Friday, April 29, 2011
உலகம் முழுவதும் 200 கோடி பேர் ரசித்த ராயல் திருமணம்
லண்டன்: பிரிட்டன் இளவரசர் வில்லியமுக்கும்(28) அவரது நீண்ட நாள் தோழியும், காதலியுமான கதே மிடில்டனுக்கும்(29) நேற்று, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சில், கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், 1,900 வி.ஐ.பி., விருந்தினர்கள் நேரடியாக கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் தொலைக்காட்சிகள் வழியாக, 200 கோடி பேர் பார்த்து மகிழ்ந்தனர்.
வேல்ஸ் இளவரசர் சார்லஸ், மறைந்த இளவரசி டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம், தனது நீண்ட நாள் தோழியும், காதலியுமான கதே மிடில்டனை நேற்று கரம் பிடித்தார். இவர்களின் திருமணத்தைக் கண்டு களிக்கவும், மணமக்களை நேரில் பார்த்து வாழ்த்தவும், நேற்று முன்தினம் முதல், பக்கிங்காம் அரண்மனையில் இருந்து, வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச் வரையிலான வழியில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். நேற்று காலை பக்கிங்காம் அரண்மனையில் இருந்து, ராணி எலிசபெத்துடன் மணமகன் வில்லியமும், தனது தந்தையுடன் மணமகள் மிடில்டனும், வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சுக்கு காரில் வந்தனர். அவர்களுக்கு முன்பாக, இளவரசர் பிலிப், இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமீலா, வில்லியமின் சகோதரர் ஹேரி ஆகியோர் வந்து காத்திருந்தனர். மணமக்கள் வந்த பின், பேராயர் ரோவன் வில்லியம்ஸ் இருவருக்கும் மண உறுதிமொழி செய்வித்தார். அந்த உறுதிமொழியில் வரக் கூடிய,"கணவருக்குக் கட்டுப்பட்டு' என்ற வார்த்தையை கதே மிடில்டன் சொல்லவில்லை. அதற்கு பதிலாக,"கணவரிடம் அன்பு செலுத்துவேன்' என்று மட்டுமே சொன்னார். தொடர்ந்து, வில்லியம், மிடில்டனின் மோதிர விரலில், தங்க மோதிரத்தை அணிவித்தார். அடுத்து, பைபிளில் இருந்து சில வாசகங்கள் படிக்கப்பட்டன. "பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால், இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று அறிவிக்கிறேன். ஆமென்' என்று பேராயர் தெரிவித்தார்.
மணமக்களை வாழ்த்தும் விதத்தில் பல்வேறு பாடல்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து, மணமகன் வில்லியம், கேம்பிரிட்ஜ் அரசர் என்றும், மணமகள் கதே மிடில்டன் கேம்பிரிட்ஜ் அரசி என்றும் ராணி எலிசபெத்தால் பட்டம் சூட்டப்பட்டனர். திருமணத் துக்கான ஆவணத்தில், இருவரும் கையெழுத்திட்டனர். பின்னர், மணமக்கள் சர்ச்சில் இருந்து வெளியே வந்து, அரச குடும்பத்துக்குச் சொந்தமான பாரம்பரியமிக்க சாரட் வண்டியில் பக்கிங்காம் அரண்மனைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதே வண்டியில் தான், 1981ல் சார்லஸ் - டயானா தம்பதிகள் ஊர்வலம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வழியெங்கும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், உற்சாகமாகக் குரல் எழுப்பியும், கையசைத்தும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சில இடங்களில், மணமக்கள் படம் நடுவில் பொறித்திருந்த தேசியக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. நேற்று இரவு பக்கிங்காம் அரண்மனையில், 650 வி.ஐ.பி.,க்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு, ராணி எலிசபெத் சிறப்பு விருந்தளித்தார். திருமண நிகழ்ச்சியை காலையில் இருந்தே, பி.பி.சி., உள்ளிட்ட பல்வேறு சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பின. வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சுக்கு வெளியே, நூற்றுக்கணக்கான பத்திரிகைகளின் நிருபர்கள் தங்கள் புகைப்படக் கலைஞர்களுடன் செய்தி சேகரித்தபடி இருந்தனர்.
யார் இந்த கதே மிடில்டன்? வில்லியமின் தாயார் மறைந்த டயானா, பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்தவர். ஆனால், தற்போது பக்கிங்காம் அரண்மனையின் மருமகளாகியுள்ள கதே மிடில்டன், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரிட்டனின் பெர்க்ஷைர் பகுதியைச் சேர்ந்த மிடில்டன், பிரிட்டன் ஏர்வேசில் அதிகாரியாக பணியாற்றியவர். இவர் தான் கதேவின் தந்தை. சில ஆண்டுகளுக்கு முன், மிடில்டன்,"பார்ட்டி பிசெஸ்' என்ற மெயில் ஆர்டர் நிறுவனத்தை துவக்கினார். இதில் பணம் கொட்டியது. இதனால், மிடில்டன் குடும்பம் கோடீஸ்வர குடும்பம் ஆனது.
தெருக்கள் எங்கும் "பார்ட்டி'கள்
* வில்லியம் - மிடில்டன் திருமணத்தைக் கொண்டாடும் வகையில், லண்டன் நகரில் உள்ள தெருக்கள், வீடுகள், "பப்'புகளில் கோலாகலமாக நேற்று 5,000 "பார்ட்டி'கள் கொண்டாடப்பட்டன.
* நேற்று நடந்த திருமணத்தை நேரடியாக ஒளிபரப்புவதற்காக, 8,500 பத்திரிகையாளர்கள் லண்டனில் குவிந்தனர். 180 நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
* மிடில்டனின் சொந்த கிராமத்தில் நடந்த ஒரு பார்ட்டியில், இரண்டரை அடி உயர கேக், மக்களால் வெட்டப்பட்டு, திருமணம் கொண்டாடப்பட்டது.
* உலகம் முழுவதும் 200 கோடி பேர் நேரடி ஒளிபரப்பை கண்டுகளித்தனர். பல கோடி பேர் "ட்விட்டர்' "பேஸ்புக்' மூலம் திருமண நிகழ்ச்சியைப் பற்றி விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர்.
திருமண உடை ரகசியம்
* மணமகள் கதே மிடில்டன்னின் திருமண உடை பற்றிய தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. பாரம்பரியத்தைப் பேணும் வகையில், வெளிர் சந்தன நிறத்தில் அவர் "கவுன்' எனப்படும் உடை அணிந்திருந்தார். அவரது உடையின் பின்புறம் மிக நீண்ட பட்டாடை பொருத்தப்பட்டிருந்தது. அதை தாங்கிப் பிடிக்க, இளம் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
* நீல வைரம் பொருத்தப்பட்ட கிரீடத்தை மிடில்டன் தன் தலையில் அணிந்திருந்தார். இந்த கிரீடம், 90 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய ராணி மேரியால் அணியப்பட்டது.
* மணமகன் வில்லியம், தனது கவுரவ பதவியான அயர்லாந்து கர்னல் பதவிக்குரிய சிகப்பு உடையை அணிந்திருந்தார்.
* திருமணத்திற்கு அறிகுறியான மோதிரம் மாற்றும் நிகழ்ச்சியில், மிடில்டனில் விரலில் வில்லியம் மோதிரம் அணிவிக்கும் போது, சிறிது தடுமாறினார். பின் சமாளித்தபடி மோதிரம் அணிவித்தார்.
* இந்த மோதிரம் பரம்பரை பரம்பரையாக அரச குடும்பத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இம்மோதிரத்தை, ராணி எலிசபெத் தனது பேரன் வில்லியமிடம் அளித்தார்.
வயதை மறைத்த "கதே'வின் உடை: பிரிட்டன் இளவரசர் வில்லியம்சிற்கும் அவரது நீண்ட நாள் தோழியான கதே மிடில்டனுக்கும் நேற்று பிரமாண்டமாக திருமணம் நடந்தது. அரச குடும்பத்தின் திருமணத்தில் பல சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், மணமகளின் திருமண உடை மீது சற்று கூடுதல் கவனம் இருக்கும். திருமணத்திற்கு முன்பே கதேவின் திருமண உடை குறித்து தகவல்கள் வந்தவாறு இருந்தன.
