Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Sunday, April 3, 2011

இலங்கையை வீழ்த்தி கிண்ணம் வென்றது இந்தியா

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதியாட்டக் காட்சிகளை கோல்பேஸ் மைதானத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் கண்டு களித்தனர். எனினும் இலங்கை அணி தோல்வி அடைந்ததும் ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி, மூச்சுப் பேச்சின்றி அவர்கள் கலைந்து சென்றனர். கோல்பேஸ் மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு பெரும் திரைகளில் இந்தக் காட்சிகளை மக்கள் கண்டு களித்தனர்.இந்த ஆட்டத்தில் இலங்கை தோல்வியடைந்ததையடுத்து மக்கள் ஆரவாரமின்றி அமைதியாகக் கலைந்து சென்றனர். கொழும்பில் வெடிகொளுத்தி ஆரவாரங்கள் ஏதும் இன்றி அமைதியாக மக்கள் வீடுகளுக்குள் தங்கியிருந்தனர். இதேவேளை, இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து யாழ். நகரில் இந்திய அணி ஆதரவாளர்கள் வெடி கொளுத்தி வெற்றியைக் கொண்டாடினர். ஆரம்பத்தில் இலங்கை அணி ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி ஆரவாரப்பட்டனர். எனினும் இறுதியில் அமைதியாகி விட்டனர்.இந்திய அணி ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக வெடி கொளுத்தி தமது மகிழ்ச்சியை இரவு 12 மணி வரை வெளிப்படுத்தினர். நன்றி: உதயன்