Wednesday, July 28, 2010
டெங்கு காய்ச்சல்
குருதி முறிவுக் காய்ச்சல், ரத்த முறிவுக் காய்ச்சல் அல்லது 'டெங்கு' காய்ச்சல் மனிதர்களிடையே தீ நுண்மங்களால் ஏற்படும் ஒரு நோய் ஆகும். இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலும் கடுமையான மூட்டு வலியும் தசை வலியும் ஏற்படும். இந்நோய் 200 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது.
நோய் பரவும் முறை: தீ நுண்மத்தால் பாதிக்கப்பட்ட ஏடிஸ் (Aedes) வகைக் கொசுக்களால் (இலங்கை வழக்கு: நுளம்பு) இந்நோய் பரவுகிறது. ஆனால் இது ஒருவரிடம் இருந்து மற்றொரு இன்னொருவருக்குப் பரவுவதில்லை. நோய் பாதித்தவரை கடித்த கொசு மற்றொருவரை கடிப்பதன் மூலம் இந்நோய் பரவுகிறது. இக்கொசுக்கள் பொதுவாக பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இக்கொசு கடிக்கின்றது.
• நோயின் அறிகுறிகள்: நல்ல காய்ச்சல்
• கடும் தலைவலி
• கடுமையான மூட்டு மற்றும் தசை வலி
• வாந்தி
• அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்
பண்டுவ (மருத்துவ) முறை: நோய்க்கான குறிப்பிட்ட மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் பெரும்பாலும் இந்நோய் இரண்டு வாரங்களில் குணமாகி விடுகிறது. நல்ல ஓய்வு, நிறைய நீர்ம உணவு உட்கொள்ளுதல், காய்ச்சலுக்குத் தகுந்த மருந்து உட்கொள்தல் போன்றவை நோயின் கடுமையைக் குறைக்க உதவும்.
தடுப்பு முறைகள்:
கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ளல், கொசு உருவாகாமல் தடுக்க சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல் போன்றவை இந்நோயைத் தடுக்க உதவும்.
Tuesday, July 27, 2010
கணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய
பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.
சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.
இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் . எந்த சேதமும் ஏற்படாது.
உங்கள் கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரைக்கு வரும் )
இந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள் .
வினாடியில் கணினி அணைந்து விடும்.
Sunday, July 25, 2010
ஐ போன் மென்பொருள் பயன்படுத்தலில் ஆப்பிள் மீது நோக்கியா வழக்கு
ஐ போன் மென்பொருள் பயன்படுத்தலில் காப்புரிமை மீறப்பட்டதாக ஆப்பிள் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது மொபைல் தயாரிப்பில் முன்னோடியான நோக்கியா. ஐபோனில் ஜிஎஸ்எம், யுஎம்டிஎஸ் மற்றும் லோக்கல் ஏரியா நெட்வொர்க் (லான்) போன்ற தொழில் நுட்பப் பயன்பாட்டில் நோக்கியா தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது அப்பட்டமான காப்புரிமை மீறல் என்றும் நோக்கியா தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஆப்பிள் போனில் உள்ள வயர்லெஸ் டேட்டா, ஸ்பீச் கோடிங், செக்யூரிட்டி உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களிலும் நோக்கியா தொழில் நுட்பமே உள்ளதாகவும், இதுகுறித்து தங்களுக்கும் ஆப்பிளுக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை, இது அப்பட்டமான காப்புரிமை மீறல் என்றும் நோக்கியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் டிலெவர் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்துள்ள ஆப்பிள் பதில் நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாக அறிவித்துள்ளது.
Saturday, July 24, 2010
பிரிட்டனின் மிகப்பிரபலமான முதல் 10 மொழிகளில் தமிழும்
பிரிட்டன் தலைநகரான லண்டனில் மிகப்பிரபலமான மொழிகளில் தமிழ் மொழி முதல் 10 இடங்களுக்குள் இருக் கிறது என லண்டன் மெட்ரோ பொலிற் றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசர உதவிகளுக்காக பொலிஸாரை
அழைக்கும் முதல் 10 மொழிகளில் தமிழ் மொழியும் உள்ளடங்குகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளொன்றுக்கு சராசரியாக 8 ஆயிரம் அவசர அழைப்புகளும், 12 ஆயிரம் அவசரம் சாராத அழைப்புகளும் தமிழ் மொழி பேசுபவர்கள் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த வரிசையில் உள்ள ஏனைய மொழிகளாக போலந்து, ரோமான், பஞ்சாப், போர்த்துக்கல், ஸ்பெனிஸ், துருக்கிய மொழி, சோமாலி, பிரெஞ்சு மற்றும் பெங்காளி என்பனவும் உள்ளடக்கப்படுகின்றன.
இதேவேளை பிரிட்டனில் ஆங்கிலம் தவிர தமிழ் மொழியிலும் அவசர அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்றும் பொலி ஸார் அறிவித்து அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரிட்டனுக்குச் சென்ற தமிழர்களின் காரணமாகவே தமிழ்மொழி அங்கு முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது எனக் கூறப்படுகிறது.
Monday, July 19, 2010
ஜபுலானி பந்து 74,000 டொலருக்கு ஏலம்
உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஜபுலானி பந்து 74,000 டொலர்களுக்கு ஏலம்போனது.
கடந்த 11 ஆம் திகதி ஜொஹன்னஸ்பேர்க்கில் நடந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 10 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட் டிக்கு அடிடாஸ் நிறுவனத்தின் ஜபுலானி பந்து பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்து இணையதள ஏலத்தில் விடப்பட்டது. 133 பேர் பங்கேற்ற இந்த ஏலத்தில் ரசிகர் ஒருவர் 74,000 டொலர்கள் கொடுத்து வாங்க முன்வந்தார்.
ஏலத்தின் மூலம் பெறப்பட்ட தொகை தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மன்டேலாவின் கல்வி மற்றும் ஆரõய்ச்சி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை வறுமையால் வாடும் குழந்தைகளுக்கும், எயிட்ஸ் நோய் பõதித்தவர்களுக்கும் உதவுகிறது.
Labels:
ஜபுலானி பந்து
Sunday, July 18, 2010
நாடு முழுவதும் வெகு தீவிரமாகப் பரவிவரும் டெங்கு
கொழும்பு,ஜூலை18
நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தி அதனை ஒழித்துக்கட்ட படையினர் மற்றும் பொலி ஸாரைக் கொண்ட விழிப்புணர்வுச் செய லணி ஒன்றை அரசாங்கம் அவசரமாக உடனடியாக உருவாக்கவிருக்கிறது.
நாடு முழுவதும் செயற்படத்தக்க வகை யில் ஆயிரம் பேரைக் கொண்டதாக இந்தச் செயலணி உருவாக்கப்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.
படை அதிகாரிகள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், சிப்பாய்கள், பொலிஸார் ஆகி யோர் அங்கம் பெறும் இந்தச் செயலணி டெங்கு ஒழிப்புச் செயற்பாட்டு நடவடிக் கைகளை முன்னெடுக்கும்.
டெங்கு தீவிரமாகப் பரவிவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்ததை அடுத்தே இந்தச் செயலணி உருவாக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி 700 பேர் மரணமாகியுள்ளனர் என்றும் சுமார் 10 ஆயிரம் பேர் நோய்பாதிப்புக்குள்ளாகி இருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளன என்றும் சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.
Friday, July 16, 2010
இந்திய ரூபாய்க்கு புதிய சின்னம் அறிமுகம்
சர்வதேச அங்கிகாரம் பெற்ற நாணயங்களுக்கு குறியீடுகள் இருக்கின்றன. அந்தவகையில் இந்திய ரூபாய்க்கும் புதிய சின்னமொன்றினை இந்திய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
இந்திய நிதியமைச்சர் பிரணாப் முஹர்ஜி நாடாளுமன்றில் வரவு- செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்து உரையாற்றும்போது சர்வதேச தரத்தின் இந்திய கலாசாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இந்திய ரூபாய்க்கு சின்னமொன்றினை உருவாக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்திய ரூபாய்க்கு சின்னம் உருவாக்கும் போட்டி அறிவிக்கப்பட்டது. வெற்றிபெறுபவருக்கு இந்திய ரூபாய் 2.5 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.
அதற்கமைய அனுப்பிவைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான சின்னங்களை ஐந்துபேர்கொண்ட நடுவர்குழு பரிசீலித்து, அதில் ஐந்து சின்னங்களை மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது. அந்த ஐந்து சின்னங்களிலிருந்து கான்பூரில் ஐஐடி படிக்கும் மாணவர் உதயக்குமார் உருவாக்கிய சின்னத்தினை தேர்வுக்குழு தெரிவுசெய்திருக்கிறது. இந்திய மத்திய அரசினால் தெரிவுசெய்யப்பட்ட ரூபாய் சின்னத்தினை, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தி உரையாற்றும்போது… இந்திய நாணயத்தின் மதிப்பு சர்வதேச மட்டத்தில் உயர்ந்திருக்கும் இத்தருணத்தில் இந்தச் சின்னம் அறிமுகப்படுத்தியிருப்பது பொருத்தமானதே. இன்றும் ஆறு மாதங்களில் இந்தச் சின்னம் நடைமுறைக்கு வரும் எனக் குறிப்பிட்டார்.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் ரூபாயினைப் பயன்படுத்திவருகின்றன. சின்னத்தினை உருவாக்கிய உதயக்குமார் குவஹாத்தியிலுள்ள ஐஐடியில் நாளை பேராசிரியராக பணியில் இணைகின்றார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
Labels:
இந்திய ரூபாய்
2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்
இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறித்து மத்திய அரசு சார்பாக ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 100 ஆண்டுகளில் இந் திய மக்கள் தொகை 5 மடங்காக அதி கரித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தி யாவில் 119 கோடியே 80 லட்சம் மக்களும், சீனாவில் 134 கோடியே 50 லட்சம் மக்களும் இருந்தனர். இந்தியாவில், கடந்த 5 ஆண்டுகளில் 1.4 சதவீதம் உயர்ந்துள் ளது. ஆனால், சீனாவைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 0.6 சதவீதம் மட் டுமே மக்கள் தொகை அதிகரித்தது.
எனவே, இதே வீதத்தில் சென்றால் 2050 ஆம் ஆண்டில் சீனாவை இந்தியா முந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்தியாவில் உள்ள மக்கள் தொகையை விட 2026 ஆம் ஆண்டில் கூடுதலாக 37 கோடியே 10 லட்சம் மக்கள் அதிகரித்து விடுவார்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் இருப் பார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களிலும் சேர்த்து 13 சதவீதம் பேர் இருப்பார்கள்.
அதேநேரத்தில், பாகிஸ்தானை பொறுத் தவரை 2009 ஆம் ஆண்டில் 18 கோடி மக் கள் தொகை இருந்தது. அங்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 2.2 சதவீதம் என்ற அளவில் மக்கள் தொகை அதிகரித்துள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, July 15, 2010
மனித அறிவை மிஞ்சும் கணணி 2020குள் வரும்
மனித அறிவுக்கு இணையாக செயல்படக் கூடிய கணினி, வரும் 2020ம் ஆண்டுக்குள் சாத்தியமாகும் என அமெரிக்க கம்பியூட்டர் வல்லுனர் குருரே கர்ஸ்வில் தெரிவித்துள்ளார்.