இது குறித்து சுவாரஸ்யமான தகவல்கள்:
* கதே மிடில்டன் அரச குடும்பத்தின் பாரம்பரியமான வெள்ளை மற்றும் யானை தந்தம் நிறத்தில் கவுன் அணிந்திருந்தார்.
* ஐந்த மாதமாக உடையை தயார் செய்பவர்களுக்கான தேடல் நடந்தது.
* இறுதியாக அலெக்சாண்டர் மெக் குயின் நிறுவனத்தின் "கிரியேட்டிவ் டைரக்டர்' ஷாரா பட்டன் வடிவமைத்தார்.
* கவுனின் நீளம் 8.8 அடி.
* உடையுடன் இணைந்திருந்த வலை (லேஸ்) ராயல்ஸ் "ஸ்கூல் ஆப் நீடில் வொர்க்' என்ற இடத்தில் தயார் செய்யப்பட்டது.
* கதே அணிந்திருந்த "ஷூ' மெக்குயின் நிறுவனத்தின் பிரத்யேக தயாரிப்பு.
* பெற்றோர் பரிசளித்த வைர கம்மலை கதே அணிந்திருந்தார்.
* இந்த உடையில் கதேவை நேரில் பார்த்தாலும் போட்டோக்களில் பார்த்தாலும் வயதை கணக்கிட இயலாது. இதுவே இந்த உடையை அவர் தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம்.
* கதே, கையில் வைத்திருந்த பூங்கொத்தை ஷான் கானோலி என்பவர் வடிவமைத்திருந்தார். லில்லி ஆப் வேலி, ஸ்வீட் வில்லியம் போன்ற நறுமண மலர்களால் இந்த பூங்கொத்து வடிவமைக்கப்பட்டது. லில்லி ஆப் வேலி என்றால் மகிழ்ச்சி பொங்குவது என்று அர்த்தம். அதே போல் ஸ்வீட் வில்லியம் என்றால் பாராட்டுதலுக்குரிய நடத்தை என்று அர்த்தம். இந்த பூங்கொத்தை "மிரில்' என்று அழைப்பார்கள். இதற்கு திருமணம் மற்றும் காதலின் சின்னம் என்று அர்த்தம்.
* 1945ல் விக்டோரியா மகாராணியால் உருவாக்கப்பட்ட பூந்தோட்டத்திலிருந்து "மிரில்' பூக்கள் பறிக்கப்பட்டுள்ளது.
Labels:
ராயல் திருமணம்
Sunday, April 24, 2011
சாய்பாபாவின் சரித்திரம்
பகவான் சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவுற்றதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு அதிசய நிகழ்வு என்று ஈஸ்வரம்மா தெரிவித்தார்.
குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் சாய்பாபா திறமையாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் இருக்கும் போது, தேள் ஒன்று சாய்பாபாவை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் அவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பா பாவின் உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்த வர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கற்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். (ஷீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர்.
இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்). சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தி யாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப் பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப் பட்டு 1950ல் நிறை வடைந்தது. 1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்து வமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர் களாக தொடர்ந்தனர்.
சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்ய படுத்தினார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்தார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.
இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா, நரசிம்மராவ், வெங்கடராமன், பி.டி. ஜாட்டி, எஸ்.பிரித்திவிராஜ் சவான், சந்திரசேகர், அர்ஜுன் சிங், ராஜேஷ்பைலட், சங்கரானந்த், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இவரது பக்தர்கள். ரவிசங்கர், எம்.எஸ். சுப்புலட்சுமி, நானி பல்கி வாலா, டி.என். சேஷன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களும் இவரது பக்தர்களாக உள்ளனர்.1993 ஜூன் 6ல் சாய்பா பாவை கொல்ல நடந்த ¬முயற்சி சர்வதேச செய்தியானது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும் உயர்த்தின. ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் இவர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இவரது தரிசனத்தை பெறுகின்றனர்.
சமூகத் தொண்டு:ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடை கின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங் களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது. சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங் களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்."அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.
சாய்பாபாவின் சேவைகள் : * சத்ய சாய் தனது பக்தர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சமூக சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள 136 நாடுகளில் இவை இயங்கி வருகின்றன.
* சமூகம், கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட பல துறைகளில் இவரது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
* பெங்களூருவில் உள்ள பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் முதியோருக்காக "விருத்தாஸ்ரமம்' என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
* பாபா குறித்த நூல்கள், "சிடி'க்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகிறது.
* ஆந்திராவில் உள்ள அனந்தபூர், வடக்கு கோதாவரி மற்றும் கிழக்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரே ஆண்டில் அம்மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.
* ஒயிட்பீல்டு ஆசிரமம் அருகே சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்øகாக வரும் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
* சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த தெலுங்கு கங்கை திட்டத்தை சரி செய்து தீர்வு வழங்கியது சாய் பாபாவின் சாயி மத்திய அறக்கட்டளை.
* நாட்டில் இயற்கை பேரழிவு ஏற்படும் சமயங்களில் அப்பகுதியில் உள்ள சாயி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் உதவிகள் செய்கின்றனர்.
""எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடு'' : 1976ல் நடந்த நிகழ்ச்சி இது. சாய்பாபா பிருந்தாவனத்தில்(சாய்பாபாவின் இருப்பிடம்) இருந்தார். இன்ஜினியர்கள் சில கட்டடத் திட்டங்களை வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். சாய்பாபா அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, ""டியர் பா#ஸ், உங்களுக்காக ஒரு ஹாஸ்டலை கட்ட ஏற்பாடு செய்திருக்கிறேன். அது வசதியான அறைகள் கொண்டதாக இருக்கும்,'' என்றார்.
ஒரு மாணவர் பாபாவை நோக்கி, ""சுவாமி! நாங்கள் இங்கு சுகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். புதிய ஹாஸ்டல் எங்களுக்குத் தேவையில்லை. இந்த பிருந்தாவனமே எங்களது இல்லம்'' என்றார். ""அன்புள்ள குழந்தைகளே! பிருந்தாவன் உங்களது என்று சொல்வது சரியே. அதே சமயத்தில் சிறுவர்களாகிய நீங்கள் இடம் போதாமல் முடங்கிக் கிடப்பதைப் பார்த்து என் மனம் பொறுக்கவில்லை. உங்களுக்கு வசதி செய்து தருவது தான் என் கடமை. வரும் வியாழன் அன்று புதிய ஹாஸ்டலுக்கான அடித்தளம் போடப்படும்'' என்று சொல்லிவிட்டு தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களுக்கு ஆசி அளிக்க கிளம்பினார்.
அடுத்த இரண்டுநாட்களுக்குள் அடித்தளமிடும் பூமிபூஜை நடக்க இருந்தது. இன்ஜினியர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள். மாணவர்களுக்கு இச்செயல் பிடிக்கவில்லை. அடுத்தநாள் ஹாஸ்டலுக்கு பாபா வந்தபோது, வயதில் சிறிய மாணவன் ஒருவன், பாபாவின் கையில் ஒரு கடிதத்தைத் தந்தான். அவர் அதைப் படித்து விட்டு சிரித்து விட்டார். வார்டனை வரச் சொல்லி அதை உரக்கப் படிக்குமாறு கூறினார். அதில் கீழ்க்கண்டவாறு இருந்தது.
