Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Friday, March 25, 2011

தண்ணீர், கீரை எல்லாவற்றிலும் கதிர்வீச்சு பாதிப்பு அபாயம்

டோக்கியோ:ஜப்பானின் புக்குஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குடிநீர் குழாய்களில் கலந்துள்ளதால், பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால், தண்ணீர் பாட்டில்களுக்கு ஜப்பானில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.புக்குஷிமா அணு மின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளுக்கும் தற்போது மின் இணைப்பு கொடுக்கப்பட்டு அதன் மூலம், நீரை உட்செலுத்தி குளிரூட்டும் முறைகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், அணு உலைகளில் இருந்து தொடர்ந்து வெளியேறி வரும் கதிர்வீச்சு, 240 கி.மீ., தெற்கில் உள்ள டோக்கியோ நகரம் வரை பரவியுள்ளது. குழந்தைகளுக்கான எச்சரிக்கை அளவை விட குடிநீரில் இரண்டு மடங்கு கதிர்வீச்சு அயோடின் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, குழாயில் வரும் குடிநீரை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என, எச்சரிக்கை விடப்பட்டது. இதனால், டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் மக்கள், பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று, பல நகரங்களில் தண்ணீர் பாட்டில்கள் கிடைக்காததால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.புக்குஷிமா அணு மின் நிலையத்தில் கேபிள்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று ஊழியர்கள், அதிகப்படியான கதிர்வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். கீரை உள்ளிட்ட காய்கறிகளிலும் கதிர்வீச்சு கலந்திருப்பதால், பால் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்ய நாடுகள் தடை விதித்துள்ளன.

Monday, March 21, 2011

இலங்கை பக்தர்களுக்கென சென்னையிலிருந்து வருட இறுதிக்குள் விசேட ரயில் சேவைகள்

‘புத்தகாயா’ ‘கபிலவஸ்து’ போன்ற இந்தியாவின் முக்கிய மதத் தலங்களுக்கு சென்னையிலிருந்து இலகுவாக பயணிப்ப தற்கான விசேட ரயில் சேவைகளை இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த் தெரிவித்தார். இலங்கையிலிருந்து இந்திய புனித தலங்களுக்குச் செல்வோரின் நன்மை கருதி இத்தீர்மானத்தை இந்திய அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர்; தலைமன்னார், இராமேஷ்வரம், கொழும்பு, தூத்துக்குடி கப்பல் சேவைகளோடு இணைந்ததாக இந்த சென்னை ரயில் சேவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். இந்த ரயில் சேவை மூலம் இந்தியாவின் 14 புனித தலங்களுக்குச் சென்னையிலிருந்து சுலபமாகச் செல்வதற்கு வாய்ப்புக் கிட்டுமெனவும் அவர் தெரிவித்தார். இந்திய கலாசார நட்புறவுப் பேரவை ஏற்பாடு செய்திருந்த சர்வ தேச பெளத்த மாநாடு நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களின் தலைமையில் கண்டி பல்லேகல சர்வதேச பெளத்த பல்கலைக்கழக மண்டபத்தி ஆரம்ப மானது. இரு தினங்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்திய உயர் ஸ்தானிகர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் டி. எம் ஜயரட்ன, அமை ச்சர்கள் சுசில் பிரேமஜயந்த, பேரா சிரியர் ஜீ. எல். பீரிஸ் உட்பட அமைச்சர்கள், உள்நாட்டு வெளி நாட்டு அறிஞர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இம்மாநா ட்டில் உரையாற்றிய அவர், தமதுரை யில் மேலும் தெரிவித்ததாவது: பெளத்த போதனைகள் அமைதி யையும் சகோதரத்துவத்தையும் வலி யுறுத்துகின்றன. வன்முறைகளற்ற உலகம் தொடர் பில் கெளதம புத்தரின் தர்மோப தேசங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இலங்கைக்கும் இந்தி யாவிற்குமிடையிலான நல்லுறவு கள் மிக நீண்டகால நெருக்கத்தி னைக் கொண்டதாகும். சமயம், கலை, கலாசாரம், வர்த்த கம் உள்ளிட்ட பல்வேறு துறைக ளிலும் நெருங்கிய தொடர்புகளை இங்கு குறிப்பிட முடியும். இலங்கையில் தற்போது நடை பெறும் இந்த சர்வதேச மாநாடு இத்தகைய நல்லுறவினை மேலும் வலுப்படுத்த உறுதுணையாக அமை யும். கடந்த ஆண்டு ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தி யாவிற்கு விஜயம் மேற்கொண்டி ருந்தபோது இலங்கையில் சர்வதேச பெளத்த மாநாட்டை நடத்துவது தொடர்பில் பூர்வாங்க பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப் பட்டன. அதனை அடிப்படையாகக் கொண்டே தற்போது இம்மாநாட்டை சிறப்பாக நடத்த முடிந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