'அக்சலர்ரேட்டிங் ரிட்டர்ன்ஸ் விதி' (law of accelerating returns) இதற்கு பேருதவியாக இருக்கும் என தாம் நம்புவதாக கூறினார்.
தொழில்நுட்பத்துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால், மனித அறிவை மிஞ்சும் நவீன கணினியும் உருவாக்கப்படும் என்பதில் எவ்வளவும் சந்தேகமில்லை என்றும் குருரே தெரிவித்தார்.
மனிதனின் உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் முதுமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்தால், மனித ஆயுளை நீட்டிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
Monday, July 12, 2010
உலக கோப்பை இறுதிபோட்டி : ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் பெற்றது
உலகம் முழுவதும் கோடானு கோடி கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியில் ஐரோப்பிய அணிகளான நெதர்லாந்தும், ஸ்பெயினும் மோதின. இந்த போட்டியில் முழு நேரம் வரை எந்த அணியும் கோல் போடவில்லை. இதனையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் ஸ்பெயின் அணி முதல் கோல் போட்டு சாம்பியன் பட்டம் வென்றது. ஆக்டோபஸ் பால் கூறியது போல் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
ஆக்டோபஸ் பால் கணித்தது போல் 8/8 வெற்றி:
ஆக்டோபஸ் பால்: 2 வயதான இந்த ஆக்டோபஸ் பால் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாட்டுக் கொடிகள் அடங்கிய உணவுத் தொட்டிக்கு அருகே விடப்பட்டது. அப்போது சரியாக ஸ்பெயின் கொடி அடங்கிய தொட்டியை அது அழகாக பற்றிக் கொண்டது. ஆக்டோபஸ் பால் கணித்தது போல் நடந்த 8/8 போட்டியும் சரியாக பலித்தது.
கோல்டன் ஷீ மற்றும் கோல்டன் பால் விருது:
தென் ஆப்ரிக்கா : உலகம் முழுவதும் கோடானு கோடி கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் பெற்றது, இதில் கோல்டன் ஷீ விருது மற்றும் கோல்டன் பால் விருது வழங்கப்பட்டது, கோல்டன் ஷீ விருதை தாமஸ் முல்லர் (ஜெர்மனி) நாட்டை சேர்ந்தவர் தட்டிச்சென்றார். இவரே உலக கால்பந்து போட்டியின் இளம் வீரர் என்ற பட்டத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் கோல்டன் பால் விருதை டீகோ போர்லன் (உருகுவே) நாட்டை சேர்ந்தவர் தட்டிச்சென்றார்.
Sunday, July 11, 2010
உலக கால்பந்து சாம்பியன் யார்
ஜோகன்னஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர், தென் ஆப்ரிக்காவில் இன்று வண்ணமயமான கலைநிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் இறுதிப் போட்டியில் நெதர்லாந்து & ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
உலக முழுவதும் 215 நாடுகளில் 260 கோடிக்கும் அதிகமானோர் இறுதி போட்டியின் நேரடி ஒளிபரப்பை கண்டு ரசிப்பார்கள். கடந்த மாதம் 11ம் தேதி, 19வது உலக கோப்பை போட்டி தென் ஆப்ரிக்காவில் கோலாகலமாகத் தொடங்கியது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் 2006ல் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி, 2வது இடம் பிடித்த பிரான்ஸ் அணிகள் லீக் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில், அர்ஜென்டினா அணிகளும் கால் இறுதியில் பரிதாபமாக தோற்றன.
அரை இறுதியில் தோற்ற ஜெர்மனி, உருகுவே அணிகள் 3வது இடத்துக்கு மோதின. இந்நிலையில், இன்று நள்ளிரவு தொடங்கும் பரபரப்பான இறுதிப் போட்டியில் நெதர்லாந்து & ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால், புதிய அணி சாம்பியன் பட்டம் வெல்வது உறுதியாகி உள்ளது.
Friday, July 9, 2010
உதைப்பந்தாட்டம்
இப்போதெல்லாம் உலகம் முழுவதும் ஈர்க்கப்படுவது உதைப்பந்தாட்டமே. அரையிறுக்கு முன்னேறிய ஸ்பெயின் தனது பலத்தை நெதர்லாந்துடன் மோதிக் காட்டி யார் இறுதியில் வெல்வது என இரு அணிகளுமே அல்லலோகப்படுகின்றன. உலக உதைப்பந்தாட்டம் 1930ஆம் ஆண்டில் முதன் முதலில் தொடக்கிவைக்கப்பட்டது. உதைப்பந்தாட்டம் என்றால் என்ன? அதன்வரலாற்றை சற்றுப் பார்ப்போம்.
கால்பந்து என்பது ஒரேமாதிரியான பலகுழு விளையாட்டுக்களின் பெயர், அவை அனைத்தும் பந்தை கால்களைக்கொண்டு உதைத்து கோலைப் பெற (வெவ்வேறு கோணங்களில்) முயற்சிக்கும் செயலில் ஈடுபடுகின்றன. சங்கக் கால்பந்து என்பது உலக அளவில் இந்த விளையாட்டுக்களில் மிகவும் பிரபலமானது, மேலும் பொதுவாக வெறும் "கால்பந்து" அல்லது "சாக்கர்" என்று அறியப்படுகின்றது. இருப்பினும் கால்பந்து என்ற வார்த்தை கால்பந்து வடிவத்தில் உள்ள அனைத்து விளையாட்டிற்கும் பொருந்துகின்றது, இது உலகத்தின் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியிலும் மிகவும் பிரபலமானது. ஆகவே ஆங்கில மொழி வார்த்தையான "ஃபுட்பால்", "கிரிட்அயர்ன் கால்பந்து" (இந்தப் பெயர் வட அமெரிக்க விளையாட்டுக்களுடன், குறிப்பாக அமெரிக்க கால்பந்து மற்றும் கனடிய கால்பந்து ஆகியவற்றுடன் தொடர்புடையது), ஆஸ்திரேலிய கால்பந்து, கேலிக் கால்பந்து, ரக்பி லீக், ரக்பி யூனியன் மற்றும் தொடர்புடைய விளையாட்டுகளுக்குப் பொருந்துகின்றது
இந்த விளையாட்டுக்கள் உள்ளடக்கியது:
இரண்டு அணிகள் வழக்கமாக 11 முதல் 18 வரையிலான வீரர்களைக் கொண்டிருக்கின்றன; சில வீரர்கள் மட்டும் கொண்டவை(ஒரு அணியில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர்)வேறுபட்ட அணிகளும் பிரபலமாக இருக்கின்றன
போட்டியை விளையாடுவதற்கென்று தெளிவாக வரையறுக்கப்பட்டப் பகுதி;
களத்தில் எதிரணியின் முனைக்குப் பந்தை நகர்த்திச் சென்று கோல் பகுதி அல்லது எல்லைக் கோடு வழியாக கோல்கள் அல்லது புள்ளிகளைப் பெறுதல் ;
வீரகள் பந்தை இரண்டு கோல்கம்பங்கள் இடையே தள்ளுவதன் விளைவாக கோல்கள் அல்லது புள்ளிகள் பெறப்படுகின்றன
கோல் அல்லது எல்லைக் கோடானது எதிரணியின் மூலம் தடுக்கப்படும் ;
வீரர்கள் உதைத்தல், கொண்டு செல்லுதல் அல்லது பந்தைக் கைமாற்றுதல்-போன்ற நெறிமுறையைப் சார்ந்து பந்தை நகர்த்தக் கோரப்படுகின்றனர்; மேலும்
வீரர்கள் அவர்களின் உடலை மட்டுமே பயன்படுத்தி பந்தை நகர்த்த வேண்டும்.
பெரும்பாலான நெறிமுறைகளில், வீரர்களின் ஆப்சைடு நகர்வை கட்டுப்படுத்துகின்ற விதிகள் உள்ளன, மேலும் வீரர்கள் கண்டிப்பாக கோல்கம்பங்களுக்கிடையே உள்ள கிராஸ்பாரின் கீழே அல்லது அதன் ஊடே பந்தைச் செலுத்தி கோலைப் பெறவேண்டும். பல கால்பந்து நெறிமுறைகளுக்குப் பொதுவான பிற அம்சங்களில் உள்ளடங்கியவை: புள்ளிகள் பெரும்பாலும் வீரர்கள் பந்தை கோல் எல்லைக்கோட்டிற்கு கொண்டுசெல்வதன் மூலம் பெறப்படுகின்றது; மேலும் வீரர்கள் மார்க் எடுத்த பின்னர் அல்லது பேர் கேட்ச் செய்த பின்னர் அவர்கள் ப்ரீ கிக் கைப் பெறுகின்றனர்.
பண்டைய காலம் தொட்டு, உலகம் முழுவதும் மக்கள் பந்தை உதைத்தல் அல்லது கொண்டு செல்லுதல் போன்ற செயல்பாடுகளைக் கொண்டு விளையாடி இருக்கின்றனர். இருந்தாலும் கால்பந்தின் பெரும்பாலான நவீன நெறிமுறைகள் அவற்றின் பிறப்பிடமான இங்கிலாந்தில் தோன்றியவை.
மால்வேர் புரோக்கிராம்கள் : அன்றிலிருந்து இன்று வரை
அண்மையில் அருமையான ஓர் இணைய தளம் ஒன்றைப் பார்த்தேன். நம் கம்ப்யூட்டரையும் நம்மையும் பயமுறுத்தும் பாதுகாப்பு குறித்து நம்மை அப்டேட் செய்திடும் வகையில் அந்த தளம் செயல்படுவதனைக் கண்டு கொண்டேன்.
InternationalMalwareThreatCenter என அழைக்கப்படுகிறது. இது இணையச் செயல்பாட்டினை மானிட்டர் செய்திடும் ஒரு தளமாக இயங்குகிறது. இதில் கம்ப்யூட்டரை அவ்வப்போது அச்சுறுத்தும் மால்வேர் புரோகிராம்களைப் பற்றி விலாவாரியாகக் கூறுகிறது.
ஒவ்வொரு மோசமான மால்வேர் புரோகிராமும் எப்போது வந்தது; எந்த அளவில் மோசமானது; அதனை எதிர்க்கும் பணியினை யார் யார் மேற்கொண்டுள்ளார்கள்; அதனைத் தவிர்க்க என்ன செய்திடலாம் என்பது போன்ற தகவல்களை சரியான புள்ளி விபரங்களுடன் தருகிறது. எனவே ஏதேனும் ஒரு மால்வேர் குறித்து நீங்கள் சந்தேகப்பட்டு அது குறித்த தகவல்கள் வேண்டும் என்றால் உடனே இந்த தளத்தினை அணுகலாம். அந்த மால்வேர் புரோகிராமின் பெயரைக் குறிப்பிட்டு அது எங்கிருந்து வருகிறது என்ற தெளிவான தகவலைத் தருகிறது.
அத்துடன் குறிப்பிட்ட மால்வேர் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டருக்குள் நெருங்கவிடாமல் இருக்க அது வரும் ஐ.பி. முகவரியினைத் தந்து அந்த முகவரியிலிருந்து எது வந்தாலும் அனுமதிக்காமல் செட் செய்திடும்படி கூறுகிறது. பிஷ்ஷிங் மற்றும் வேறு வகைகளில் உங்கள் கம்ப்யூட்டருக்குள் வரும் புரோகிராம்களை அனுப்புவோரின் பொதுவா ன டொமைன் பெயரையும் குறிப்பிடுகிறது.