""அன்பு மிக்க சாயி அம்மா! தங்களின் மலர்ப்பாதங்களுக்கு எங்கள் பணிவான வணக்கம். தங்களுக்கு எங்களிடம் வருத்தமா? தங்களின் அமைதியை நாங்கள் கெடுக்கிறோமா? ஒழுக்கவிதிகளை மீறி கட்டுப்பாடின்றி நடக்கிறோமா? அவ்வாறு இல்லாவிட்டால் பிருந்தாவனத்தின் எல்லையை விட்டு எங்களை ஏன் அனுப்ப முயற்சி செய்ய வேண்டும்? மிகவும் ரம்மியமான இந்த பிருந்தாவனத்தில் தான் நாங்கள் இனிமையையும், அன்பையும், பாதுகாப்பையும் நெருக்கமாக நாங்கள் உணர்கிறோம். வானுலக தேவர்கள் கூட இந்த அன்பை, ஆனந்தத்தை அனுபவிக்க ஆசைப்படுவார்கள்.''
இதயம் நிறைந்த பாசத்துடன் தங்கள் குழந்தை
பின்குறிப்பு: பிருந்தாவனத்தில் இருந்து வெகு தூரத்தில் புதிய ஹாஸ்டல் கட்டவேண்டும் என்று தாங்கள் உறுதியாக இருந்தால், தயவு செய்து தங்களுக்கும் ஒரு புதிய இல்லம் அமைத்துக் கொண்டு எங்களுக்கு மிக அருகிலேயே இருக்க வேண்டுகிறோம். வார்டன் இக்கடிதத்தைப் படித்து முடித்ததும், கண்ணீர் விடாத மாணவர்கள் யாருமே இல்லை. ஒரே குரலில் அனைவரும், ""சுவாமி! தயவு செய்து எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கெஞ்சினர். இதைக் கண்டு பாபாவின் உள்ளம் உருகியது. அவர் உடனே தலைமை இன்ஜினியரை அழைத்து, வரைபடங்களை வேறு மாதிரி வரையும்படி கேட்டுக் கொண்டார்.
பிருந்தாவன பகுதிக்குள்ளேயே புதிய ஹாஸ்டலைக் கட்டுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த பரபரப்பான செய்தியைக் கேட்டதும் மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். பூமிபூஜை நாளன்று ஆரத்திக்கான விளக்கை ஏற்றும்போது மாணவன் ஒருவன், ""சுவாமி! நீங்கள் எங்களுக்காக எவ்வளவோ செய்கிறீர்கள். தங்களுக்குக் கொடுக்க எங்களிடம் ஒன்றும் இல்லையே!'' என்ற சொல்லி கண்ணீர் விட்டான். அதற்கு பாபா""ஆனந்தக் கண்ணீர், உன் மிருதுவான கன்னத்தில் வழிகிறதே! அது போதாதா? எனக்கு வேண்டியது அதுவே! எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்து! நான் மிகவும் விரும்புவது உன் மகிழ்ச்சி மட்டுமே!'' என்றார். பிருந்தாவன் அமைப்பில் உள்ள உயர்ந்த கட்டிடம் பாபா மாணவர்கள் மீது கொண்டுள்ள அளவற்ற அன்புக்கு ஒரு இனிய நினைவுச் சின்னம்.
பிறப்பும் இறப்பும் எனக்கில்லை : ஒருமுறை பிறந்த நாள் விழாவில் சத்யசாய்பாபா சார்பில் ஒரு செய்தியை சாய்பக்தர் ஒருவர் வாசித்தார். அதில், ""இந்த உடலுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஆனால், நீங்கள் எனக்கு அன்பின் காரணமாக விழா எடுக்கிறீர்கள். ஆம்...அன்பே உலகில் மிக உயர்ந்த சக்தி. இங்கே அனைவரும் ஒன்று கூடி சகோதர, சகோதரிகளாக அமர்ந்துள்ளீர்கள். உலகத்தில் சாந்தி ஏற்பட நாம் முயற்சிக்க வேண்டும். குறுகிய உணர்வைக் கொன்றுவிட்டு ஒற்றுமையையும், கூட்டுறவையும் வளரச் செய்தால் அதுவே உண்மையான மனிதத்தன்மையாகும்,'' என்று கூறப்பட்டிருந்தது.
""துயரத்தைத் தாங்கும் சக்தியைத் தருகிறேன்'' அன்றே சொன்னார் சத்யசாய்பாபா : ராமபிரானைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதிய ராமசரண் என்ற பண்டிதர் பாபாவின் பக்தர். அவர் உடல் உபாதைகளால் அவதிப்பட்டார். ராமசரணின் நண்பர்கள் பாபாவிடம் சென்று நிவாரணம் பெற்றுவரும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், "வினைப்பயனை அனுபவித்துக் கழிப்பதே நல்லது' என்றார் ராமசரண். ராமசரண் படும் இந்த துன்பம் குறித்து பாபா ஒருமுறை குறிப்பிட்டார். ""கடவுள் எப்போதும் காப்பாற்ற மாட்டார் மற்றும் தண்டனையும் அளிக்கமாட்டார். நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நான் உங்களுக்கு அளித்த பரிசுகள். அவைகள் என்னால் உண்டாக்கப்பட்டவையல்ல. அவைகளை உருவாக்குபவர்கள் நீங்களே,'' என்றார். ""அப்படியானால் துன்பங்களை நீக்க கடவுளின் பங்குதான் என்ன? என்றார் ஒரு பக்தர்.அதற்கு பதிலளித்த பாபா ""நான் உங்களுக்கு துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமை அளிக்கிறேன். தூக்கமுடியாமல் சில்லரைக் காசு மூடையைச் சுமந்து வருபவனிடம் ரூபாய் தாளாக மாற்றித் தந்தால் சுமை எப்படி குறையுமோ, அதுபோல துயரங்களைச் சுமந்து வருபவனின் சுமையை குறைத்து லேசாக்கிவிடுகிறேன். அப்போது துயரச்சுமை உன்னை அழுத்துவதில்லை'' என்றார்.
Labels:
சாய்பாபாவின் சரித்திரம்
சாய்பாபா ஸித்தியடைந்தார்
புட்டபர்த்தி: அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு ஸித்தியடைந்தார் . இவருக்கு வயது 85 . பாபாவின் உடலை இன்று மாலை 6 மணியிலிருந்து குல்வந்த் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வரும் புதன்கிழமை இறுதிச் சடங்கு நடைபெறும்.
கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இவரது உடல் நிலை குறித்து சாய் மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை அறித்து அறிவிக்கை வெளியிட்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர்.
பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது. இதனை சாய் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். இவரது மறைவு துயரச்செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
ஆந்திரா அரசு 4 நாள் துக்கம் அனுஷ்டிப்பு : வரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்படும். பாபா உடல் அடக்கம் செய்யபப்டும்போது அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கும். சாய்பாபா மறைவுக்கு ஆந்திரா அரசு மாநிலம் முழுவதும் 4 நாள் துக்கம் அனுஷ்டிக்கிறது அனந்தபூர் மாவட்டம் முழுவதும் இந்நாளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. என மாநில அரசு வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
உயிர்த்தெழுந்தாரே ஜெயித்தெழுந்தாரே
ஈஸ்டர் கொண்டாடுவதன் நோக்கம்: இயேசு உயிர்த்தெழுந்தார், இன்றும் ஜீவிக்கிறார் என்ற நம்பிக்கையுடன் ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. அவரது பிறப்பை கிறிஸ்துமஸ் என்கிறோம். ஈஸ்டரை ஒட்டி ஜெருசலேம் நகரில் மக்கள் பவனி வருவதை குருத்தோலை ஞாயிறு என்கிறோம். சீடர்களால் அவர் காட்டிக்கொடுக்கப்பட்டதை "பெரிய வியாழன்' என்றும், அவரது மரண நாளை "புனித வெள்ளி' என்றும் நினைவு கூர்கிறோம். சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை சந்தித்து, தான் கூறிய படியே, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த சம்பவமான, "ஈஸ்டர்' பெருநாளே, உலக வரலாறுக்கு வித்திட்ட நாளானது.