Sunday, March 20, 2011

லிபியா மீது பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கப் படைகள் தாக்குதல் _

லிபிய வான் பரப்பில் விமானங்கள் பறப்பதற்கான தடைக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் வழங்கிய பிறகு முதல் முறையாக நேற்று மாலை பிரான்ஸ் விமானங்கள் லிபியாவில் தாக்குதல் நடத்தியுள்ளன. பாரிஸில் உள்ள பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சு இதை உறுதி செய்துள்ளது. லிபிய இராணுவ வாகனங்கள் மீது இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 20 பிரான்ஸ் நாட்டு விமானங்கள் ஈடுபட்டதாக அதன் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பென்காசி நகரில் இருக்கும் பொது மக்களை பாதுகாக்கவும், கிளர்ச்சியாளர்கள் மீது கேணல் கடாபி தாக்குதல்கள் நடத்துவதை தடுக்கவும் பிரான்ஸ் விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிக்கலா சர்கோசி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் லிபியா மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமது விமானங்கள் லிபியா மீது தாக்குதல் மேற்கொண்டு வருவதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் விமானங்கள் நேற்று மேற்கொண்டுள்ள விமானத் தாக்குதலினால் லிபியாவின் பல வாகனங்கள் சேதடைந்துள்ளன. இந்த நிலையில் லிபியா மீது அமெரிக்க எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்கத்தேய விமானங்கள் லிபியாவின் தலைநகரான திரிபோலியின் இலக்குகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருவதாக ஏ.எவ்.பி. செய்தி முகவர் நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல்களின் மூலம் லிபிய பாதுகாப்பு இலக்குகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 'தவிர்க்க முடியாத சட்டம் மற்றும் உரிமைகள்" தொடர்பாக லிபியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது என பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார்.

Saturday, March 19, 2011

18 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் இன்று “சூப்பர் பவுர்ணமி

ஜப்பானில் பூகம்பம், சுனாமியைத் தொடர்ந்து இன்று சூப்பர் பவுர்ணமி வருவதால் பூமியில் அழிவு ஏற்படும் என்று பீதி கிளம்பியது. சூப்பர் பவுர்ணமி என்பது சந்திரன் (நிலா) பவுர்ணமி நாளில் வழக்கமாக பிரகாசிக்கும் வெளிச்சத்தை விட இன்று 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக பிரகாசிக்கும். சந்திரன் இன்றைய தினம் பூமிக்கு அருகில் நெருங்கி வருகிறது. பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள சந்திரன் இன்று பூமியில் இருந்து 3 லட்சத்து 64 ஆயிரம் கி.மீ. தொலைவில் நெருங்கி வரும். பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 20 ஆயிரம் கி.மீ. குறைகிறது. இதனால் பவுர்ணமி தினமான இன்று சந்திரனின் வெளிச்சம் அதிகமாக இருக்கும். இதையே சூப்பர் பவுர்ணமி என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். சந்திரன் பூமியை நெருங்கி வருவதால் அதன் ஈர்ப்பு விசை அதிகரிக்கும். இதனால் பூமியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அலைகள் ஆர்ப்பரிக்கும். பூமியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்பட்டது. இது குறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மைய மேற்கு பிராந்திய துணை இயக்குனர் ஆர்.வி.சர்மா கூறுகையில், இன்றைய சூப்பர் பவுர்ணமியால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை. வானிலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது, கடல் அலைகளின் தாக்கம் மட்டும் சற்று கூடுதலாக இருக்கும் என்றார். நேரு அருங்காட்சியக இயக்குனர் பியூஷ் பாண்டே கூறுகையில், சந்திரன் பூமிக்கு அருகில் வருவதும், பவுர்ணமி பிரகாசமாக தோன்றுவதும் ஒன்றாக நடைபெறுகிறது அவ்வளவுதான். ஆனால் அடுத்து இது போன்ற சூப்பர் பவுர்ணமியை நாம் காண 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றார்.