இப்போது உலா வந்து கொண்டிருக்கும் மால்வேர் புரோகிராம்களைக் குறிப்பிட்டி இவற்றிற்கு எதிரான ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர்களை யார் தயாரித்து வழங்குகிறார்கள் என்ற தகவலும் இங்கு கிடைக்கிறது. இதனை அறிந்து கொண்டு அத்தகைய தளங்களுக்குச் செல்லாமல் இருக்கலாம் இல்லையா!
எனவே தங்கள் கம்ப்யூட்டர் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த தளம் அரிய தகவல்களைத் தரும் தளமாக உள்ளது.தடுக்கிறோமோ இல்லையோ கெடுதல் விளைவிப்பவர்கள் குறித்து அறிந்து கொள்வது நல்லதுதானே.
Thursday, July 8, 2010
பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி
முதலில் சிறந்த பாதுகாப்பான Anti-virus உங்கள் கணிப்பொறியில் நிறுவிக்கொள்ளுங்கள் , வாரம் இருமுறை உங்கள் கணினியை scan செய்யுங்கள்.
விண்டோஸ் பயன்படுத்துவதை விட Linux OS (UBUNDU,SUSE,MANDRIVA) நிறுவிக்கொள்ளுங்கள் வைரஸ் பாதிப்பை பெருமளவில் தவிர்க்கலாம் அல்லது இரண்டையும்கணினியில் நிறுவி இணையதள பயன்பாட்டுக்கு Linux பயன்படுத்தலாம்.
பெரும்பாலான வைரஸ் கள் விண்டோசை குறிவைத்து உருவக்கபடுவதே இதற்க்கு காரணம்.Linux ஸை வைரஸ் அவ்வளவு எளிதில் பாதிக்காது. அப்படி பதித்தாலும் எளிதில் அகற்றிவிடலாம்.
கணினியில் Internet Explorer இருந்தாலும் கூடுதலாக ஒரு Firefox அல்லது Google crome Browser நிறுவிக்கொள்ளுங்கள் ஏனெனில் மேற்கூறிய காரணம் இதற்கும் பொருந்தும்.
இணையதள முகவரியை டைப் செய்யும்போது கவனமாக செய்யுங்கள் ஏனென்றால் பிரபல தளத்தின் முகவரியில் ஓரிரு எழுத்துக்கள் மட்டும் மாற்றி வைத்திருப்பார்கள் அவ்வாறு செல்லும்போது வைரஸ் பதிப்பை உண்டக்கிவிடுவார்கள்.
கேம்ஸ் டவுன்லோட் செய்யும்போது மிகுந்த கவனம் தேவை ,பாதுகாப்பான (Brothers soft,cnet) போன்ற இணைய தளங்களில் மட்டும் Download செய்யுங்கள் , பெரும்பாலான இணையதளங்கள் இலவசம் என்ற பெயரில் வைரஸ் இணைத்து விடுவார்கள், மேற்கூறிய தளங்களில் இவை நிகழ்வதில்லை.
POP UP விளம்பரங்கள் Click here என்று வந்தால் அவற்றை கிளிக் செய்யவேண்டாம் .
புது software ,games போன்றவற்றை டவுன்லோட் செய்யும் முன் அவற்றின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள் , குறிப்பாக இன்ஸ்டால் செய்யும் போது Agreement எவ்வளவு பெரியதாக இருந்தாலும் முழுவதும் படித்துவிட்டு instaal செய்யுங்கள்.
Community Websites செல்லும்போது மிகுந்த கவனமாக இருங்கள் தற்ப்போது அவற்றில் இருந்துதான் மிக அபாயகரமான வைரஸ்கள் வருகின்றன .
இணையத்தளத்தில் Social Engineering Techniques எனப்படும் இணையதள உபயோகிப்பாளர்களின் weakness ஆபாச படங்கள், கண்கவரும் படங்கள், illegal copy of softwares,flashanimations, love ,sex,success contents போன்றவற்றை அதிகம் விரும்புவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப வைரஸ்களை உருவாக்கி அத்துடன் இணைத்து விடுகின்றனர் .இதுதான் தற்போதைய வைரஸ் பரப்பும் புதிய தொழில்நுட்பம் .
இவற்றை தெரிந்து இணையத்தளத்தில் பாதுகாப்பாக கணினியை பயன்படுத்தலாம் .
Wednesday, July 7, 2010
இந்த உலகக் கோப்பையில் கோல்டன் ஷூவை வெல்வது ஜெர்மனியின் மிரோஸ்லேவ் க்ளோஸா அல்லது ஸ்பெயினின் டேவிட் வில்லாவா என்ற எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
டேவிட் வில்லா 5 கோல்களுடனும், க்ளோஸ் 4 கோல்களுடனும் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். இதேபோல் ஜெர்மனியின் மற்றொரு வீரர் தாமஸ் முல்லரும் 4 கோல்கள் அடித்துள்ளார். அரைஇறுதியில் முல்லர் விளையாட மாட்டார். மற்ற இரு வீரர்களும் போட்டி போட்டுக்கொண்டு கோல் அடிக்க முயற்சிப்பார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
Tuesday, July 6, 2010
தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக இலங்கை சாதனை!
உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது.இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது .
இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் பதிந்து கொள்ள இதன் மூலம் எமக்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இதற்கான அனுமதியை 'அய்கன்" (ICANN) வழங்கியதை அடுத்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று 28 ஆம் திகதி கல்கிசை ஹோட்டலில் இடம்பெற்றது.
'அய்கன்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers நிறுவனம் இணையத்தள முகவரிகளைப் பதிவுசெய்து பாதுகாக்கும் இலாபகரமற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மரினா டெல் ரே (Marina Del Rey) நகரத்தை தலைமைப் பீடமாக கொண்ட நிறுவனமாகும்.
'இலங்கை" மற்றும் 'லங்கா" முதலான இணையத்தள முகவரியை பெற்றுக் கொள்வதாயின் www.nic.lk என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.
இந் நடைமுறையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும் இந் நடைமுறையை தற்போது தேசியளவிலேயே பாவிக்க முடியும் எனவும், இன்னும் சில காலத்திற்கு பிறகு சர்வதேச ரீதியில் பாவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஏற்கனவே இணையத்தள முகவரியைப் பதிந்து கொண்டவர்கள் புதிய முறையினை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட புதிய நடைமுறையால் தமது சொந்த மொழியில் இலகுவாக இணையத்தளத்தை எவரும் பயன்படுத்த முடியும்.
மருதமடுத் திருப்பதியின் சரித்திரச் சுருக்கம்
யாழ்ப்பாணத்தில் சங்கிலி அரசன் செங்கோல் செலுத்திவந்த காலத்திலேயே (கி. பி. 1519-1561) மன்னார்வாசிகள் கததோலிக்கு சமயத்தின் மட்டில் சார்புகாண்பித்தார்கள். போர்த்துக்கேயர் இலங்கையில் ஆதிக்கஞ் செலுத்தத் தொடங்கிய காலத்தில் மன்னார் ஓர் விhபாரத் துறைமுகமாகத் தலையெடுக்கத் தொடங்கியது. முத்துக்குளிக்குந் தலமான படியாலும் அது உண்மையாகவே வியாபாரப் பிரயாணத் துறைமுகமென்று தனிப் பெருமை பெற்றிருந்தது.
தென் இந்தியாவில் மலபார் கரையிலுள்ள சனங்களை அர்ச். பிரான்சீஸ்கு சவேரியார் சத்தியவேதத்திற்கு மனந்திருப்பியசெய்தி மன்னார் வாசிகளிடையே பரம்பியது. இவர்களின் வாஞ்சையான வேண்டுதற்கிசைந்து, சத்தியமறையைப் போதிப்பதற்காக வண. பிரான்சீஸ்கு சேவியர்சுவாமியார் மன்னாருக்கு அனுபப்பட்டார். மன்னார்ப்பிரதேசம் வேதவாக்கியத்தை விதைப்பதற்கு ஏற்ற செழிப்பான பூமியாக அவர் கண்டார். பிரான்சீஸ்கு சேவியர் சுவாமியாரால் வெகு சீக்கிரத்தில் மன்னார் முழுவதும் சத்தியவேதத்தைத் தழுவிக்கொண்டது. புதிதாய்வந்த வேதம் மன்னாரிலே மாத்திரமல்ல அதன் சுற்றுக்கிராமங்களிலும் பரம்ப மருதமடு மாதாவின் புராதன தலமாகிய மாந்தையும் புராதன கத்தோலிக்க கிராமமாய் மாறியது. போர்த்துக்கேயருடைய உதவியுடன் மாந்தைக்கிறீஸ்தவர்கள் செபமாலைமாதாவின் பேரால் ஒரு பெரிய கோவிலைக் கட்டினார்கள். மன்னாருக்கு அண்மையிலிருந்த பட்டிண் என்ற கிராமத்திலுள்ள அறுநூறு எழுநூறு தொகையான ஆண் பெண் பாலர்களைச் சத்தியவேதத்தைத் தழுவியதற்காக சங்கிலிஇராசா வதைத்துக்கொன்றது. மாத்திரமல்ல, வேதத்தைப் போதித்த வண. பிரான்சீஸ்கு சேவியர் சுவாமியாரையும் வாளுக்கு இரையாக்கினான். அதையறிந்த மாந்தைவாசிகள் தங்கள் மாதா கோவிலை மிகுந்த கவலையுடன் காத்துவந்தார்கள். சங்கிலியனின் இந்தக் கொடுங்கோன்மைக்காக இந்தியாவின் போர்த்துக்கேயத் தேசாதிபதியான தொம் கொன்ஸ்தந்தீன்தெ பிரகான்ஸா யாழ்ப்பாணக் குடாநாட்டில் பழிவாங்கினான். டச்சுக்காரர் வருமளவும் எளிமை மிகுந்த மாந்தைக் கத்தோலிக்க மக்கள் செபமாலைமாதாவின் பாதுகாவலில் தங்கள் வேதத்தை அனுசரித்து வந்தார்கள்.
1656-ம் ஆண்டளவில் போர்த்துக்கேயருடைய ஆட்சி இலங்கையில் முற்றாக அகற்றுப்போக வேத விரோதிகளான ஒல்லாந்தர் இங்கே ஆதிக்கஞ்செலுத்தத் தொடங்கினார். அவர்கள் கத்தோலிக்க கோவில்களை டச்சுக்காரத் துருப்புகளின் மண்டபங்கள், கிட்டங்கிகள் முதலியனவாக மாற்றியதையும் சத்திய வேத அனுசரணைகளைத் தடுக்க அவர்கள் எடுத்துவரும் முயற்சிகளையுமறிந்த மாந்தைக் கிறீஸ்தவர்கள் தங்கள் செபமாலைமாதா சுரூபத்தைப் பாதுகாப்பான வேறோரிடத்துக்குக் கொண்டுபோக வேணுமென்று கவலைகொள்ள லானார்கள். ஆனால் அவர்கள் மனந் தளர்ந்துபோயிருந்தார்கள். அவர்களுக்கு ஞானத்தைரித்தையும் உற்சாகத்தையுமூட்டக் குருமார் இருக்கவில்லை. சத்துராதியின் கையிற் சுரூபம் அகப்படாமற் பாதுகாக்கக் கண்டியரசனின் இராச்சியம் வாய்ப்பாக இருக்குமென்றெண்ணி ஊரவரின் சம்மதத்துடன் இருபது பத்தியுள்ள குடும்பங்கள் சுரூபத்தை எடுத்துக்கொண்டு 1670ல் கண்டி இராச்சியத்துக்குப் புறப்பட்டார்கள்.
