Thanks for visiting
to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Tuesday, January 31, 2012

பென்டிரைவ் தரமானதா, போலியானதா

பென்டிரைவ் தரமானதா, போலியானதா அல்லது பழுதாயிருக்கிறதா என சொல்லும் இலவச மென்பொருள்!! இன்றைய கணணி உலகத்தில் USB கருவிகளான பென்டிரைவ், மெமரி கார்டு போன்றவை தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன. சிலருக்கோ தாங்கள் வாங்கிய பென்டிரைவ் தரமானதா அல்லது போலியானதா என்று கூட கண்டறியத் தெரியாது. அதே போல தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பென்டிரைவ் பழுதாயிருக்கிறதா என்றும் கண்டுபிடிக்க முடியாது. பென்டிரைவ் மற்றும் ஏனைய USB கருவிகளின் தரத்தைச் சோதிக்க ChkFlsh என்ற இலவச மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் Read Speed, Write Speed, Sector wise Errors போன்ற விடயங்களை சோதித்து அறியலாம். இதனால் நமது பென்டிரைவ் தரமாக உள்ளதா என்றும் தெரிந்து கொள்ளலாம். இதற்கு முதலில் இந்த மென்பொருளைத் தரவிறக்கியவுடன் ChkFlsh என்ற கோப்பை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் பென்டிரைவை கணணியில் செருகவும். பென்டிரைவில் உள்ள தகவல்களை அழித்து விட்டு சோதிக்கப் பயன்படுத்துவது நலமானது. இதில் 3 வகையான Access Type கள் இருக்கின்றன. Use Temporary file என்பதைக் கிளிக் செய்தால் Write and Read சோதனையைச் செய்ய முடியும். உங்கள் பென்டிரைவில் ஏதேனும் தகவல்கள் இருந்து Read Test மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனில் As Logical Drive என்பதைக் கிளிக் செய்து கொள்ளவும். Test Length என்பதில் One Full Cycle என்பதைத் தெரிவு செய்யவும். பின்னர் Start கொடுத்தால் பென்டிரைவ் சோதிக்கப்படும். ஒவ்வொரு கோப்பு செக்டார்களாக(File Sector)களாக சோதிக்கப்பட்டு வரும். இறுதியில் ஒவ்வொரு செக்டாரும் பச்சை வண்ணத்தில் காண்பிக்கப்பட்டால் உங்கள் பென்டிரைவில் எந்த பிரச்னையும் இல்லை என்று அர்த்தம். இத்துடன் இந்த பென் டிரைவின் வேகம் மற்றும் பிழைகள் இருந்தாலும் காண்பிக்கப்படும்.