Thursday, March 17, 2011

பேராபத்தை விளைவிக்கும் அளவுக்கு ஜப்பானில் அணுக்கதிர் வீச்சு அதிகரிப்பு

ஜப்பானின் புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் இரண்டு உலைகள் வெடித்துச் சிதறியதை அடுத்து, மக்களுக்குப் பேராபத்து விளைவிக்கும் அளவுக்கு அணுக்கதிர்வீச்சின் அளவு அதிகரித்திருக்கிறது என பிரதமர் நவோட்டோகான் தெரிவித்துள்ளார். ஜப்பானில் கடந்த 11ஆம் திகதி ஏற்பட்ட பயங்கர பூகம்பம், ஆழிப்பேரலை ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போது அணுக்கதிர்வீச்சு அபாயம் அதிகரித்து வருகிறது.தலைநகர் டோக்கியோவிலிருந்து 250 கி.மீற்றர் வடகிழக்கில் அமைந்துள்ள புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில், ஆறு அணுமின் உலைகள் செயல்படுகின்றன. இவற்றில் ஒன்றாம் எண் உலை கடந்த 12 ஆம் திகதியும், மூன்றாம் எண் உலை 14ஆம் திகதியும் வெடித்தன. 2ஆம் உலை வெடிப்பு: கடந்த 14ஆம் திகதி இரவு, இரண்டாம் எண் உலையில், குளிரூட்டும் முறைகள் தோல்வியடைந்தன. தொடர்ந்து "கோர்" எனப்படும் யுரேனியக் கம்பிகள் உருகின என செய்திகள் வெளியாகின. இத்தகவலை ஜப்பானிய அதிகாரிகள் மறுக்கவில்லை. ஜப்பான் நேரப்படி, செவ்வாய்க் கிழமை காலை 6.10 மணிக்கு இரண்டாம் எண் உலை வெடித்துச் சிதறியது. இதில், உலையைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள முதல் நிலைச் சுற்றுச் சுவர் சேதமடைந்தது. 4ஆம் உலையில் திடீர் தீ: இதற்கிடையில் செவ்வாய்க் கிழமை காலை ஜப்பான் நேரப்படி 9.40 மணியளவில், நான் காம் எண் உலையில் திடீரென தீப்பிடித்தது. பல மாதங்களுக்கு முன்னரே பராமரிப்புக்காக அந்த உலை மூடப்பட்டிருந்தது. ஆனால், உலையிலிருந்த "கோர்" கம்பிகள், அங்கிருந்து அகற்றப்படாமல், நீரில் மூழ்கியிருக்கும்படி வைக்கப்பட்டிருந்தன. தீ விபத்து குறித்து ஆய்வு செய்த நிபுணர்கள் கூறுகையில்,"கோர் கம்பிகளைச் சுற்றியிருந்த நீர் வற்றியிருக்கக் கூடும். அதனால் உலைக்குள் வெப்பம் அதிகரித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். இச்சம்பவம் மற்ற மூன்றில் நடந்திருப்பதை விட பேராபத்தை விளைவிக்கக் கூடியது'' என்று கூறினர். இதையடுத்து, டாய் இச்சியைச் சுற்றி 30 கி.மீற்றர் வட்டாரத்தில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறும்படியும், அந்த வட்டாரத்தில் வெளியேறாமல் உள்ள ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேரும் வீட்டை விட்டு வெளியே வராமல், ஜன்னல்கள், கதவுகள் ஆகியவற்றை மூடிக்கொள்ளும்படியும், ஏசி பயன்படுத்த வேண்டாம் எனவும் அரசு அறிவித்தது. டாய் இச்சி நிலையத்தில் பணியாற்றும் 800 ஊழியர்களும் ஏற்கனவே, அந்த வட்டாரத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டனர். உலைகளுக்குள் கடல் நீரைச் செலுத்தி வெப்பத்தைக் குறைக்கும் பணியில் தற்போது 50 பணியாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் எச்சரிக்கை: அடுத்தடுத்து அணுஉலைகள் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பிரதமர் நவோட்டோ கான், கதிர்வீச்சு குறித்து மக்கள் பீதி அடையவேண்டாம். அதே நேரம், டாய் இச்சியிலிருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டு பரவி வருகிறது. இந்தக் கசிவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தார்.