சத்துருவுக்குப் பயந்து அந்தச் சிறுகூட்டம் மாதாவின் பாதுகாவலில் அங்குமிங்குமாக வன்னிக் காட்டில் அலைந்துதிரிந்தது. இராமேசுரத்திலிருந்து கண்டிக்குப்போகும் இராசபாதையில் பழைய குளமொன்றிருந்தது. அதற்கண்iமிலிருந்த கிராமத்துக்குத் தெய்வா தீனமாக வந்துசேர்ந்தது அந்தக்கூட்டம். அந்தக் கிராமத்தின் பெயர் மருதமடு. அங்கே கண்டியரசனுக்குச் சொந்தமான திறைசேரியுமிருந்தது. அங்கு வந்துசேர்ந்த மாந்தைக் கிறீஸ்தவர்கள் மாதாவுக்குத் தோத்திரம்பண்ணி, வேதத்தை அங்கு முதல்முறை நாட்டும் தினமாக அதனைச் செபத்தில் செலவழித்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் வேதகலாபனை காட்டாக்கினி போற் பரந்தது. மருதமடுவோ அமைதி நிறைந்திருந்தது. அங்குவந்து சேர்ந்த சொற்பகத்தோலிக்கரின் குன்றாத விசுவாசமும் காந்தலான பத்தியும், மாதாவின் மனதை எவ்வளவாகக் குளிர்ப்பண்ணியதென்றால், அலவுடைய சலுகையினால் அவர்கள் சேமமே பாதுகாக்கப்பட்டார்கள். டச்சுக்காரரின் கொடுவினையயினின்று விலகிக்கொள்ளுவான் வேண்டி 700 வேதக்காரர் ஏழு குருமாருடன் குடா நாட்டைவிட்டு தாய்நாட்டிலிருந்த பூநகரியைக்கடந்து வன்னிக்காட்டில் அமைக்கலம் புகுந்தார்கள். பயப் பிராந்திகொண்டவர்களாப் பலவிடங்களிலும் அலைந்து திரிந்து அவர்களும் புதுமையாக மருதமடுவை அடைந்தார்கள். ஆ! என்ன ஆச்சரியம். அடர்ந்த காட்டில் என்ன அதிசயமான சந்திப்பு. என்ன ஒருமனமான பயணம். வந்தவர்களும் மாதாவின் பாதநிழலில் மடுவையே தங்கள் அடைக்கலபுரமாக்கிக் கொண்டார்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்துவந்த கிறீஸ்தவர்களுள் போர்த்துக்கேய தளகர்த்தனின் மகளான எலேனாவுமிருந்தாள். அவளிடம் விளங்கிய பத்தியையும் சீவிய முன் மாதிரிகையையும் கண்டவர்கள் அவளை "அர்ச்சியசிட்டவன்", அல்லது சந்தலேனா என்று அழைப்பார்கள். காலகதில் மடுவில் திறைசேரி உத்தியோகமாயிருந்தவனைச் சந்தனோ மணந்துகொண்டாள். அவ்விடத்தில் மாதாவின் பேரால் முதற்கோவில் கட்டுவித்த பாக்கியமும் அவளுக்கேயுரியது. அந்தத் தருமத்திற்காக அவளுடைய ஞாபகத்தை நிலைபரப்படுத்த எண்ணிய கிறீஸ்தவர்கள் மடுப்பதிக்கு இன்றும் வழங்கிவரும் பெயர்களுள் ஒன்றான'சிலேன மருதமடு" வென்ற புகழ்நாமத்தையுமிட்டார்கள்.
சிலேன மருதமடுவில் கத்தோலிக்கரின் தொகை அதிகரித்திருந்தபோதிலும், மாதாவுக்குத் தோத்திரமாக வருடாந்த உற்சவமொன்றை நடத்த அவர்களுடைய வருவாய் இடங்கொடுக்கவில்லை. டச்சுக்காரர் குருமாரை விரட்டித்திரிந்தபடியால் 30 வருடங்காளக (1655-1686) ஞான விசாரணை செய்யக் குருமாரில்லாமல் கிறீஸ்தவர்கள் கைவிடப்பட்டவர்களானார்கள். ஆசாரத்துக்குரிய யோசேவாஸ் முனிவரும் அவருடைய தியான சம்பிராதாயக் குருமாரும் இலங்கையில் வந்திறங்கியதிலிருந்து சத்தியவேதம் திரும்பவும் தழைக்கத் தொடங்கியது. குருமார் தொகை அதிகரிக்க இலங்கைத்தீவின் பல பாகங்களிலும் "மீசாம்"கள் தொடங்கப்பட்டன.
1695-ம் ஆண்டில் இலங்கைக்குவந்த பெத்று பெறாவு சுவாமியார் மருதமடுவையும், மாதோட்டப் பகுதியிலுள்ள மந்தையையும் பராமித்தார். 1706-ல் மாதோட்டக் கிராமங்களை சிலேன மருதமடுவை மத்தியதானமாகக்கொண்ட ஒரு "மீசாம்" பெறாவுசுவாமியாரின் மேற்பார்வையிலிருந்து வந்தது, தியானசம்பிரதாயக் குருமார் காலத்திலே மேற்சொன்ன சுவாமியார் மடுவிலே முதற்கோவிலைக் கட்ட, அவருக்குப்பின்வந்த வண. அந்தோனியோ தெ தவோறாசுவாமியார் அதைப்பெருப்பித்தும் திருத்தியும் வைத்தார். இவர் அதிக பலன்நிறைந்த பல வருஷங்களாக மிஷனறியாயிருந்து காலஞ்சென்றவர் "அவர் அநேக ஆண்டுகளும் பலன்களும் நிறைந்தவராய்த் தம்முடைய பிரயாசைக்கோர் ஞாபக சின்னமாகக் கட்டிய பல கோவில்களில் விசேஷமாக சிலேன மடுக்கோவிலையும் கட்டிவிட்டு மரணத்திரையுள் மறையலானார்". ஆங்கிலேயர் இலங்கைக்குவந்ததும் வேதகலாபனை ஓய்ந்து இடையூறில்லாமல் வேதத்தை அனுசரிக்கக் கத்தோலிக்கருக்கு விடுதலை கிடைத்த ஓர் நவ யுகம் உதயமாயிற்று. கோவைச்சுவாமிமாரின் மேற்பார்வையில் செழித்துவந்த மடுக்கோவிலுக்கு "நடு உழவில் நந்தை அறுந்தது" போன்ற இடையூறு நேர்ந்தது. 1834ல் தியான சம்பிரதாயச் சபை குலைக்கப்பட்டது.
கோவைக்குருமார் காலத்தில் மன்னாரிலும் அதைச் சூழவர இருந்த இடங்களிலுமிருந்த கிறீஸ்தவர்கள் மருதமடுவுக்கு யாத்திரையாய்ச் சென்றார்களென்று காணக்கிடக்கிறது. மன்னார்க் கோட்டில் சக்கிடுத்தாராய் இருந்த பறங்கியரான ஸ்ரீ மொயிஸ் என்பவர் கோயிலின் இடவசதியீனத்தைக்கண்டு விசுவாசிகளின் உபயோகத்துக்காக 1823-ல் மண்சுவர் எழுப்பி ஓர் குடிசைக்கோயிலைக் கட்டிவிட்டார். அக்குடிசைக்கோவில் 8 அடி உயரமுள்ள 3 சுவர்கள் உடையதாய் குதிரை லாடன்போன்ற வடிவத்தில் அரைகுறையாய்க் கட்டியிருந்தது. அதன்நடுவில் ஒரு மேசையிருந்தது. அது பீடமாகப் பாவிக்கப்பட்டது. கோயிலின் பின்புறத்தில் குருமார் தங்குவதற்குச் சிறு அறை ஒன்றும் இருந்தது. "டச்சுக்காரருடைய கோபாவேசத்தினின்று காக்கப்பட்டதும் மாந்தையில் போர்த்துக்கீசருடைய கோயிலின் நடுபிடமாக மன்னாரைச் சேர்ந்தவரும் பத்தியுள்ளபறங்கியருமான ஸ்ரீ மொயிஸ் என்பவர் கட்டிய ஆலயம் அதுவே." பிற்காலம் பாரியவோர் கட்டிடமாக எழும்பிவிருந்ததும் அகில இலங்கைக் கத்தோலிக்க சமூகத்திற்குப் பிரதானவோர் புண்ணியN~த்திரமாக விளங்கவிருந்ததும் அந்த எட்டடி உயரமுள்ள மண்கோவிலே என்பது ஆச்சரியத்துக்குரியது. தேவ செயல்களெல்லாம் அதிசயமானவையன்றோ.
கோவைக் குருமார்சபை குலைக்கப்பட றோமையிலுள்ள திருச்சபை அதிகாரிகள் இலங்கைத் திருச் சபைக்கு வேறு ஏற்பாடுகள் செய்தார்கள். பெற்றக்கினி ஆண்டவரின் தலைமையில் 1846-ல் வடபாக விக்காரியம் ஆக்கப்பட்டது, திருச்சபையைவிட்டுப் பிரிந்துபோன பிரிவினைச்சபையார் 1849-ல் மடுக்கோயிலுக்கு உரிமைபாராட்டத் தொடங்கியபடியால் யாழ்ப்பாண மேற்றிராசனத்திலுள்ள அமலோற்பவ மரியநாயகிசபை என்றறியப்படுகிற "ஓபிளேற்" சுவாமிமாருக்கும் பிரிவனைச்சபையாருக்குமிடையில் 1851 தொடக்கம் வழக்கு நடந்துகொண்டிருந்தது. அக்காலத்தில் மடுவில் மீசாம்பார்த்துவந்த வண. ஜே. புசான்சுவாமியாரைப் பிரிவினைச்சபையாரிற் சிலர் அடித்து வெளியே துரத்தியபோதிலும் அவர் கோவிலை விட்டகல மறுத்துவிட்டார். 1874-ஆம் ஆண்டு ஆவணிமாசம் 26-ந்தேதி பிரிவினைக்காரர் சார்பாக மன்னார்க்கோடு தீர்ப்புச்சொல்ல அத்தீர்ப்புக்கு மாறாக விசுப்பாண்டவர் கொழும்புச் சுப்பிறீங்கோட்டுக்கு (அப்பீல்) மனுப்பண்ணியிருந்தார். இருபத்திநான்கு வருடங்காளக வழக்கு நடந்தது. கடைசியாக யாழ்ப்பாண விக்கார் அப்போஸ்தொலிக்குவே அதற்கு உரிமைக்காரர் என்று 1875-ம் ...... ஆனி 24-ந்தேதி சுப்பிறீங்கோடு தீர்த்தது.