பூமியில் தோன்றிய அரசர்கள், அறிஞர்கள், தலைவர்கள் அனைவருமே ஒரு நாட்டுக்காக, ஒரு குலத்துக்காக பிறந்து வாழ்ந்து இறக்கின்றனர். அவர்கள் பிறப்பது பற்றிய தகவல் ஏதும் நமக்கு தரப்படுவதில்லை. ஆனால், இயேசு பிறக்க இருப்பதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தனர். அவரது பிறப்பு முதல் இறப்பு வரை என்னென்ன நடக்கும் என்பதை எடுத்துரைத்தனர். இதுபற்றி பைபிளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, அவர்கள் சொன்ன அனைத்து வார்த்தைகளும் நிறைவேறியுள்ளது. ""உயிரோடிருக்கிறவரை, நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுவதென்ன? அவர் இங்கே இல்லை, உயிர்த்தெழுந்தார்,'' என பைபிள் வசனம் கூறுகிறது.
உலக வரலாறு பற்றி பைபிள் கூறுவதைக் கேளுங்கள். முதல் மனிதனான ஆதாம், கடவுளின் கட்டளையை மீறி செய்த பாவத்தால், ஒட்டுமொத்த மனுக்குலமே பாவ வாழ்க்கையை தொடர்ந்தது. தான் படைத்த மனுக்குலம், தன்னை போல் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்றே கடவுள் விரும்பினார். மனிதனும், ஒவ்வொரு முறையும் தான் செய்யும் பாவ செயலால் மன வேதனை அடைந்தான். அதற்கு பரிகாரமாக, கடவுளின் மன்னிப்பை பெற விலங்கு, பறவைகளின் ரத்தத்தை கடவுளுக்கு பலியாக செலுத்தினான். ஆனாலும், பாவச்செயல் தொடர்ந்தது. இதில் இருந்து மக்களை விடுவிக்க கடவுள் ஒரு கன்னிப்பெண்ணின் வயிற்றில் பிறந்தார். யூத மக்கள் மத்தியில் முன்மாதிரியாக வாழ்ந்து தன்னை வெளிப்படுத்தினார். ஆனால், கடவுளின் கட்டளைகளை மீறி வாழ்ந்த யூதர்கள் புதிய கட்டளைகளை வாழ்க்கை முறைகளை மாற்றி கொள்ள விரும்பாமல் இயேசுவை ஒழித்து கட்ட திட்டம் தீட்டினர். அப்போது இயேசுவின் சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் 30 வெள்ளிக்காசுக்காக அவரை காட்டிக்கொடுத்தான். இயேசுவும் சிலுவை மரணத்தை சந்தித்து, தன் ரத்தத்தை சிந்தி, மனுக்குல பாவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். "" தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக எப்போதும் பரிசுத்தமாக வாழவேண்டும்,'' என பைபிள் தெளிவுபடுத்துகிறது.
ஈஸ்டர் காலத்தில் மக்கள் தவவாழ்வு வாழ்கின்றனர். தங்கள் சுகங்களை குறைத்துக் கொள்கின்றனர். ஆனால், ஆண்டுதோறும் 40 நாட்கள் மட்டுமே விரதம் இருந்தால் போதாது. மீதியுள்ள நாட்களிலும் பாவவாழ்வுக்கு ஒரு சதவீதம் கூட இடம் கொடுக்கக்கூடாது. நமக்கு 'ஈஸ்டர்' உணர்த்தும் தத்துவம் இதுவே.
உயிரை கொடுத்தார்; உலகை மீட்டார்: இயேசு மரித்த பிறகு அவரது உடலையும், சிலுவையில் அறையப்பட்ட மற்றவர்களின் உடலையும் சிலுவைகளிலிருந்து அகற்றப்பட வேண்டிய நேரம் வந்தது. அவர்கள் இயேசு அறையப்பட்டிருந்த சிலுவையின் அருகில் வந்தனர். அவர் மரித்துபோயிருந்தார். ஒரு போர்சேவகன் அவரது விலாவில் குத்தினான். உடனே ரத்தமும், தண்ணீரும் வெளிப்பட்டது. இதன் பிறகு யோசேப்பு, மன்னன் பிலாத்துவிடம் சென்று, இயேசுவின் சரீரத்தை எடுத்துக் கொண்டு போக அனுமதி கேட்டார். பிலாத்துவும் அனுமதித்தான். இயேசுவின் உடல் அருகே வந்த நிக்கோதேமூன் என்பவன் இயேசுவின் சரீரத்தில் மணம் மிக்க சுகந்தப்பொருட்களைத்தடவி, துணியில் சுற்றி கட்டினான். கண்மலையில் வெட்டியிருந்த கல்லறைக்குள் இயேசுவின் சரீரத்தை வைத்தனர். கல்லறை வாசலில் பெரிய கல்லைப்புரட்டி வைத்தார்கள். அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருள்நீங்காத பொழுதில் ஆண்டவருடைய கல்லறைக்கு மகதலேனா மரியாள் என்பவரும், யாக்கோபின் தாயாகிய மரியாள் சலோமியும் சுகந்த வார்க்கங்களை கொண்டு சென்றனர்.
கல்லறைக் கல்லை எப்படிப்புரட்டுவது என்று அவர்கள் பேசிக்கொண்டே சென்றனர். கல்லறை அருகே சென்றதும் கல் புரண்டு கிடந்ததைப் பார்த்தனர். "இதை யார் அகற்றியிருக்கக் கூடும்?'' என்றவர்களாய், கல்லறைக்குள் எட்டிப்பார்த்தனர். உள்ளே இயேசுவின் உடல் இல்லை. அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இயேசுவின் சீடர்களான சீமோன் பேதுரு, யோவான் ஆகியோரிடம் சென்று, ""யாரோ ஆண்டவரை கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடத்தில் அவர் இல்லை,'' என்று சொன்னார்கள். இதன்பிறகு மற்ற பெண்களும் கல்லறைக்கு சென்றார்கள், அப்போது பிரகாசமுள்ள ஆடையணிந்த இருவரை கண்டார்கள். அந்தப்பெண்கள் நடுக்கமும், திகிலும் அடைந்தவர்களாய் கல்லறையை விட்டு அகன்றனர். அவர்கள் செல்லும் வழியில் இயேசு வந்து கொண்டிருந்தார். அவர்களை "வாழ்க' என்று வாழ்த்தியதுடன், அவர்களை நோக்கி, ""பயப்படாதிருங்கள், நீங்கள் போய் என் சீடர்கள் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள், அவர்கள் அங்கே என்னைக் காண்பார்கள்,'' என்றார். இயேசு உயிர்த்தெழுந்த அதேநாளில் இரண்டு பேர் எம்மோவு நகரத்துக்குச் சென்றனர். அவர்களது முகம் துக்ககரமாக இருந்தது. அவர்களை இயேசு பார்த்தார்.""நீங்கள் ஏன் துக்கத்துடன் இருக்கிறீர்கள்?'' எனக் கேட்டார். அதற்கு அவர்கள், ""இயேசு என்ற தீர்க்கதரிசி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். அவரது உடலைக் கூட கல்லறையில் காணவில்லை,'' என்றனர். உடனே இயேசு அவர்களை நோக்கி, ""கிறிஸ்து தமது மகிமைகளை வெளிப்படுத்தும் நிலையில், இந்த பாடுகளையெல்லாம் அடைந்து தீரவேண்டுமல்லவா?'' என்றார்.இறந்த பிறகும் கூட விலா எலும்பில் குத்துப்பட்டவர் இயேசுபிரான். தெய்வீகமான அவர், மக்களை நல்வழிக்கு திருப்ப உயிரையே கொடுத்தார். தன்னுயிர் கொடுத்தேனும் பிறருக்கு சேவை செய்ய வேண்டும் என மக்களுக்கு உணர்த்தினார். இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த நன்னாளில் அவரது போதனைகளைப் பின்பற்றி நடக்க உறுதி கொள்வோம்.
