Saturday, April 2, 2011
இன்று இந்தியா-இலங்கை மோதல்
ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை பைனலில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. ஒருபக்கம் விக்கெட் கீப்பர் கேப்டனாக தோனி என்றால், மறுபக்கம் விக்கெட் கீப்பர் கேப்டனாக சங்ககரா களமிறங்குகிறார். ரன் சாதனைக்கு சச்சின்... விக்கெட் சாதனைக்கு முரளிரதன் என, இரு தரப்பிலும் சூப்பர் வீரர்கள் உள்ளனர். இரண்டாவது முறையாக கோப்பை கைப்பற்ற இரு அணிகளும் காத்திருப்பதால், மும்பையில் அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
பத்தாவது உலக கோப்பை தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடக்கிறது. இதில், "நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட முன்னணி அணிகள் விரைவில் வெளியேறின. அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
பலவீனம் தெரியும்:
இரு அணிகளும் சமீப காலமாக நிறைய ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளதால், பலம் மற்றும் பலவீனம் பற்றி நன்கு அறியும். தவிர, ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்ற அனுபவமும் கைகொடுக்கும். உதாரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ரெய்னாவுடன் சேர்ந்து முரளிதரனும் விளையாடினார். எனவே, தோனியின் உத்திகள் பற்றி முரளிக்கு தெரியும். இதே போல மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின், ஹர்பஜனுடன் மலிங்கா விளையாடியுள்ளார். இவர்களும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள் என்பதால், திட்டம் வகுத்து செயல்படுவதில் சிக்கல் ஏற்படலாம்.
Labels:
உலக கோப்பை