பெற்றக்கினி ஆண்டவருக்குப்பின்வந்த செமேரியா மேற்றிராணியார் கோயிலுக்கு அதிகந் திருத் தஞ்செய்ய முடியவில்லை. செமேரியா ஆண்டவருக்குப் பின் 1868-ல் பொஞ்ஜீன் ஆண்டவர் மேற்றிராணியாராய் வந்தபின் 1870-ல் மடுயாத்திரை தொடங்கியது. 1872-ல் புதுமேற்றிராணியார் மடுவிற்குமுதற் தரிசனை தந்தபோது அது இருந்த கேவலநிலையைக் கண்டார். மண்கோவிலைக்கண்டவேளை அவர்மனம் சோகம் கொண்டது. "அந்தப் பேர்போனதும் இழிகோலம் நிறைந்தலுமான புண்ணிய N~த்திரத்தைக் கண்டதும் என் உள்ளம் துக்கத்தில் மூழு;கியது. ஒரு ஓபிளேற் மேற்றிராணியார் தம்மாசில்லாத் தாயாருடைய வீட்டை அப்படிப்பட்ட கேவல நிலையிலிருக்க விட்டாரென்ற பழிச்சொல்லிற்கு இடங்கொடேன் என்று அன்றே அங்கே கபதஞ்செய்தேன். அதி பரிசுத்த இராச கன்னிகைக்கு அந்த வன்னிக்காட்டில் ஒரு அலங்காரமான கோவில் நிருமாணிக்க வேணு மென்று தீர்மானித்தேன்" என்ற பொஞஜீன் ஆண்டவர் சொன்னாராம்.
உடனே மேற்றிராணியார் புதுக்கோவிலுக்கு முதற்கல்லு ஆசீர்வதித்து, இப்போது நாங்கள் காணும் கோவில்கட்டிடத்திற்கு 1872-ம் ஆண்டு ஆவணிமாசம் 8-ந் திகதி அத்திவாரக் கல்லு நாட்டினார். அவருக்குப்பின் வந்த மெலிசன் ஆண்டவர் அந்த வேலையைத் தொடர்ந்து நடத்தினார். அதிகப்பற்றான கட்டிடவேலை "யூலன்" விசுப்பாண்டவர் மேற்பார்வையிலேயே நடந்தது. வண, பூலாங்சுவாமியார் கோவிலுக்கு விசித்திரமான முகப்பு அமைத்தார். பரிபாலனசுவாமிமாரின் அயராத முயற்சியின் பலனே, நாம் இப்பொழுது காணும் எழில் நிறைந்த தேவாலயம். 1870-ம் வருஷம் பொஞ்ஜீன் விசுப்பாண்டவர் மடுக்கோவில் வருடாந்த உற்சவம் ஆடிமாசம் 2ந் திகதியில் நடைபெறவேண்டுமென ஏற்பாடு செய்தார். "அந்நாட் தொடக்கம் இந்த உற்சவம் ஆயிரம் பதினாயிரக் கணக்கான தொழும்பர்களை வருடாவருடம் கவர்ந்துகொண்டே வருகிறது." நான்கு வருடங்களின் பின் அவர் (மேற்றிராணியார்) பிள்ளைக்குரிய தம் வணக்கத்திற்கும் அன்பிற்கும் அடையாளமாக பொன்னிற் செதுக்கி நவரத்தினங்கள் பதித்து சித்திர வேலைப்பாடுசெய்த மணிமகுடமொன்றை மடுமாதாவின் அற்புதமான சுரூபத்தின் சிரசில் புனைந்தார்.
பாலம்பிட்டியிற் சுட்ட செங்கற்களைக் கொண்டு புவாசோ சுவாமியார் குருமனையையும் சமையற்சாலையையும் கட்டினார். வண. கூர்டொன் சுவாமியார் கோவில் அத்திவாரத்தைப் பாலம்பிட்டிpலிருந்து கொண்டுவந்த கருங்கல்லாற் கட்டினார். வண. கூர்டொன் சுவாமியார் கோவில் அத்திவாரத்தைப் பாலம்பிட்டிpலிருந்து கொண்டுவந்த கருங்கல்லாற் கட்டினார். முடுவில் முதற்கிணறு வெட்டியவரும் அவரே. இரண்டாவது கிணறு வண. குறெற் சுவாமிhரால் வெட்டப்பட்டது. நற்குணைச் சிற்றாலயத்தையும் அத்துடன் சேர்ந்த அறைகளையும் வண. மசியே சுவாமியார் கட்டிவிட்டார். அவரே மூன்றாவது கிணறு வெட்டியவர். "மசியே" சுவாமியார் தொடக்கிவிட்ட பீடஸ்தானக் கட்டிடப்பகுதியைச் சிலதிருத்தங்களுடன் வண. மேரி சுவாமியார் செய்துமுடித்தார். கோயிற் கூரைக்கு வேண்டியவைகளைச் சேகரித்ததும் முன்றில் அத்திவாரக் கட்டிடத்தைத் தொடங்கியதும் வண. டினோ சுவாமிhர். கட்டிடவேலைக்குத் தேவையான செங்கற்களை அங்கேயே சுடுவித்துக் கோவிலின் அதிகப்பற்றான வேலையை வண. அந்தோனிச் சுவாமியார் முடித்தார். இலங்கையிலுள்ள கோவில் தூண்களில் ஆக உயரமான இந்தக் கோவில் தூண்கள் வவுனியா, திரிகோணமலைப் பாதையிலுள்ள மணியர்குளத்திலிருந்து கொண்டுவரப்பட்டன. மற்றச் சகலவேலைகளுக்கும் பொதுவில் பொறுப்பாளியாய் இருந்தவர் வண. ஒலிவடசுவாமியாரே. குருமாருக்கு அறைகளும் மற்றும் வசதிகளும் செய்து யாத்திரிகருக்குச் சிலவீடுகளைக் கட்டியவரும் இவர்தான். யாத்திரிகர் வசதிக்காகக் கட்டியிருக்கும் மற்றக் குடிசைகளும் வீகளும் அவருக்குப்பின் வந்த குருமாருடைய வேலை. மடு நந்தாவனத்திற்கு எழிலைக் கொடுப்பதும், தற்போது யாத்திரிகர் குளிப்பதற்கு வசதியாயிருப்பதுமான தடாகம் வண. ஒலிவ்சுவாமியாரின் நீர்ப்பாசன நிர்மாண நிபுணத்துவத்திற்கு ஓர் சான்றென்றால் மிகையாகாது.
மடுப்பதியில் உள்ள லூர்துகெபியும் விசேஷ கவர்ச்சிக்குரியது. குளிப்பதற்கென்று சிமென்றால் அமைத்திருக்கும் தண்ணீர்த்தொட்டிகள் குறிப்பிடத்தக்கவை. வண. உக்தின், வண. புறோகான்சுவாமிமார் யாத்திரிகளின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் பொறுப்புடையவர்கள். கோவிலில் இருந்த மரப்பீடத்திற்குப் பதிலாக 1944-இல் பளிங்குக்கற் பீடம் அமைத்ததும், 1947-இல் மின்சார இயந்திரமொன்று நிறுவி வீதிகள், வீடுகள்தோறும் வெளிச்சந் தந்து தவியதும் வண. புறோகான் சுவாமியாரின் பெரும் முயற்சியின் பயனாம். இலங்கையில் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கும் சிறுதொகையான கோயில்களும் மடுக்கோயிலுமொன்று, அதை 1944-ம் ஆண்டு ஆனிமாசம் 25-ந் திகதி கியோமார் விசுப்பாண்டவர் அபிஷேகஞ் செய்துவைத்தார்.
தற்போது மேற்றிராணியாராயிருக்கும் மகாவந் கியோமார் ஆண்டவரின் மேற்பார்வையில் மடுக்ஷேத்திரம் திருப்திகரமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆண்டவர் அவர்கள் 1924-ம் ஆண்டு பங்குனிமாசம் 9-ந்திகதி மேற்றிராணித்துவ அபிஷேகம்பெற்றுத் தமது கன்னிக் கைங்கிரியமாக மடுக்கோவிலின் சதாப்த விழாவை அவ்வருடம் ஆடிமீ 2-ந்திகதி கொண்டாடினார். திருவிழா முன்னில்லாத பக்தி ஆடம்பர வைபவங்களுடன் நடந்தது மாத்திரமின்று, யாத்திரிகரின் தொகையும் முந்திய வருடங்களிலும் பார்க்க அதிகரித்திருந்தது. ஆண்டவர்தாமே பார்க்க அதிகரித்திருந்தது. ஆண்டவர்தாமே சிறப்பாய் ஒழுங்குபடுத்திய "மகா மனந்திரும்புதலியக்க" மென்னும் மடுமாதாவின் மகா சுற்றுப்பிரகாரத்தை நாம் எந்நாளுமே மறக்கமுடியாது. சரித்திரத்தில் முதல்முறையாக மடுமாதாவின்சுரூபம் 1948-ம் ஆண்டு பங்குனித்திங்கள் 15-இல் திருப்பதியைவிட்டுப் புறப்பட்டு வைகாசி 3-ந்திகதி வரையும் யாழ்ப்பாண உத்தியானம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.
மாதா சுரூபம் போன இடமெங்கும் மங்களமான வரவேற்பு; இருகரம் கூப்பி இறைஞ்சிய வரவேற்பு; அந்நாட்களில் உளுத்து, வாடிவதங்கியிருந்த உள்ளங்களெல்லாம் புத்துயிர்பெற்றன். குளிர்ந்து போயிருந்த இருதயங்களெல்லாம் ஞானக் கொழுந்து விட்டெரியத் தொடங்கின. வருஷக் கணக்காய்க் கோயில், கொம்பிசமில்லாமல் அலைவாய்ப்பட்ட ஆத்துமாக்களை மாதா தேடிவந்து மனந்திருப்பிய மேரையை வருணிக்க வாக்குண்டோ? பிதாவின் வீட்டிற்குத் திரும்பிய ஊதாரிகள் எத்தனை? இரவிரவாய்த் தீர்ந்த ஞானப்பிணிகள் எத்தனை? பாவப்பழி ஒழித்து பரமன்பதம் பணியப் படித்த மனம் எத்தனை? தேவ ஊழியத்தில் தீவரமுயற்சி எடுக்கத் தைரியங்கொண்ட இளம் இதயங்களெத்தனை? பரமன் திருப்பலியில் பலன் நிறையப் பங்குகொள்ளப்பயின்ற பக்தர் எத்தனை? செபத்துடன் தபஞ் செறிந்த செபமாலைகள் எத்தனை? மாதாவின்மாலை ஓதுகையில் ஞானமதுவுண்ட மதுகரங்கள் எத்தனை? இந்த நன்மை யெல்லாவற்றையும் செய்தது மடுமாதாவின் திருச்செயலே.