ஈரமுள்ள இருதயம் இருக்கட்டும்: இங்கிலாந்தில் ஆலிவர்கிராம்வெல் ராணுவ தளபதியாக இருந்த போது ஒழுக்க விதிமுறைகள் கடுமையாக இருந்தன. ஒருசமயம் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளம்வீரனை விசாரித்தார் ஆலிவர். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. ""நாளை மாலை ஆலயமணி அடிக்கும் போது இவன் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்,'' என உத்தரவிட்டார். மறுநாள் ஆலிவருடன் அதிகாரிகள், மக்கள் கூடினர். துப்பாக்கியுடன் ஒருவன் வீரனின் தலையை குறி வைத்தான். அனைவரும் மணிச்சத்தத்திற்காக காத்திருந்தனர். தண்டனை நேரம் கடந்துவிட்டது. மணி அடிக்கவே இல்லை. அப்போது, ஒரு பெண் கை எலும்பு நொறுங்கி ரத்தம் வழிய வந்தாள். அவள் ஆலிவரிடம், ""பிரபு, குற்றம் சாட்டப்பட்ட இவருக்கும், எனக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவருக்கு தண்டனை என அறிவிக்கப்பட்டதும் நேற்றே மணிக்கூண்டில் ஏறி, மணியின் இரும்பு நாக்கைப் பிடித்துக் கொண்டேன். மணி அடித்தவர் வேகமாக கயிறை இழுத்தார். நான் கையால் மணியின் நாக்கை பிடித்திருந்ததால் நாக்கு மணியின் மீது படவில்லை. மாறாக கயிறை இழுத்த வேகத்தில் என் கை முறிந்தது. மணியடிப்பவனுக்கு காது கேட்காது என்பது தங்களுக்கு தெரியும். அவன் மணியடித்துவிட்டதாக எண்ணி போய்விட்டான். இவரை எனக்காக விடுவியுங்கள்,'' என்றாள். ஆலிவரின் மனதில் கூட ஈரம் பொங்கியது. அந்த வீரனை விடுவித்தார். கர்த்தரும் இப்படித்தான், நாம் செய்த பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார். அவர் அடைந்த தழும்புகளால் நாம் குணமானோம். அவர் மரித்து நம்மை காத்தார். அவரை ஈஸ்டர் மட்டுமல்ல, எந்நாளும் நினைவு கொள்வோம்.
2426 மொழிகளில் எழுதப்பட்ட நூல்: கிறிஸ்து பிறப்பதற்கு 4000 ஆண்டு காலத்திற்கு முற்பட்ட வரலாறும், அவர் பிறந்த பின் உலகம் முடியும் வரை உள்ள நிகழ்வுகளும் பைபிளில் உள்ளது. ஆதாம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் படைப்பும், இயேசுவின் பிறப்பும் அதில் கூறப்பட்டுள்ளது. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பிரிவாக இருக்கிறது. உலகம் முழுவதும் 2426 மொழிகளில் உள்ள ஒரே நூல் பைபிள் மட்டுமே. பைபிளை பற்றிய இன்னும் ருசிகரமான தகவல்களைத் தெரிந்து கொள்வோமா!
* ஜெர்மனியில், விஞ்ஞானி ஜான் குட்டன்பர்க் கி.பி.,1450ல் அச்சு இயந்திரம் கண்டுபிடித்தார். அதில் முதல் நூலாக பைபிளை அச்சிட்டார்.
* கி.மு.,1500 முதல் கி.பி.,55 வரை, 40க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசிகளால் அந்தந்த கால நிகழ்வுகளாக எழுதிய கடவுள் வார்த்தையாக பைபிள் நம்பப்படுகிறது.
* முதன்முதலாக எழுதப்பட்ட பைபிளின் பிரதி ஒன்று, அமெரிக்கா நியூயார்க் நகரிலுள்ள பொது இறையியல் கல்லூரியில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
* இத்தாலி, வாடிகன் நகரில், தோல் சுருளில் எழுதப்பட்ட புதிய ஏற்பாடு பைபிளம் உள்ளது. ஒரு சுருள் 30 அடி நீளம் கொண்டது. இதுபோல 43 தோல் சுருள்களில் அது எழுதப்பட்டது. ஆடு, மாடு, ஒட்டகம், கழுதை தோல்கள் பயன்படுத்தப்பட்டன.
* இந்திய மொழிகளில் பைபிள் முதன் முதலாக மொழி பெயர்க்கப்பட்டது தமிழில் என்பது பெருமைக்குரிய விஷயம். ஜெர்மனி போதகர் சீகன்பால், தஞ்சாவூர் அருகே தரங்கம்பாடி வந்து தங்கினார். கி.பி.,1705ல், எபிரேய மொழியிலிருந்து, தமிழில் பைபிளை மொழி பெயர்க்க துவங்கி 1714ல் முடித்தார். அவர் எழுதிய முதல் மொழிபெயர்ப்பு பைபிள் ரோமிலுள்ள வாடிகன் நகரில் உள்ளது.
Saturday, April 23, 2011
டயானாவை முந்தினார் கேத் மிடில்டன்
அரச குடும்பங்களை சேர்ந்தவர்களில் அழகானவர்கள் குறித்து பியூட்டிபுள் பீப்புள் டாட் காம் ஆய்வு நடத்தியது. ஆய்வில் 1.27 லட்சம் பேர் கருத்துகளை பதிவு செய்தனர். அதில் வரும் 29ல் இங்கிலாந்து இளவரசர் வில்லியமை திருமணம் செய்யவுள்ள கேத் மிடில்டன் (29) 84 சதவீத வாக்குடன் 3வது இடத்தை பிடித்தார். இதையடுத்து வில்லியமின் தாயும் இறந்த இளவரசியுமான டயானா 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மேலும் இந்த பட்டியலில் மொனாக்கோ இளவரசியும் ஆஸ்கார் நாயகியுமான கிரேசி கெலி (91%) முதலிடமும், ஜோர்டான் ராணி ரனியா (90%) 2வது இடத்தையும் பிடித்தனர்.
Labels:
கேத் மிடில்டன்
Thursday, April 21, 2011
புனிதவெள்ளி
தேவனே எம்மைப் பாருங்கள் எம் பாவங்கள் தம்மை வாங்கிச் செல்லுங்கள்!
உலகில் எந்த மனிதன் இறந்தாலும், அந்த தினம் துக்க நாளாகத்தான் நினைவு கூறப்படுகிறது. ஆனால், இயேசுவின் சிலுவை மரண தினம் மட்டுமே, குட் பிரைடே என்றும், பெரிய வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. கடவுள் தன் சாயலில் ஆதாமை படைத்தார். அவன், கடவுளின் கட்டளையை மீறி நடந்த போது, கீழ்படியாமை என்ற பாவம் உட்பட பல தீய செயல்களால் மரணத்தை சம்பாதித்தான். எனவே பாவத்திலிருந்து விடுதலை பெற, அதற்கு பரிகாரம் தேட, இஸ்ரேல் மக்கள் பறவை, மிருகங்களை கொன்று அதன் ரத்தத்தை சிந்தி கடவுளுக்கு பலி செலுத்தினர். இதனால் பாவமன்னிப்பு பெற்றதாக திருப்திப்பட்டனர். இருப்பினும், பாவத்தை விட முடியவில்லை. இந்தக் கொடிய பாவ வழிகளில் இருந்து விடுபட கடவுள், இஸ்ரேல் மக்களுக்கு பத்து கட்டளைகளை விதித்தார். அதனையும் மக்கள் பின்பற்றவில்லை. பறவை, விலங்கின ரத்தத்தால் மக்களின் பாவத்தை கழுவ முடியாது, எனக்கருதிய கடவுள், மனுக்குலத்துக்காக தானே பலியாக வேண்டுமென்று தீர்மானித்தார். எனவே ஏழையாக, கன்னிப் பெண் மரியாளின் வயிற்றில் பாலகனாக அவதரித்தார். தனது 34வது வயதில் பாவத்திலிருந்து மக்களை விடுவிக்க தனது மாசில்லா பரிசுத்த ரத்தத்தை சிலுவையில் சிந்தினார்.