Friday, March 4, 2011

லிபியாவில் குண்டுவீச்சு: அமைதிப்பேச்சும் நடக்கிறது

லிபியாவில் எண்ணெய் வளம் மிக்க பிரிகா நகரில், ராணுவ விமானங்கள் மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளன.லிபியாவின் எண்ணெய் வளமிக்கது பிரிகா நகரம். லிபியா எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நகரத்தை கூலிபடையினரின் உதவியுடன் கைப்பற்ற, கடாபி ஆதரவாளர்கள் முயற்சி செய்தனர். ஆனால், இதை எதிர்கட்சியினர் நேற்று முன்தினம் முறியடித்தனர். இந்நிலையில் நேற்று பிரிகா நகரில் ஆயில் இன்ஜினியரிங் பல்கலைகழகத்துக்கு பக்கத்தில் போர் படை விமானங்கள் குண்டு வீசியதாகவும், இதனால், அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டதாகவும் பிரகா நகரத்தை சேர்ந்தவர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் திரிபோலியில் மக்களிடையே உரையாற்றிய கடாபி குறிப்பிடுகையில், " ஆட்சியை விட்டுக்கொடுக்க முடியாது. லிபியாவின் எண்ணெய் வளத்தை சுரண்டவே சிலர், இங்கு புரட்சியை தூண்டி விடுகின்றனர். வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலால் தான், இங்கு போராட்டம் நடக்கிறது. அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளை லிபியாவில் அனுமதிக்க முடியாது. மீறி நுழைந்தால் ரத்த ஆறு ஓடும். ஆயிரக்கணக்கான லிபிய மக்கள் பலியாவார்கள். கடவுளின் துணையோடு கடைசி மனிதன் இருக்கும் வரை, நாங்கள் போராடுவோம்' என்றார். லிபிய தலைவர் கடாபியின் நெருங்கிய நண்பர் வெனிசுலா அதிபர் ஹக்கோ சாவெஸ். கடாபிக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருவதால், எதிர்ப்பாளர்களை அழைத்து பேச, அரபு லீக் பொது செயலர் அமர் மூசா நடவடிக்கை எடுக்க வேண்டும், என சாவெஸ் யோசனை தெரிவித்துள்ளார். சாவெஸின் யோசனையை மூசா, கடாபியிடம் தெரிவித்துள்ளார். "அமைதி நடவடிக்கைகளை செயல்படுத்துவது குறித்து கடாபி ஆலோசித்து வருகிறார்' என, மூசா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சொத்து குவிப்பு: இதனிடையே, நான்கு கண்டங்களில் உள்ள 35க்கும் அதிகமான நாடுகளில் கடாபி எஸ்டேட்டுகள், ஓட்டல்கள், வங்கிகள், ராணுவ தளவாட தொழிற்சாலைகள் என பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக, அமெரிக்காவின் சி.என்.என்., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஜினி கமல் சேர்ந்து நடிப்பார்களா

ரஜினி - கமல் சேர்ந்து நடிப்பார்களா என்ற கேள்வியை கிட்டத்தட்ட 30 வருடங்களாய் ரசிகர்கள் சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு ரஜினி பெரும்பாலும் பதிலே சொல்வதில்லை. கமலும் சரியான பதிலைத் தருவதில்லை. இந்த மூவரும் இணைந்த கூட்டணியில் உருவான படங்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆனவை. இன்றும் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் ரசித்துப் பார்க்கப்படுபவையாக உள்ளன. ஆனால் இப்போது இந்த பெரும் நட்சத்திரங்கள் மீண்டும் இணைந்து நடிக்கிறார்களாம். ஆனால் முழு சினிமாவில் அல்ல... ஒரு குறும்படத்தில். இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் இருவருக்கும் குரு என்ற ஸ்தானத்தில் உள்ள கே.பாலச்சந்தர். கதை வசனத்தை முதல்வர் கலைஞர் எழுதுகிறார். பையனூரில் சினிமாக்காரர்களுக்காக அரசு ஒதுக்கியுள்ள இடத்தில் கட்டப்படும் ஸ்டுடியோ மற்றும் இதர அரங்குகளின் அடிக்கல் நாட்டுவிழாவின்போது இந்த குறும்படத்தின் ஷூட்டிங்கும் நடக்க இருக்கிறது. ரஜினியும் கமலும் அந்த விழாவிலேயே இந்தப் படத்தை நடித்துக் கொடுக்கப் போகிறார்களாம். அப்பாடா! இந்த சேதியே ரசிகர்களுக்கு ஆத்மதிருப்தியைத் தருமே....