இலங்கைக் கத்தோலிக்கர் தேவதாயாரில் உருக்கமான பத்தியுள்ளவர்கள். அப்பத்தியின் உச்சநிலையை மருதமடுவில் நடக்கும் பல திருவிழாக்காலங்களில் காணலாம். மடு யாத்திரை ஒரு ஞானஒடுக்கம். யாத்திரி
கர் தம் பாவங்களுக்கு விமோசனம்தேடி, பச்சாத்தாபத்துடன் பாவசங்கீர்த் தனஞ்செய்து சற்பிரசாதம் உட்கொண்டு அடிக்கடி செபஞ்செய்து தேவ நற்கருணை சந்தித்தும் செபமாலையைத் தியானித்தும் வருவார்கள். பாவிகளின் தஞ்சம் மடுமாதா: பச்சாத்தாபிகளின் அடைக்கலமும் அவ. சஞ்சலப்படுவோருக்கும் ஆறுதல் தந்து, அண்டிவந்தோருக்கு அபயங்கொடுத்து அனைவரைம் பரமன் அடிசேர்க்கும் பரம நாயகி. இது சம்பந்தமாக உத்தரவாதம் பெற்ற நூலாசியர் பின்வருமாறு எழுதுகிறார். மாதா பக்திக்கு மடைதிறந்துவிடுவது மடுப்பதி. மேற்றிராணியார் மாதாவிற் கொண்டிருந்த பக்தி அநேகரை அப்பதிக்கு வரத் தூண்டியது. "வன்னிக்காட்டின் புதுமை" என்னும் சிறப்புநாமம் பெற்ற அப்பாரி கோவிலை அதிக செலவிட்டுக்கட்டி அலங்கரித்தார். தாமே நின்று திருநாட்களை நடத்தி அவைகளிற் தாமும் பங்குபற்றி நோவினைவேளைகளில் பிரசங்கமுஞ் செய்வார். வருடந்தோறும் இந்தத் தலத்திற்கு வரும் யாத்திரிகரின் தொகை இளம்பிறைபோல் வளர்ந்துகொண்டே இருந்தது. ஆடி 2-ந் திகதி சிவவேளை நூறாயிரம் சனம் வரையிலும் வருவார்கள். கத்தோலிக்கர் மாத்திரமல்ல பல பிரிவுபட்ட புறொட்டெஸ் தாந்தரும், இந்துக்கள், புத்தர், சோனகரும் பைசாச கணங்களையும் இயற்கைப் பொருட்களையும் வணங்குவோரும் அருகே இருந்து தம் வித்தியாசங்களை மறந்து, மாதாவை வாயார வாழ்த்தவர்கள், பல சாகியத்து ஆண் பெண் பாலரும் மடுமாதாவிற்குத் தோத்திரஞ் செலுத்தியபின் திருநாள்முடிவில் அநேக வருடங்களாக நடத்தப்படும் 'விருந்து' உண்பார்கள். ஆயிரக் கணக்கானோர் பாவசங்கீர்த்தனஞ்செய்து மாதாவின் பாத நிழலில் முற்றாக மனந்திரும்பி விடுவார்கள். பிறசமயத்தவர்களும் சத்தியவேதத்தின் உண்மையை உணரத் தொடங்குவார்கள். இதற்கென்று ஆயத்தமாய் வந்தவர்கள் மடுவிலேயே ஞானத்தீட்சைபெற்று சத்தியமறையில் சேருவார்கள்.
ஆடி 2-ந்திகதி நடக்கும் பிரமோற்சவதினத்தில் வந்து குவியும் சனக்கும்பலின் நெருக்கடியைக் குறைக்கும் நோக்கத்துடன் வேறுபல தினங்களிலும் திருவிழா நடத்த ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது. பங்குனிமாதம் நான்கு திருவிழாக்களும் வைகாசி, ஆவணி, ஐப்பசி, மாதங்களில் முறையே ஒவ்வொரு திருவிழாவும் நடக்கின்றன. வருடா வருடம் பங்குனிமாதம் 11-ந்திகதி ஒரு திருநாள் நடத்தும்படி 1943-இல் உத்தரவுதந்ததற்காக சலாபத்தைச் சேர்ந்த பிட்டிப்பண்ணைவீதிக் கிறீஸ்தவர்கள் ஆசாரத்துக்குரிய கியோமார் ஆண்டவர். அவர்களுக்கும் வண. ஜே. புறோகான் சுவாமியார் அவர்களுக்கும் விசேஷித்த கடப்பாடுடையவர்கள். இத்திருநாளைச் சிறப்பலங்காரத்துடன் கொண்டாட இக்கிறீஸ்தவர்கள் காட்டும் உற்சாகம் போற்றற்பாலது.
மடுப்பதி பிரபலியம்பெற்றோங்குவது யாழ்ப்பாண மேற்றிராசன ஓபிளேற் சுவாமிமாரின் அயரா உழைப்பின் பயனேயாகும். வருஷந்தோறும் யாத்திரிகரின் தொகை அதிகாரித்துக்கொண்டே வருகிறது. யாத்திரிகரின் வசதிகளை விசாரித்து உணவுப்பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதுமல்லாமல் அவர்களுக்குக் காட்டப்படும் அன்பாதரவும் மழைவேளைகளில் செய்யும் உதவிகளும் மடுப்பதியின் மறக்க இயலாத நாட்கள். இப்புனித புண்ணிய தலத்தைப்பற்றி வாசகநேயர் உய்த்துணரும்படி சொற்பகாலத்திற்குமுன் வெளிவந்த நூலிலிருந்து சிலவற்றை ஈண்டு தருகிறோம்.
"கோவைக் குருமார் தேவதாயாரின் பேரால் இலங்கையில் அடியிட்ட கோவில்கள், புண்ணியதலங்கள் யாவற்றிலும் மாதோட்டப்பகுதியிலுள்ள மடு ஆலயத்தைப்போல் கீர்த்திவாய்ந்தது வேறில்லை. அக்குருமார் காலத்திலேயே மருதமடு புதுமைநிறைந்த தலமாகப் பெயர்பெற்றிருந்தது. மடுக்கோயில் எல்லைக்குள் எந்த விஷப்பாம்பு தீண்டினாலும் வினை நேராது என்பது மக்களின் பொது நம்பிக்கையாய் இருந்து கொண்டே வருகிறது. முன்னிருந்த குருமார் நன்றாய்ப் பரப்பியிருந்த மாதா பக்தியை மாசில்லா மரியாயின் பரித்தியாகிகள் சென்ற இடமெல்லாம் செழித்து வளரச் செய்யும் முயற்சியே மடுப்பதியையும் பிரபலிய யாத்திரைத் தலமாக ஓங்கப் பண்ணினது. மருதமடுவைச் சார்ந்த அம்முயற்சியின் கொடுமுடியான வைபவம் இலங்கையில் கத்தோலிக்க கொண்டாட்டத்தில் முன்னொருபோதும் கண்டிராத சனத்திரளின் சமுகத்தில் புதுமை வாய்ந்த செபமாலை மாதாவின் திருச்சுரூபத்திற்கு 1924-ம் ஆண்டு ஆடிமாசம் 2-ந்திகதி முடிசூட்டியதேயாம்.
Monday, July 5, 2010
தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு
தன் எடையை விட அதிக எடையுள்ள பொருட்களை, அசையாமல் எறும்புகள் சுமந்து செல்வது எப்படி என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். உழைப்புக்கும், சேமிப்புக்கும் உதாரணமாக கூறப்படும் உயிரினம் எறும்பு. இது தன் உடல் எடையைவிட பல மடங்கு அதிக எடையை சுமந்து செல்லும் தனிச்சிறப்பு கொண்டது.இதுகுறித்து, பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
அதாவது, ஒரு புல் துண்டையும், பேப்பரில் இலைபோன்று செய்து அதை தோடம்பழச்சாறில் ஊற வைத்து எறும்பை எடுத்துச் செல்ல செய்தனர். பின், அது செல்லும் தூரத்தையும், விதத்தையும் ஆய்வு செய்தனர்.
முதலில், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் செங்குத்தான மற்றும் சரிவான பொருட்களின் மீது ஏறி, இறங்கச் செய்தனர்.
பின், பக்கவாட்டில் ஊர்ந்து போகச்செய்து ஆய்வு செய்தனர். அதில், எறும்புகள் தன்னைவிட அதிக எடையுள்ள பொருட்களை அசையாமல் கொண்டு செல்வதற்கு, அதன் கழுத்தும், தலையும் உதவுகின்றன என்பது தெரியவந்தது.
எறும்பின் கழுத்தும் தலையும் இணையும் இடத்தில், "ஸ்பிரிங்' போன்ற அமைப்பு உள்ளது. இதன் மூலம், தன்னை விட நீண்ட, அதிக எடைகொண்ட பொருட்களை எறும்புகள் சுமக்கும் போது, எந்த கோணத்தில் அவை சென்றாலும், அதற்கேற்ற வகையில், தனது தலையின் நிலையை மாற்றி அமைத்துக்கொள்கிறது. இதனால், அது வைத்திருக்கும் பொருட்களில் நிலைமாறாமலும், கீழே விழாமலும் இருக்கிறது. இரையை சுமக்கும் போதும் இதே முறையைத்தான் எறும்புகள் கையõளுகின்றன. இதுதொடர்பாக, ஆய்வாளர்கள் கூறுகையில், எறும்புகளின் கழுத்து இணைப்பின் மூலம் மிக எளிதான தனது சுமைகளை கோணம் மாற்றி வைத்துக்கொண்டு எளிதாக பயணம் செய்கின்றன என்று தெரிவித்துள்ளனர்.
112 ஆண்டுகளுக்கு முன் ஏரியில் மூழ்கிய கப்பல்
ஆர்.எம்.எஸ்., டைட்டானிக் என்ற பிரிட்டிஷ் பதிவு பெற்ற உல்லாசக் கப்பல், 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி 2200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது, கடலில் மூழ்கியது. இதில் 1500 பயணிகள் இறந்தனர். 700 பேர் உயிர் தப்பினர். வரலாற்றில் ஒரு சோக முத்திரையை பதித்த இந்த சம்பவம் திரைப்படமாக உருவாகி, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பல ஆண்டுகளுக்கு பின், டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கிடைத்தன. அவை டைட்டானிக் கப்பலின் நினைவுச் சின்னங்களாக மாறிவிட்டன.
இதேபோல், கடந்த 112 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஏரியில் மூழ்கிப்போன ஒரு நீராவிக் கப்பல் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள, மில்வாகி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், 1991ஆம் ஆண்டு ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 300 அடி ஆழத்தில் ஒரு மர்மமான பொருளில் அவர்களின் வலை சிக்கியது. இது, பல ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய ஏதாவது ஒரு கப்பலின் பாகங்களாக இருக்கும் என்று கருதப்பட்டது. இதையடுத்து, மில்வாகிக்கு தெற்கே 40 மைல் தொலைவில், கடந்த 20 ஆண்டுகளாக மெக்சிகன் ஏரியில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் ஏராளமான ஆய்வாளர்கள் பங்கு கொண்டனர். ஆழ்கடலில் ஆய்வு செய்யும் தொழில் நுட்பத்துடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், மிகப்பெரிய நீராவிக் கப்பலான எல்.ஆர்.டோடி, நூறு ஆண்டுகளுக்கு முன்பு புயலில் சிக்கி நீரில் மூழ்கிய சம்பவம் மீண்டும் வெளி உலகிற்கு தெரியவந்தது. ஜிட்கா ஹனகோவா தலைமையில் நீரில் மூழ்கும் குழுவிடம் இந்த நீராவிக் கப்பல் குறித்து ஆய்வு செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. காணாமல் போன கப்பல்களில் மிகப்பெரியது இது என இக்குழுவினர் கண்டுபிடித்தனர்.