இயேசு தனது முப்பதாம் வயதில் ஞானஸ்நானம் எடுத்த பின், மூன்றரை வருடங்களாக பல அற்புதங்களை மக்களுக்கு செய்தார். இதனை சகிக்காத யூத மத குருக்களும், ஆசாரியர்களும் இயேசுவை கொல்ல சதி செய்தனர். பஸ்கா பண்டிகைக்கு ஜெருசலேம் சீடர்களுடன் ஜெருசலேம் சென்ற இயேசு, அதனை முடித்த பின், கெத்சமனே தோட்டத்துக்கு ஜெபம் செய்ய சென்றார். அப்போது இயேசுவை பிடிக்க, யூதமத குருக்கள், ஆசாரியர்களை அழைத்து சென்ற அவரது சீடரான யூதாஸ் காரியோத் 30 வெள்ளிக்காசுக்காக ஆசைப்பட்டு, அவரை முத்தமிட்டு காட்டிக்கொடுத்தான். பிரதான ஆசாரியன் வீட்டில் இயேசுவை இரவு முழுவதும் அடித்து, துன்புறுத்தி மரணத்துக்கு ஏதுவான பொய் சாட்சியை தயாரித்தனர். மறுநாள் ரோம அரசர் ஏரோதுவிடம் விசாரணைக்கு அழைத்து சென்று குற்றப்படுத்தினர். ஆனால், அரசரோ இவர் மீது குற்றம் காணாமல், கவர்னர் பிலாத்துவிடம் அனுப்பி வைத்தார். பிலாத்துவும் இவர்மீது எந்த குற்றமும் காணவில்லை. இவரின் ரத்தப்பலி என்மீது சுமராது, என கைகளை கழுவி, இவரை இஷ்டப்படி செய்யுங்கள், என கூறி இயேசுவை அவர்களிடம் ஒப்படைத்தார். பின் யூத மதக்குருக்கள் அதிகபட்ச தண்டனையாக சிலுவையில் அறைந்து கொல்ல முடிவு செய்தனர். இயேசுவை சாட்டையால் அடித்து, தலையில் முள்முடி சூட்டி, அதிக பாரமுள்ள சிலுவை மரத்தை தூக்க செய்து, கபாலஸ்தலம் எனப்படும் கொல்கொதா என்ற இடத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்று சிலுவை மரத்தில் ஏற்றினர். இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகள்: 1.கடவுளே, இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது, இன்னதென்று அறியாதிருக்கிறார்கள். 2.தனது வலது பக்கத்தில் இருந்த கள்ளனை பார்த்து, நீ இன்றைக்கும் என்னுடனே பரதீசிலிருப்பாய். 3.தன் தாயை நோக்கி, இதோ உன் மகன் என்றும், சீசன் யோவானை நோக்கி, இதோ உன் தாய் என்றார். 4.கடவுளே, கடவுளே ஏன் என்னை கைவிட்டீர். 5.தாகமாயிருக்கிறேன். 6. எல்லாம் முடிந்தது. 7.கடவுளே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன். நற்செயல்கள் புரிந்து, சிலுவை மரணத்தைச் சந்தித்து, மனிதகுலத்துக்காக, இயேசுநாதர் பாவமன்னிப்பை பெற்ற நாளே பெரிய வெள்ளி தினமாகும்.
Labels:
புனிதவெள்ளி
பகவான் சத்தியசாயிபாபா ஜீவசமாதி என்று பரவிய வதந்தியால் பக்தர்கள் புட்டபர்த்தி நோக்கி படையெடுப்பு
புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா உயிருடன் சமாதியாகப் போவதாக பரவிய தகவலை அடுத்து நேற்று பகவானின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்தியில் ஒன்று கூடியதுடன் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள்.பெருமளவி லான பக்தர்கள் சாயிபாபாவின் ஆஸ்பத்திரி முன் திரண்டதுடன் வீதிகளில் சாயிபாபாவின் படத்துடன் கண்ணீருடன் ஊர்வலம் வந்தனர்.
பகவானின் உண்மை நிலை யை அறியாமல் இந்த இடத்தை விட்டு செல்லப் போவதில்லை என அங்கு திரண்டிருந்த மக்கள் கண்ணீர் மல்க கூறினர். இதனால் புட்டபர்த்தியில் பகவானின் ஆச்சிரமம் உள்ள பகுதியிலும் பகவானின் வைத்தியசாலை உள்ள பகுதியிலும் பெரும் பரபரப்பு நிலவியது. மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாது பாதுகாப்பு பிரிவினர் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள்.
உலகெங்கிலும் கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்டவர் ஸ்ரீ சத்திய சாயி பாபா ஆன்மிக குருவாகத் திகழும் இவர் பல்வேறு அரிய செயல்களை நிகழ்த்திக் காட்டியவர். இவரை கடவுளின் அவதாரமாகவே பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர். புட்டபர்த்தி என்ற வரண்ட குக்கிராமத்தை இன்று உலகம் முழுவதும் தெரியும் நகரமாக மாற்றிய பெருமை சாயிபாபாவிற்கே உரியது. சுகாதாரம், குடிநீர், ஏழைகளுக்கு உதவி என பல்வேறு துறைகளில் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு உதவிகளைச் செய்தவர் சாயிபாபா. சென்னைக்கு குடிநீர் வழங்கும் தெலுங்கு கங்கைத் திட்டத்துக்கு அவர் தந்த உதவி மிகப் பெரியது.
அந்தக் கால்வாய் முழுவதையும் சீரமைக்க ஆகும் செலவை பாபா ஏற்றார். சென்னையை நாறடிக்கும் கூவத்தைச் சுத்தப்படுத்த ஆகும் செலவை ஏற்கவும் அவர் முன்வந்தார். இந்த நிலையில் சாயிபாபாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதயக் கோளாறு, சுவாசக் கோளாறு காரணமாக புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு சிறுநீரக கோளாறும் ஏற்பட்டதால் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணித்து வருகிறார்கள். 24 மணி நேரமும் டாக்டர்கள் அவரை அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள்.
சாயிபாபா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவர் கோமா நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து உறுப்புகளும் எந்திரம் மூலம் இயங்க வைக்கப்படுகின்றன. செயற்கை சுவாசம் தான் அளிக்கப்படுகிறது. டாக்டர்கள் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் சாயிபாபா உடல்நிலை சீராக இருப்பதாகவும் என்றாலும் கவலைக்கிடமான நிலையிலேயே அவர் உள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே சாயிபாபா ஜீவசமாதி அடையப் போவதாக தகவல் பரவியது.
சாயிசேவா தள உறுப்பினர் ஒருவர் உள்ளூர் தொலைக்காட்சிக்கு இவ்வாறு பேட்டி அளித்தார். சாயிபாபா ஜீவசமாதி அடைய இருப்பதாகவும் இதுபற்றி சாய் டிரஸ்ட் முறையான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
ஆனால், இது வெறும் வதந்தி என்றும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் சாய் டிரஸ்ட்டின் தலைமை அலுவலகமான பிரசாந்தி நிலையம் அறிவித்தது. ஆந்திர அரசு அதிகாரிகளும் இந்த தகவலை மறுத்தனர். சாயிபாபாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
கருத்து வேறுபாடு இதற்கிடையே சாய் டிரஸ்ட் உறுப்பினர்களில் ஒருவரும் சாயிபாபாவின் சகோதரர் மகனுமான ரத்னாகருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்து வருகின்றனர்.
Labels:
பகவான் சத்தியசாயிபாபா
Wednesday, April 13, 2011
வெற்றி கொடு வேல்முருகா: தமிழ் புத்தாண்டு 2011
தமிழ்ப்புத்தாண்டான இன்று, தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை இந்த ஸ்தோத்திரம் சொல்லி வழிபட்டால் சகல நன்மையும் அடையலாம்.
