிய அவர், தமதுரை யில் மேலும் தெரிவித்ததாவது:
பெளத்த போதனைகள் அமைதி யையும் சகோதரத்துவத்தையும் வலி யுறுத்துகின்றன.
வன்முறைகளற்ற உலகம் தொடர் பில் கெளதம புத்தரின் தர்மோப தேசங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இலங்கைக்கும் இந்தி யாவிற்குமிடையிலான நல்லுறவு கள் மிக நீண்டகால நெருக்கத்தி னைக் கொண்டதாகும்.
சமயம், கலை, கலாசாரம், வர்த்த கம் உள்ளிட்ட பல்வேறு துறைக ளிலும் நெருங்கிய தொடர்புகளை இங்கு குறிப்பிட முடியும்.
இலங்கையில் தற்போது நடை பெறும் இந்த சர்வதேச மாநாடு இத்தகைய நல்லுறவினை மேலும் வலுப்படுத்த உறுதுணையாக அமை யும்.
கடந்த ஆண்டு ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தி யாவிற்கு விஜயம் மேற்கொண்டி ருந்தபோது இலங்கையில் சர்வதேச பெளத்த மாநாட்டை நடத்துவது தொடர்பில் பூர்வாங்க பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப் பட்டன.
அதனை அடிப்படையாகக் கொண்டே தற்போது இம்மாநாட்டை சிறப்பாக நடத்த முடிந்துள்ளது எனவும் அவர் கூறினார்.
Labels:
விசேட ரயில் சேவைகள்