Sunday, July 4, 2010
டோனிக்கும் சாக்ஷி ராவத்துக்கும் நிச்சயதார்த்தம்
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோனிக்கும், அவரது நீண்ட கால பள்ளித்தோழியான சாக்ஷி ராவத்துக்கும் டேராடூனில் உள்ள ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி. இவருக்கும், இவரது பள்ளித்தோழி சாக்ஷி ராவத்துக்கும் இடையே டேராடூனில் உள்ள ஹோட்டல் பாகீரதியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவ்விழாவில் டோனியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய கிரிக்கெட் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
சாக்ஷி ராவத், ராஞ்சி ஷாமிலியில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் படித்தவர். டோனியும் இதே பள்ளியில் படித்தவர் தான். பள்ளி காலத்தில் இருந்தே இருவரும் நண்பர்கள். டோனி மற்றும் சாக்ஷி ஆகியோரின் தந்தைகள் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். சாக்ஷியின் தந்தை ஓய்வு பெற்ற பின் அவர்களது குடும்பம் டேராடூனுக்கு இடம்பெயர்ந்துவிட்டது. இருவருக்கும் இடையே திருமணத் திகதி நிச்சயிக்கப்பட்டு விட்டதா என டோனியின் நண்பரிடம் விசாரித்த போது, அது முடிவாகவில்லை என்றும், அநேகமாக ஆஸி. தொடருக்குப்பின் இருக்கலாம் என அவர் தெரிவித்தார். இதேவேளை அவசரமாக கல்யாணம் இன்று (நேற்று) நடக்குமென இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
டோனியின் நிச்சயதார்த்தம் குறித்த செய்தியறிந்து அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கால்பந்து ரசிகரான டோனியின் நிச்சயதார்த்தம், உலக கோப்பை கால்பந்து நடந்து வரும் வேளையில் நடந்திருப்பது மென்மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.
IE - 8 ஐப் பாவிக்குமாறு மைக்ரோசொப்ட் ஆலோசனை _
மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது இணையத்தள பிரவுஸர் தொகுப்பான ஐஇ8 (Internet Explorer IE8) இற்கு பாவனையாளர்களை மாற்றுமாறு ஆலோசனை வழங்கி வருகிறது.
வீடு மற்றும் அலுவலக இணையத்தள பாவனையாளர்களில் அனேகர் இன்னமும் IE6 பிரவுஸர் தொகுப்பினையே பாவித்து வருவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
IE6 பிரவுஸரை பாவிப்பதன் காரணமாக பல பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன. இதனால் இன்டர்நெட் கணக்குகள் அத்துமீறி 'ஹெக்கிங்' செய்யப்பட்டது, தகவல்கள் திருடப்பட்டன சீனாவும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இதன் விளைவால் கூகுள் உட்பட 20 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அவுஸ்திரேலியா கிளை தலைமை அதிகாரி ஸ்டுவட் ஸ்ரத்டீ (Stuart Strathdee) கருத்து தெரிவிக்கையில்,
" IE6 பிரவுஸர் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டு 9 வருடங்களாகிவிட்டன. இதன் காலம் முடிவடைந்து விட்டது . இன்டர்நெட் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் நாம் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றோம்" என்கின்றார்.
.IE6 பிரவுஸரில் security patches எனப்படும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. ஆனால் IE8 பிரவுஸர் தொகுப்பு சிறந்த இணைய பாதுகாப்பினை வழங்குகிறது.
2010 ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், 25 சதவீதமானோர் IE8 பிரவுஸரையே பாவிப்பதாகவும்,18 சதவீதமானோர் IE6 பிரவுஸரைப் பாவிப்பதாகவும் , 13 சதவீதமானோர் IE7 பாவிப்பதாகவும் குறிப்பிடுகின்றன என நெட் மர்க்கட் ஷெயார் தெரிவிக்கின்றது.
அபாயங்களுடன் வரும் இலங்கை அகதிகளை மீண்டும் அபாயத்துக்குள் தள்ள முடியாது-ஆஸி பிரதமர்
இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தப்பி, பாரிய அபாயகரமான பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா வரும் அவர்களை, மீண்டும் அதே அபாயத்துக்குள் தள்ளுவதில் நியாயமில்லை என அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் யூலியா கில்லர்ட் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை அகதிகள் தொடர்பிலான தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு, அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜுலியா அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிகளுக்கு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ள விமர்சனங்கள் தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அகதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமல், எதிர்ப்பு தெரிவித்து சுலோகங்களை தூக்குவது ஏற்புடையதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இது எதிர்கட்சிகள் தமது அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளே தவிர, உண்மையான கரிசனைக்கானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் வாரம் தாம் இலங்கை அதிகள் தொடர்பான தீர்வினை முன்வைக்க விருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். இதற்கிடையில் பசுபிக் கொள்கை அடிப்படையில், அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிப்படகுகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுமா? என அவரிடம் கேள்வி எழுப்பப்ட்டது. இதற்கு பதில் வழங்கிய அவர், பாரிய அபாயகரமான பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா வரும் அவர்களை, மீண்டும் அதே அபாயத்துக்குள் தள்ளுவதில் நியாயமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தப்பி, அபாயகரமான முறையில் அவுஸ்திரேலியா வருகின்றவர்கள் தொடர்பில் கரிசனை காட்ட வேண்டியதும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Labels:
ஆஸி பிரதமர்
Saturday, July 3, 2010
மொபைல் தொழிநுட்பத்தின் வளர்ச்சி...
மொபைல் போனின் பரிமாணங்கள் இன்று அனைத்து வகைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.
ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம்.
1920இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது.
1947ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.
1954காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது.
1970பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது.
1973மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி.
1979ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது.
1983
டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.
1984விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள்.
1989மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.
1990
2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது.
1991அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின.
1992மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது.
1996மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
1997எரிக்சன் ஆர்380 அறிமுகமானது.
2000இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது.
2001வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது.
2002
டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது.
2004மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது.
2006மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது.
2007ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு.
2010எப்படி இருக்கும் மொபைல் போன் வளர்ச்சி? சிம் கார்டுகளை உடலில் பொருத்தி எண்ணங்களை அப்படியே இன்னொரு போனுக்கு அனுப்பும் தொழில் நுட்பம் வந்தாலும் வரலாம்.
Labels:
மொபைல் போன்
தொல்காப்பியம்
தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும், இலக்கண நூல் ஆகும். இதை எழுதியவர் தொல்காப்பியர் எனப்படுகின்றார். மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும்.
இது தோன்றிய காலம் பற்றிய எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கணிப்பு எதுவும் இது வரை இல்லை. பல்வேறு காலகட்டங்களில் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு விதமாக இதன் காலத்தைக் கணிக்க முயன்றுள்ளார்கள். பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500 க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர். எனினும் இது கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாகும்.
தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
எழுத்ததிகாரம்
நூல் மரபு
மொழி மரபு
பிறப்பியல்
புனரியல்
தொகை மரபு
உருபியல்
உயிர் மாயங்கியல்
புள்ளி மயங்கியல்
குற்றியலுகரப் புணரியல்
சொல்லதிகாரம்
கிளவியாக்கம்
வேற்றுமை இயல்
வேற்றுமை மயங்கியல்
விளி மரபு
பெயரியல்
வினை இயல்
இடை இயல்
உரி இயல்
எச்சவியல்
Labels:
தொல்காப்பியம்
தொல்காப்பியத்தில் காதல்
தொல்காப்பியர் களவியல், கற்பியல் இரண்டு பகுதிகளிலும் காதலைப்பற்றி மிகுதியாக கூறுகிறார். இரண்டிலும் உணர்ச்சிவழி செயல்பாடுகளைக் கூறுகிறார். எனினும் அச்செயல்பாடுகள் அறிவு வழி செயல்பாடுகளாக மாறிவிடுவதையும் காட்டிச் செல்கிறார். அதனால் தொல்காப்பியர் காலத்துக் காதலர்கள் எல்லாம் உணர்வழி அகற்றி, அறிவு வழி காதலித்தனர் என்றால் அது நகைப்பிற்கு இடமாகும். உணர்வுவழி காதலர்களாகும் ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு பின்னும் காதலர்களாக இருக்க அறிவுவழி செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தையே களவியல், கற்பியல் ஆகிய பகுதிகளில் கூறுகிறார் என்பது கட்டுரையாளரின் கருத்து. கம்பன் கொடுப்பாரும், கொள்வாரும் இன்றி எல்லா வளமும் எல்லாரும் பெற்று வாழவேண்டும் எனத் தான் விரும்பிய சமுதாயத்தை அயோத்தி சமுதாயமாகப் படைத்துக்காட்டினான் என்பர். அதுபோல காதலர்கள் களவிலும், கற்பிலும் செயல்படவேண்டிய தன் விருப்பங்கள் தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் படைத்துக்காட்டுகின்றார்.
தெய்வம் கூட்டவோ, அல்லது விதி வழியாகவோ ஆணும், பெண்ணும் எதிர்பாராத விதமாகச் சந்தித்துக் கொள்கின்றனர். இச்சந்திப்பு அவர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பார்க்கின்ற எல்லா ஆண் அல்லது பெண்ணால் தாக்கம் ஏற்படுவதாகக் குறிக்கப்படவில்லை. பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, உறவு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு ஆகிய பத்து ஆளுமைக்குணங்கள் ஒன்றுபட்டிருக்கும். ஆணும் பெண்ணும் எதிர்படும்பொழுது இத்தாக்கம் ஏற்பட்டுப் பின் அது குறிப்பால் ஒருவர் எண்ணத்தை ஒருவர் அறிந்தபின் காதலாக மாறுவது நலம் என்பது தொல்காப்பியர் கருத்து. தமிழ்ச் சமுதாயம் தொல்காப்பியர் காலத்திலேயே ஆணாதிக்கச் சமுதாயமாக இருந்துள்ளது. எனவே மேற்கூறிய பத்து ஆளுமைகள் சிலவற்றில் மிக்கோனாக ஆண் மகன் இருப்பினும் எனக் கூறுகிறார். இன்றைய வாழ்விலும் இவ் ஆளுமைகள் ஒத்து இருக்குமேயானால் இவ்வாழ்க்கையில் உரசல்கள் தவிர்க்கப்படுவது உறுதி. எனினும், இக்குணங்கள் ஒத்தில்லாத தம்பதியர் ஒத்து வாழ்வதையும், இன்றைய நாளில் காண முடிகிறது. தொல்காப்பியர் காதல் வயப்படும் ஆணும், பெண்ணும் அறிவுவழி செல்ல வேண்டும் என்பதை அவர்களின் முதல் சந்திப்பிலேயே எச்சரித்து விடுகிறார். மேற்கூறிய பத்து ஆளுமைகள் பெரும்பான்மை ஒத்து இல்லாவிட்டால் அது பிரிவுக்கு வழி வகுக்கும் என்பதே அவர் கருத்து என அறியப்படுகிறது.