* மயில் மீது வலம் முருகப்பெருமானே! வள்ளி தெய்வானை மணாளனே! மனதைக் மயக்கும் அழகனே! தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமே! சிவபெருமானின் புதல்வனே! கந்தப்பெருமானே! இந்த புத்தாண்டு நன்னாளில் நல்வாழ்வு வேண்டி உன் பாதம் பணிகிறேன்.
* ஞானமே வடிவான ஆறுமுகப்பெருமானே! நீ என் உள்ளத்தில் வீற்றிருக்கின்றாய். அதனால், என் வாயில் இருந்து வரும் சொற்கள் மந்திரம் போல ஆற்றல் மிக்கதாய் இருக்கின்றன.
* மலை மீது ஆட்சி செய்யும் முருகா! மலையுச்சிக்கு வந்து உன்னைத் தரிசனம் செய்யும் எங்களுக்கு செல்வவளத்தை தந்து வாழ்விலும் உயர வைப்பாயாக.
* மலர்ந்த தாமரை போல் ஆறுமுகங்களைக் கொண்டவனே! பன்னிரு கண்களால் கருணை செய்பவனே! சிவகுமரனே! குகப்பெருமானே! மயில்வாகனனே! பக்தர்களின் துயர் தீர்ப்பவனே! என் முன்னே வந்து நின்று அருள்
புரிவாயாக.
* எல்லா உலகங்களையும் ஆணவத்துடன் ஆட்சிசெய்த நீதிக்கு புறம்பானவர்களை அழித்து
தர்மத்தை நிலைநாட்டியவனே! நீயே என் மனதில் குடியிருக்கிறாய். என் எண்ணத்தைத் தூய்மையாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டுவாய்.
* சக்தியின் புதல்வனான சண்முகனே! என் கண்களில் உன் திருவுருவம் மட்டுமே நிலைத்திருக்க வேண்டும். காதுகள் உன் திருநாமத்தை
மட்டுமே கேட்க வேண்டும். பெருமை மிக்க திருப்புகழை மட்டுமே வாய் பாட வேண்டும்.
உனக்கு மட்டுமே என் உடல் சேவை செய்ய வேண்டும்.
* நல்லவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! பக்தி என்றால் என்னதென்று அறியாத பாமரனுக்கும் அருள்புரியும் கருணைக்கடலே! உன்னையன்றி வேறு யாரையும் எனக்கு
தெரியாது. என் மனைவி, குழந்தைகள், உறவினர் அனைவரும் நல்வாழ்வு வாழ உன் திருப்பாதம் பணிகிறேன்.
* தமிழ்க்கடவுளே! தரணி போற்றும் செல்வனே! நான் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற இந்த புத்தாண்டில் எனக்கு அருள் செய்வாயாக.
புத்தாண்டு வழிபாட்டில் தமிழ்க்கடவுள் : புத்தாண்டு வழிபாட்டில் தமிழ் முருகனுக்கு தனியிடம் உண்டு. பிரபவ முதல் அட்சய முடிய தமிழ் ஆண்டுகள் அறுபது. இவை சுவாமிமலையில் படிகளாக இருப்பதாக ஐதீகம். இங்கு 60 படிகள் உள்ளன. முருகப்பெருமான் குருவாக வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு "குருமலை' என்றும் பெயருண்டு. சுவாமிமலை முருகனுக்கு "சுவாமிநாத சுவாமி' என்பது திருநாமம். சுவாமியாகிய சிவபெருமானுக்கே குருவாக திகழ்வதால் இப்பெயர். குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும் என்பர். இங்கு முருகப்பெருமானே குருவாக இருப்பதால் குருவருளையும், திருவருளையும் ஒருசேர நமக்கு அருள்புரிகிறார்.
அறுசுவை உணவு : தமிழ்ப்புத்தாண்டு நாளில் உணவில் அறுசுவையும் இடம்பெற்றிருக்கும். இப்பழக்கம் காலம் காலமாக நம் மண்ணில் பின்பற்றப்படுகிறது. இனிப்புக்காக அதிரசம், காரத்திற்காக காரவடை, புளிப்புக்காக மாங்காய் பச்சடி, உவர்ப்புக்காக முறுக்கு வத்தல், துவர்ப்புக்காக வாழைப்பூ மசியல், கசப்புக்காக வேப்பம்பூ பச்சடி ஆகிய உணவுகள் சாப்பாட்டில் இடம்பெறும். நாணயத்திற்கு இருபக்கங்கள் போல, வாழ்வில் இன்ப துன்பம் என்று இருவித அனுபவம் உண்டு. இனிப்பு வகைகளை மட்டும் சாப்பிட்டால் ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படும். அல்வா சாப்பிடுபவன் சிறிது மிச்சரையும் சாப்பிடுகிறான். இன்பமும் துன்பமும் கலந்த கலவையாக இருந்தால் வாழ்வில் தேடுதல் உணர்வு இருக்கும். உணவுக்கும், மன உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதனை உணர்த்துவதற்காகவே, புத்தாண்டின் துவக்கநாளில் அறுசுவையையும் உணவில் இடம்பெறச் செய்தனர்.
நல்வாழ்வு தரும் பராசக்தி: கரஆண்டின் ராஜாவாக சந்திரன் கிரகம் உள்ளது. சந்திரனுக்குஉரிய அதிதேவதை அம்பிகை. சந்திரமண்டலத்தில் பராசக்தியாகிய அம்பிகையின் உலகமான "சக்திலோகம்' இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அம்பிகையை வணங்கினால் கரஆண்டு முழுவதும் சுபிட்சமான வாழ்வு அமையும். பராசக்தி ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒவ்வொரு திருநாமத்தோடும் வடிவழகோடும் விளங்குகிறாள். மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, அபிராமி, சிவகாமி, காந்திமதி என்று அம்பிகைக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. கர புத்தாண்டு நாளில் அம்மனைத் தரிசித்தால் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். சந்திரனுக்குரிய பவுர்ணமி நாளில் விரதமிருந்து அம்மன் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவதும், அபிராமி அந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களை பாராயணம் செய்வதும் சிறப்பான பலன் தரும்.
Labels:
தமிழ் புத்தாண்டு 2011
சச்சினுக்கு வெள்ளிக் கோப்பை: பெங்களூர் ஜுவல்லரி பரிசளித்தது
பெங்களூரில் உள்ள ஜுவல்லரி சார்பில் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளியிலான மாதிரி உலகக் கோப்பை பரிசாக அளிக்கப்பட்டது.
இந்த கோப்பை சுமார் 4.5 கிலோ வெள்ளியாலும், 60 கிராம் தங்கத்தாலும் ஆனது. புதன்கிழமை நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக பெங்களூர் வந்த சச்சினுக்கு இந்த கோப்பை பரிசாக அளிக்கப்பட்டது.
Labels:
சச்சினுக்கு வெள்ளிக் கோப்பை
Friday, April 8, 2011
அதிரடி திருவிழா ஆரம்பம்! * மீண்டும் சாதிக்குமா சென்னை கிங்ஸ்
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடர் இன்று ஆரம்பமாகிறது. வீரர்களின் அதிரடி ஆட்டம், நடன மங்கைகளின் கவர்ச்சி ஆட்டம், பாலிவுட் நட்சத்திரங்களின் படையெடுப்பு என போட்டிகள், களை கட்ட உள்ளன. உலக கோப்பை வென்ற உற்சாகத்தில் காணப்படும் இந்திய கேப்டன் தோனி, மீண்டும் ஒரு முறை சென்னை அணிக்கு சாம்பியன் பட்டம் பெற்றுத் தர காத்திருக்கிறார்.
கடந்த 2008ல், 20 ஓவர்கள் கொண்ட ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடர் துவங்கப்பட்டது. கடந்து கடந்த மூன்று முறை இத்தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இம்முறை நான்காவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய புதிய அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. 51 நாட்கள் நடக்கும் இத்தொடரில், மொத்தம் 74 போட்டிகள் நடக்க உள்ளன. கடந்த மூன்று தொடர்களுடன் வீரர்களுக்கான பழைய ஒப்பந்தம் முடிந்த நிலையில், நான்காவது தொடரில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சில நட்சத்திர வீரர்கள் தவிர, மற்றவர்கள் வெவ்வேறு அணிகளுக்கு இடம் மாறியுள்ளதால், இம்முறை விறுவிறுப்பு அதிகமாகவே இருக்கும்.