Thursday, March 3, 2011

லிபியாவை நோக்கி விரைகின்றன அமெரிக்க போர்க்கப்பல்கள் _

லிபியாவை நோக்கி விரைகின்றன அமெரிக்க போர்க்கப்பல்கள். இவை கடாபிக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. லிபியா நாட்டில் ஜனாதிபதி கடாபிக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் வலுவடைந்துள்ளது. பெங்காசி, மிஷ்ரதா, ஷாவியா உள்பட பல நகரங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர். போராட்டத்தை அடக்கவும், அவர்கள் வசம் உள்ள நகரங்களை மீட்டு தங்கள் வசம் கொண்டு வரவும் கடாபி ராணுவத்தை முடுக்கி விட்டுள்ளார். கிழக்கு பகுதியில் உள்ள 2 முக்கிய நகரங்களை மீட்கும் நடவடிக்கையாக கடும் தாக்குதலை தொடுத்து உள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர். அவரது அடக்குமுறைக்கு ஐ.நா. சபை உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பல நாடுகள் லிபியா மீது பொருளாதாரத்தடை விதித்து உள்ளன. இதற்கிடையே, அந்த நாடு மனித உரிமைகளை மீறிவிட்டதாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பில் இருந்து லிபியாவை விலக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கப் போர்க்கப்பல்கள் விரைகின்றன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்படி அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இங்கிலாந்து பிரதமர் கேமரூனும் ஏற்கனவே கேட்டுக்கொண்டும் கடாபி கேட்கவில்லை. ஆகவே மக்கள் மீது குண்டு வீசும் லிபியாவின் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை விடுத்தார். கடாபிக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்கா 2 போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் லிபியாவுக்கு அனுப்பி வைத்தது. கேர்சர்ஜ், போன்ஸ் என்ற அந்த 2 போர்க் கப்பல்களும் நேற்று சூயஸ் கால்வாயை சென்று அடைந்துள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday, March 2, 2011

மகா சிவராத்திரி

மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்".சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். 1. மகாசிவராத்திரி 2. யோகசிவராத்திரி 3. நித்திய சிவராத்திரி 4. பட்ஷிய சிவராத்திரி 5. மாத சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவாயலங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.இவ்விரத்தின்போது திருமுறை ஓதல் மிகச்சிறப்பானதாகும். குறிப்பாகத் தேவாரத்தில் திருவண்ணாமலைப் பதிகங்களும் சிவபுராணமும் ஓதுதல் சாலச் சிறந்தது. இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.

Tuesday, March 1, 2011

மாணவர்கள் பாடங்களைத் திட்டமிட்டுத் தெரிவு செய்ய வேண்டும்

உயர்தர வகுப்பு மாணவர்கள் தமது பாடங்களைத் தெரிவு செய்யும் போது பல்கலைக்கழகத்தையும் எதிர்காலத்தையும் திட்டமிட்டு பாடங்களை தெரிவு செய்ய வேண்டும் என மட்டக்களப்பு தொழில் நுட்பக்கல்லூரி விரிவுரையாளரும் தொழில் வழிகாட்டல் ஆலோசகருமான எஸ். தியாகராஜா தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தொழில் வழிகாட்டல் ஆலோசனை கருத்தரங்கில் விரிவுரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் பாடசாலை மாணவர்களின் நோக்கு பல்கலைக்கழகம் செல்வதாகவே இருக்கவேண்டும். அப்போது தான் எம்முடைய இலக்கு நிறைவேறுவதற்கான உந்து சக்தி நமக்குக் கிடைக்கும். ஒவ்வொருவரும் உயர்தரத்தில் பாடங்களைத்தெரிவு செய்யும் போது தொழில் நோக்கத்தை மறந்து விடக்கூடாது-

கிபீர் விமானங்கள் இரண்டு நேருக்குநேர் மோதி விபத்து

கம்பஹா மாவட்டத்தில் இரண்டு கிபீர் விமானங்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். விமானப்படையின் அறுபதாவது நிறைவையொட்டி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டிருந்த விமானப் படைக்கு சொந்தமான கிபீர் ஜெட் விமானங்கள் இரண்டே நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் விபத்தில் சிக்கிய விமானிகள் இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகுறது. இதேவேளை சம்பவ இடத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன் விஜயம் செய்து பார்வையிட்டுள்ளார்.இஸ்ரேல் நாட்டுத் தயாரிப்பில் உருவானவை கிபீர் விமானங்கள். ஆரம்பகாலங்களில் இஸ்ரேலிய தொழில்நுட்பவியலாளர்கள் தயாரிப்புகளுக்கு அதிகமான பங்களிப்பு செய்திருந்த போதிலும் பின்னர் அதில் அமெரிக்காவின் ஊடுருவலும் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிபீர் போர் விமானங்களை இலங்கை 1995,96 ஆம் ஆண்டுகளில் முதலில் கொள்வனவு செய்தது. விடுதலைப் புலிகளுடனான யுத்தம் உக்கிரகட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியில் கிபீர் விமானங்கள் படையினரால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்கு இந்த கிபீர் விமானங்களே உதவின. இலங்கை விமானப் படையினரிடம் கிபீர் சி2 மற்றும் சி7 ரக விமானங்கள் ஐந்திற்கும் அதிகமாக கையிருப்பில் உள்ளதுடன் மேலதிக இரண்டு விமானங்கள் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு விமானத்தின் பெறுமதி சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.