Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Sunday, July 4, 2010

டோனிக்கும் சாக்ஷி ராவத்துக்கும் நிச்சயதார்த்தம்

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோனிக்கும், அவரது நீண்ட கால பள்ளித்தோழியான சாக்ஷி ராவத்துக்கும் டேராடூனில் உள்ள ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி. இவருக்கும், இவரது பள்ளித்தோழி சாக்ஷி ராவத்துக்கும் இடையே டேராடூனில் உள்ள ஹோட்டல் பாகீரதியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவ்விழாவில் டோனியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய கிரிக்கெட் நண்பர்கள் கலந்து கொண்டனர். சாக்ஷி ராவத், ராஞ்சி ஷாமிலியில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் படித்தவர். டோனியும் இதே பள்ளியில் படித்தவர் தான். பள்ளி காலத்தில் இருந்தே இருவரும் நண்பர்கள். டோனி மற்றும் சாக்ஷி ஆகியோரின் தந்தைகள் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். சாக்ஷியின் தந்தை ஓய்வு பெற்ற பின் அவர்களது குடும்பம் டேராடூனுக்கு இடம்பெயர்ந்துவிட்டது. இருவருக்கும் இடையே திருமணத் திகதி நிச்சயிக்கப்பட்டு விட்டதா என டோனியின் நண்பரிடம் விசாரித்த போது, அது முடிவாகவில்லை என்றும், அநேகமாக ஆஸி. தொடருக்குப்பின் இருக்கலாம் என அவர் தெரிவித்தார். இதேவேளை அவசரமாக கல்யாணம் இன்று (நேற்று) நடக்குமென இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. டோனியின் நிச்சயதார்த்தம் குறித்த செய்தியறிந்து அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கால்பந்து ரசிகரான டோனியின் நிச்சயதார்த்தம், உலக கோப்பை கால்பந்து நடந்து வரும் வேளையில் நடந்திருப்பது மென்மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.