சந்தித்த ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்ட பின்பு ஒருவர் விருப்பத்தை இன்னொருவர் புரிந்து கொள்ளுதல் அவசியம். ஆனால் இதற்கு வாய் வார்த்தைகள் தேவையில்லை. கண் என்னும் ஊடகத்தின் வாயிலாகக் கருத்தை சொல்பவர் கேட்போரிடம் எவ்வகைத் தடங்கலுமின்றி தெரிவித்திட முடியும் என்கின்றார் தொல்காப்பியர்.
நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக்
கூட்டி யுரைக்கும் குறிப்புரையாகும்
பத்துக் குணங்களின் ஒன்றாகிய அறிவால் ஒத்த ஆண் பெண்ணால் தான் பிறர் அறியாமல், வாய்மொழி இல்லாமல் உள்ளக் கருத்தை ஒருவருக்கொருவர் தெளிவாக உணர்த்த முடியும் என்பது தொல்காப்பியர் எண்ணம். ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான பத்து ஆளுமைக் குணங்களைக் கூறிய தொல்காப்பியர் பெருமையும், உரனும் ஆணுக்குத் தேவையான கூடுதல் ஆளுமைப் பண்புகளாகக் குறிப்பிடுகிறார்.
பெருமையும் உரனும் ஆடுஉ மேன
அறிவு, ஆற்றல், புகழ், கொடை, ஆராய்தல், நல்லொழுக்கம், நட்பு, பழி பாவம் அஞ்சுதல் ஆகியவை பெருமைக்கும், பிடிப்பான கொள்கை, கலங்காத துணிவு உரனுக்கும் பொருளாகக் கூறப்படுகிறது.
ஆண்மகன் இல்லறத் தலைவனாகிற அதே நேரத்தில் சமுதாய நடவடிக்கைகளிலும் பங்கு கொள்கிறான். இல்லறம், சமுதாயம் இரண்டிலும் அறிவும், நற்குணங்களும், கொள்கைப் பிடிப்பும் முடிவெடுக்கும் துணிச்சலும் அவசியம் என்பதைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அதேபோல் வீட்டில் மட்டும் தலைமை ஏற்கும் பெண்ணுக்கு அவர்கால வழக்கப்படி சில ஆளுமைப் பண்புகளைக் குறிப்பிடுகிறார்.
அச்சமும், நாணமும், மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்குரிய
என்கிறார். இக்காலப் பார்வைப்படி இச்சொற்கள் பெண்ணடிமைத்தனத்தின் செயல்பாடு என்றாலும், அக்காலச் சமுதாய அமைப்பை நமக்குக் கிடைத்திருக்கக் கூடிய இலக்சியச் சான்றுகள் கொண்டு எண்ணிப் பார்க்க வேண்டும். மன்னர்கள் ஆட்சியின் கீழ் பரப்பரப்பற்ற - போட்டிகள் குறைந்த தேவைகள் குறைந்த - வேளாண்மை சிறுதொழில்கள் மட்டுமே உள்ள மனிதப் பண்புகள் நிறைந்த - மாறுபட்ட சிந்தனைகள் இல்லாத சமுதாயமாக இருந்த காரணங்களினால் பெண்களின் பங்களிப்பு சமுதாயத்திற்கு தேவைப்படாத காலமாய் இருந்தது. அதனால் பெண்ணின் வாழ்க்கை இல்லறத்திற்குள்ளேயே நிறைவு பெற்றது. அதனால் தொல்காப்பியர் காலப்பெண் அச்சம், நாணம், மடம் நிறைந்தவளாகவே இருந்திருப்பாள். ஆயினும் அறிவு நிரம்பப்பட்டவள் என்பதை உணர்த்துகிறார் தொல்காப்பியர்.
காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும் தனித்திருந்த தங்கள் காதலை வெளிப்படுத்துகின்ற தருணத்தில் பெண் தன்னுடைய வேட்கையைத் தன் காதலனிடம் கூறமாட்டாள். காதலியின் அக உணர்வைப் புரிந்து கொண்ட காதலன் அவளிடம் கேட்கும் பொழுது கூட அதைத் தன்வார்த்தைகளால் கூறாது புதுமண்கலத்தில் ஊற்றப்பட்ட நீரானது புறத்தே கசிவது போல தன் குறிப்பால் வெளிப்படுத்துவாள் என்கின்றார். தனித்திருக்கும் வேளையிலும் தன் புலன்களை அடக்கும் ஆளுமைப் பண்புகொண்ட அறிவுசால் பெண்ணின் தலைமை இல்லறத்தை இனிது நடத்தும் என்பதை தொல்காப்பியர் புலப்படுத்துகிறார். காதல் வயப்பட்ட பெண் வரம்புக் கடக்காதவளாக இருத்தல் நலம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். காதலனும், காதலியும் பழகும் காலத்தில் யாருக்கும் தெரியாமல் சந்திக்கும் இடத்தைப் பெண்தான் தீர்மானிக்கிறாள். காரணம் தனக்குப் பாதுகாப்பாகவும், தங்கள் காதல் குறிப்பிட்ட காலம் வரை பிறர்க்குத் தெரியாமல் இருப்பதே நலம் என்று கருதியும் காதலி சந்திக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். ஆண் மகன் வரம்பு மீறினால் அதுகூட அவளுக்கு அறமில்லை என்ற காரணமும் இப்பொறுப்பை அவள் ஏற்கச் செய்கிறது.
அவன் வரம்பிறத்தல் அறந்தனக்கின்மையின்
களம் சுட்டும் கிளவி கிளவியதாகும்
தான் செலற்குரிய வழியாகலான
என களவுக் காலத்திலும் பெண்உணர்வுவழி ஒதுக்கி அறிவுவழிச் செல்ல வேண்டுமென விரும்புகிறார். திருமணத்திற்கு பின் பெண்ணுக்கு சில கூடுதல் பொறுப்புகள் அவசியம் என்கின்றார்.
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
என்கின்றார். அறிவு முதலான பத்து ஆளுமைக்களைக் கொண்ட பெண்ணால்தான் எப்படிப்பட்டச் சூழலிலும் ஆணின் அன்பு மாறுபட்டு சென்ற காலத்தும், கற்பு, காமம், ஒழுக்கம், மென்மை, பொறை, நிறை, விருந்து, சுற்றம் காக்க முடியும் என்பது காப்பியர் கருத்து. பெண்ணுக்கு மேலும் சில கூடுதல் பண்புகளைக் கூறுகிறார்.
தாய்போல் கழறித் தழீஇக் கோடல்
ஆய்மனைக்கிழத்திக்கும் உரித்தென மொழிப
அதுபோல் தலைவனின் புகழுக்கு இழுக்கு வராமல் நடந்து கொள்ளுதலையும் வலியுறுத்துகிறார். கணவன் தன்னோடு ஒத்த சிறப்புகள் அல்லது மிக்க சிறப்புகள் கொண்டவனாயிருப்பினும் பெண் அவனிடம் தன்னைப் புகழ்ந்து கூறுதலைத் தவிர்த்து விடுதல் அவசியம் என்கின்றார்.
தற்புகழ் கிழவி கிழவன்முன் கிளத்தல்
எத்திறத்தானும் கிழத்திக்கில்லை
இவ்விடத்தில் தொல்காப்பியர் ஆணின் உளவியலை ஆண் வழி நின்று விளக்குகிறார். மிக்க அன்புடையவனாக இருப்பினும் மனைவி உண்மையிலேயே தன்னைவிட உயர்ந்தவளாக இருந்தாலும் ஆண்மனம் அதை ஏற்றுக் கொள்ளாது. மாறாக, எதிர்ச்செயல்களை விளைவிக்கும் என்பதை சமுதாயம் வழி நின்று விளக்குகிறார். இச்சமுதாயம் பெண்ணைவிட ஆணே உயர்ந்தவன் என்ற கருத்துடையது. அக்கருத்தே ஆண்மகன் எண்ணத்திலும் ஊறியிருக்கும். எனவே குடும்பத்தில் இலக்கணம் குறைய வாய்ப்புள்ளது என்பதால் அதைத் தவிர்க்க அறிவுறுத்துகிறார்.
தொல்காப்பியர் ஆணாதிக்கச் சமுதாயத்தைச் சார்ந்தவர். அக்காலச் சமுதாயத்தில் தோன்றிய ஆண் பெண்ணுக்கு இடையே ஏற்படும் காதலைக் கூறுகிறார். இல்லறத்தில் கணவன் மனைவியாக நுழையப்போகும் களவியல் காதலன் காதலிக்குத் தேவையான பத்து ஆளுமைப் பண்புகளைக் குறிப்பிட்டு களவு கற்பு இருகாலத்திலும் உணர்ச்சிவழிக் காதலை அறிவுவழிச் செலுத்தினால் நல்ல இல்லறத் தலைவர்களாக முடியும் என்கின்றார். பொதுவான ஆளுமைப் பண்புகளைக் குறிப்பிட்டு இருவருக்கும் தேவையான தனிச்சிறப்பு ஆளுமைப் பண்புகளையும் குறிப்பிட்டு பெண்ணுக்கு தேவையான கூடுதல் பொறுப்புகளையும் சுட்டிக்காட்டுகிறார். அவர் குறிப்பிட்ட குணநலன்களை உடைய ஆணும், பெண்ணும் வீட்டுக்கும் நாட்டுக்கும் தேவை என்னும் தன் விருப்பத்தை களவியல், கற்பியல் ஆண் பெண் மீது ஏற்றிக் கூறுகிறார். இப்பண்புகளை உடையோரின் காதல் வாழ்க்கை சிறக்கும் என்பது தொல்காப்பியரின் கருத்து.
நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்
Labels:
தொல்காப்பியம்
தமிழுக்கும் எழுத்து -> பேச்சு வந்தாச்சு
கண்தெரியாத பலரும் Text to Speech எனும் தொழில்நுட்பம் மூலம் இணையப் பக்கங்களை வாசிப்பதுண்டு.
இந்த தொழில்நுட்பம் இத்தனை காலமும் தமிழுக்கு கிடைக்கவில்லை. இன்று இந்த தொழில்நுட்பம் தமிழுக்கும் வந்துவிட்டது .
http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/ என்ற முகவரிக்குச் சென்று அங்கே தமிழில் தட்டச்சு செய்து “Submit” எனும் பொத்தானை அமுக்குங்கள். பின்னர் வரும் சாரளத்தில் வரும் தொடுப்பை சொடுக்கி பேச்சைக் கேளுங்கள். நீங்கள் தட்டச்சு செய்ய எழுத்துக்களை ஒரு ஆண் பேசிக் காட்டுவார்.
Labels:
தமிழுக்கும் எழுத்து
40 மொழிகளிலான இணையத்தள உலாவி கூகுளால் ஆரம்பித்து வைப்பு
மைக்ரோசொப்ட் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்பவற்றிடமிருந்தான சவால்களை எதிர்கொள்ளும் வகையிலேயே மேற்படி உலாவியை "கூகுள்' ஆரம்பித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
40 மொழிகளிலான இந்த வெப்தள உலாவியை சுமார் 100க்கு மேற்பட்ட நாடுகளில் இலவசமாக பதிவிறக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உலாவியானது இணையத்தளத்தை விரைவுபடுத்துவதுடன் அடுத்த தலைமுறைக்கான வரைபட மற்றும் பல்லூடக செயற்பாடுகளுக்கு களம் அமைத்துத் தருவதாக கூறப்படுகிறது