சாதிப்பார் தோனி:
நடப்பு சாம்பியனாக களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதற்கு கேப்டன் தோனி தான் முக்கிய காரணம். சமீபத்தில் இந்திய அணிக்கு உலக கோப்பை வென்று தந்த குஷியில் காணப்படுகிறார். இவரது தலைமையில் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. தவிர, சாம்பியன் லீக் "டுவென்டி-20 தொடரிலும் கோப்பையை கைப்பற்றியது. இப்படி வெற்றி கேப்டனாக திகழும் தோனி, இம்முறையும் சாதித்துக் காட்டலாம்.
சென்னை அணியின் பேட்டிங் பலமாக உள்ளது. அதிரடி ஆட்டத்துக்கு முரளி விஜய், சுரேஷ் ரெய்னா உள்ளனர். உலக கோப்பை பைனலில் சிக்சர் அடித்து இந்தியாவுக்கு கோப்பை வென்று தந்த தோனியும் இருக்கிறார். நிலைத்து நின்று ஆட மைக்கேல் ஹசி, பத்ரிநாத் உள்ளனர். "ஆல்-ரவுண்டர் பணியை ஆல்பி மார்கல் கச்சிதமாக செய்வார். புதுவரவான டுவைன் பிராவோ காயத்தில் இருந்து மீளாதது பின்னடைவு.
முரளி இல்லை:
பந்துவீச்சு பலவீனமாக உள்ளது. வீரர்களுக்கான ஏலத்தில் முரளிதரனை கொச்சி அணி கொத்திச் சென்றதால், சுழலுக்கு அஷ்வின் மற்றும் ஜகாதியை நம்ப வேண்டியுள்ளது. வேகத்துக்கு போலிஞ்சர், குலசேகரா உள்ளனர். தோனியின் உத்திகள் கைகொடுத்தால், சென்னை அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.
Tuesday, April 5, 2011
இனிமையாகப் பேசுங்கள்
* எதைக் காப்பாற்றாவிட்டாலும் நாக்கைக் காக்க வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். ஆனால், இன்று உலகம் முழுக்க பேச்சுமயமாகவே மாறிவிட்டது.
* பேச்சைக் குறைத்தால் சண்டை சச்சரவு மறையும்.மேல்நாட்டில் கூட ""பேச்சு வெள்ளி என்றால் மவுனம் தங்கம்'' என்று தான் குறிப்பிடுகிறார்கள்.
* பேசும்போது ஒரு வார்த்தை கூட அதிகமாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். "கொட்டி விடலாம்! ஆனால், அள்ளமுடியுமா?' என்று பாமர ஜனங்கள் கூட கேட்பதுண்டு.
* மவுனத்தை ஞானத்தின் எல்லை என்பர். ஒரேயடியாக நம்மால் மவுனமாக இருக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவுக்கு பேச்சை குறைக்க முயற்சிக்கவேண்டும்.
* எப்போதுமே இனிமையாகப் பேச வேண்டும். மற்றவர் மனதைப் புண்படுத்தும் விதத்தில் பேசுவது நல்லதல்ல. நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் மேல்நிலைக்கு உயர்த்துவதாக மட்டுமே நம் பேச்சு இருக்கவேண்டும்.
* பணத்தை மட்டும் தான் அளவாகச் செலவழிக்க வேண்டும் என்றில்லை. பேச்சையும் கணக்காகப் பேசவேண்டும்.
-காஞ்சிப்பெரியவர்
Labels:
இனிமையாகப் பேசுங்கள்
Monday, April 4, 2011
மறக்க முடியாத தருணம் * சச்சின் பெருமிதம்
"சொந்த ஊரில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு உலக கோப்பை வென்றது, என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம், என, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார்.
இந்திய துணைக் கண்டத்தில், பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த இத்தொடரின் பைனலில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, 28 ஆண்டுகளுக்கு பின் கோப்பை வென்று சாதித்தது.
இதுகுறித்து இந்தியாவின் சச்சின் கூறியதாவது: சுமார் 28 ஆண்டுகளுக்கு பின், உலக கோப்பை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சொந்த ஊரில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு உலக கோப்பை வென்ற தருணத்தை, எனது வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது. இதைவிட வேறு எதையும் அடைய விரும்பவில்லை. இதன்மூலம் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோப்பை வெல்ல காரணமாக இருந்த சக வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அணியின் வெற்றிக்கு பின்னால் இருந்து ஊக்குவித்த பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், அப்டன் மற்றும் உதவியாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சச்சின் கூறினார்.
Sunday, April 3, 2011
இலங்கையை வீழ்த்தி கிண்ணம் வென்றது இந்தியா
இலங்கை இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதியாட்டக் காட்சிகளை கோல்பேஸ் மைதானத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் கண்டு களித்தனர். எனினும் இலங்கை அணி தோல்வி அடைந்ததும் ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி, மூச்சுப் பேச்சின்றி அவர்கள் கலைந்து சென்றனர்.
கோல்பேஸ் மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு பெரும் திரைகளில் இந்தக் காட்சிகளை மக்கள் கண்டு களித்தனர்.இந்த ஆட்டத்தில் இலங்கை தோல்வியடைந்ததையடுத்து மக்கள் ஆரவாரமின்றி அமைதியாகக் கலைந்து சென்றனர். கொழும்பில் வெடிகொளுத்தி ஆரவாரங்கள் ஏதும் இன்றி அமைதியாக மக்கள் வீடுகளுக்குள் தங்கியிருந்தனர்.
இதேவேளை, இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து யாழ். நகரில் இந்திய அணி ஆதரவாளர்கள் வெடி கொளுத்தி வெற்றியைக் கொண்டாடினர். ஆரம்பத்தில் இலங்கை அணி ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி ஆரவாரப்பட்டனர். எனினும் இறுதியில் அமைதியாகி விட்டனர்.இந்திய அணி ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக வெடி கொளுத்தி தமது மகிழ்ச்சியை இரவு 12 மணி வரை வெளிப்படுத்தினர். நன்றி: உதயன்
Labels:
கிண்ணம் வென்றது இந்தியா
Saturday, April 2, 2011
இன்று இந்தியா-இலங்கை மோதல்
ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை பைனலில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. ஒருபக்கம் விக்கெட் கீப்பர் கேப்டனாக தோனி என்றால், மறுபக்கம் விக்கெட் கீப்பர் கேப்டனாக சங்ககரா களமிறங்குகிறார். ரன் சாதனைக்கு சச்சின்... விக்கெட் சாதனைக்கு முரளிரதன் என, இரு தரப்பிலும் சூப்பர் வீரர்கள் உள்ளனர். இரண்டாவது முறையாக கோப்பை கைப்பற்ற இரு அணிகளும் காத்திருப்பதால், மும்பையில் அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
பத்தாவது உலக கோப்பை தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடக்கிறது. இதில், "நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட முன்னணி அணிகள் விரைவில் வெளியேறின. அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
பலவீனம் தெரியும்:
இரு அணிகளும் சமீப காலமாக நிறைய ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளதால், பலம் மற்றும் பலவீனம் பற்றி நன்கு அறியும். தவிர, ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்ற அனுபவமும் கைகொடுக்கும். உதாரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ரெய்னாவுடன் சேர்ந்து முரளிதரனும் விளையாடினார். எனவே, தோனியின் உத்திகள் பற்றி முரளிக்கு தெரியும். இதே போல மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின், ஹர்பஜனுடன் மலிங்கா விளையாடியுள்ளார். இவர்களும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள் என்பதால், திட்டம் வகுத்து செயல்படுவதில் சிக்கல் ஏற்படலாம்.
Labels:
உலக கோப்பை