Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Wednesday, April 13, 2011

சச்சினுக்கு வெள்ளிக் கோப்பை: பெங்களூர் ஜுவல்லரி பரிசளித்தது

பெங்களூரில் உள்ள ஜுவல்லரி சார்பில் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளியிலான மாதிரி உலகக் கோப்பை பரிசாக அளிக்கப்பட்டது. இந்த கோப்பை சுமார் 4.5 கிலோ வெள்ளியாலும், 60 கிராம் தங்கத்தாலும் ஆனது. புதன்கிழமை நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக பெங்களூர் வந்த சச்சினுக்கு இந்த கோப்பை பரிசாக அளிக்கப்பட்டது.